11.09.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
பொருட்பால் -- நட்பியல்
அதிகாரம்-- 94
" சூது "
●●●●●
<><><><><><><><><><><><><>
வெற்றி கிடைத்தாலும், விரும்பலாகாது சூதினை;
வெற்றியாய் இரையென்று,
விழுங்கிடும் தூண்டிலது;
வெற்றி பெறா
மீனாய்ச் சூதாகிடும்!
வெற்றி ஒன்றாய்,
நூறிழிக்கும் சூதாகுதே!
சூதாடி வாழ,
வழியில்லை நல்லபடி!
சூதாடுவான் உருளையம் உருட்டினால், ஓயாது!
சூதாடி உருண்டோடி,
அடைந்திடும், பகைவரை!
சூதாட்டம் சிறுமை பலசெய்து சீரழிக்குமே!
சீரழித்து வறுமையும், தந்திடும் சூதாட்டம்;
சீரழிக்கும் சூதாட்டக்
கருவியும் இடமும்;
சீரழிக்கும் செயலதுவும்,
இல்லாதவர் ஆக்கிடும்!
சீரழிக்கும் சூதாட்டம்
வேதனைக்கு உள்ளாக்குமே!
உள்ளாக்கும் சூதென்னும்,
மூதேவி சூழ்ந்திடின்;
உள்ளாக்கும் துன்பத்தை,
உண்ணக்கூட வழியின்றி!
உள்ளாக்கும் சூதினில்,
காலமதைக் கழித்திட்டால்;
உள்ளதந்த செல்வமும்,
பண்பதுவும் கெட்டிடுமே!
கெடுத்திடும் சூது, பொருளினை அழிக்கும்!
கெடுத்திட்டு அழித்துப்,
பொய்யாட வைக்கும்;
கெடுத்துப் பலவகைத்,
துன்பமும் கொடுக்கும்!
கெடுக்கும் உடைசெல்வம்,
ஊணொளி கல்வியற்றே!
அற்றடாத பற்றாம், சூதினைக் கொண்டால்;
அற்றாது போகும், அனைத்தும் அழிந்து;
அற்றிடும் நோவால், பற்றிடும் உயிராசையாய்;
அற்றிடும் பொருளால், பற்றிடும் சூதாசையே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக