விடுமுறை வியப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

விடுமுறை வியப்பு




விடுமுறை வியப்பு

................................... 

கோடை விடுமுறை

நெருங்கி வருகையில்/

விடுமுறை நாளும் நாடி வருகையில்

கோடி இன்பம் கொள்ளை

கொள்ளும்/

உறவினர் ஒன்றாய்க்

கூடி மகிழ்வோம்/

சுற்றுலா சென்று 

பலதும் அறிவோம்/

பலமொழி தேவை 

என்பதை உணர்வோம்/

பல்கலாச்சாரம் கண்டும் 

கொள்வோம்/

உலகின் படைப்பு 

விந்தை என்போம்/

புதுமைகள் எல்லாம் வியப்பாய் இருக்கும்/

மனித மனங்களில்

கற்பனை வளரும்/

கற்றலும் இல்லை 

மீட்டலும் இல்லை/

பள்ளியும் இல்லை 

பரீட்சையும்     இல்லை/

என்ன சொர்க்கம் 

மூளைக்கு விடுமுறை/

வீட்டில் ஆரவாரம் கூடிச்

செல்லும்/

நித்திரை கொண்டிட

அதிகாலை

ஆகிடும் /

விழித்து எழுந்திட

மதியமும் ஆகிடும்/

சமையல் அறையில்

சமையல் குறையும்/

காடுதனை வீடாய்க்

கொள்வோம்/

நெருப்பில் வாட்டி 

உணவை உண்போம்/

தரையே பாயாய்

மாறி விடுமே/

தரையில் படுத்து

 ஓய்வும் எடுப்போம்/

கூச்சல் போட்டு நீச்சல் அடிப்போம்/

களைத்து விழுந்து வீடு வருவோம்/

விடுமுறை வியப்பு என்பதை உணர்வோம்/


ஜமுனாமலர் இந்திரகுமார் 

சுவிற்சர்லாந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages