10.10.20- அத்தியாயம் : 123 : பொழுதுகண்டிரங்கல் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 10 அக்டோபர், 2020

10.10.20- அத்தியாயம் : 123 : பொழுதுகண்டிரங்கல்



பெ.தி.சுகுமார்.



10.10.20



<><><><><><><><><><><><><>

  " திருக்குறள் கவிதை "

   தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

         அதிகாரம் -- 123

  " பொழுது கண்டிரங்கல் "

 ●●●●●●●●●●‍●●●●

 <><><><><><><><><><><><><>


இரங்கல் கண்டிடும், 

மாலைப் பொழுதினில்;

இரங்கல் தோன்றிடும்,

தலைவனைப் பிரிந்ததில்!

இரங்கந்தி இரங்கும்,

பெண்களின் காதலுக்கு;

இரங்கிக் கிரங்கிட,

இறுதியாய் நேருதே!


நேரும் மருட்சியின்,

மாற்றமது தோற்றமாய்;

நேருமுன் துணையும்,

எமையொத்து வாட்டுது!

நேருது சலிப்பும்,

ஏமாற்றும் கொடுமையாய்!

நேருது பனியும், 

படரும் இடரெனவே!


இடரும் மாலையில்,

தலைவன் இல்லாமை;

இடரும் கொலைக்களப்,

பகைவரை ஒக்கும்!

இடராக் காலைக்கு,

என்பங்கு எதுவாகுது!

இடரும் மாலைக்கு,

என்பங்கு இல்லையே!


இல்லையது தெளிவு,

மலர்விழி மாலையில்!

இல்லையது இன்பம்,

படர்ந்தபோ தில்லையே!

இல்லாத்தயரக் காதல் 

நோயதும், விரிமலராய்;

இல்லையினாது 

காலையரும்பிப் , 

போதாகிமாலை மலராகுதே!


மலர்ந்து காலையில்,

இசைத்திட்ட குழலோசை;

மலராது மாலையில்,

தீயெனச் சுடுவதால்;

மலர்ந்த ஏக்கமும்,

தாக்கித் துளைத்து;

மலர்ந்த பிரிவை,

கொல்படையாய் வாட்டுதே!


வாட்டும் சந்திப்பு,

இல்லா மாலையின்;

வாட்டும் மயக்கம்,

ஊருலகும் கண்டிடுது!

வாட்டும் சேர்பொருள்,

சாருயிர் காதலினால்;

வாடுதையல் மெய்நலம் 

மாலையில் மாய்ந்திடுதே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages