20.09.20- வாடியமாலை - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

20.09.20- வாடியமாலை

 கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


20.09.20


வாடியமாலை( சிறுகதை)


ஒருநா புளியங்குடில இருந்து ஒருத்தரு அந்தகோவிலுக்கு சாமிகும்புட வந்துருந்தாரு. சாமி கும்புட்டு சுத்தி வாரப்ப இவரப்பாத்துட்டாரு

டேய் மாடசாமி தான நீன்னு கேட்டாரு. இவரு இல்லப்பா

என்பேரு அதுஇல்லன்னு வேகமாபோனாரு அவருவிடல

எனக்குத்தெரியும் நீமாடசாமிதான் இங்கயா இருக்கன்னு கேட்டவுன்ன

அவரு கண்ணு கலங்கிடுச்சு. ஆமா அந்த ஊருவேணாம்னுதான இங்க வந்தேன். நீ வந்து எல்லாத்தையும் ஞாபகப்படுத்தாத போயிறுன்னாரு அப்ப அவரு கண்ணு கலங்குச்சு..........

அந்தகோயில்ல அவருக்குப்பேரெல்லாம் கெடையாது ந்தா , யோவ், ஏய் பெருசு இப்புடித்தான் எல்லாரும் கூப்புடுவாக அவரு கிட்டத்தட்ட பத்துவருசம் அந்தக்கோவில்லதான் கெடக்காரு சாப்பாடு வேலை தூக்கம் எல்லாம் அங்குணக்குள்ளதான்.

ஒரு துணிமூட்டை மாதிரி வைச்சிருப்பாரு அதுக்குள்ள என்னா இருக்குன்னு ஆருக்கும் தெரியாது. அதை தூங்குபோதுதலைக்கி வைச்சிப்படுத்துக்குவாரு மத்தபடி அது கோயில்மூலையிலதான் கெடக்கும். காலைல 4மணிக்கி எந்திரிச்சிருவாரு

சாமியோட மண்டபங்கள்ல இருந்து வார மாலைகுப்பைகள்

சாப்புட்டுப்போடுற எலை இப்புடி பெரும்குப்பைசேந்துடும்

மொத்தகோயிலையும் கூட்டி அந்தக் குப்பய அள்ளி வெளிய குப்பத்தொட்டில போடுவாரு. அப்புறமா தண்ணிய ஊத்திகழுவிடுவாரு கோயில் சுத்தமா ஆயிடும். அப்புறமா குளிச்சிட்டு எல்லாசாமியையும் கும்புடுவாரு காலையில பூசைமுடிஞ்சப்புறம் பொங்கசோறு குடுப்பாக அதுதான் சாப்பாடு.

கோயிலுக்கு வாரவுக ஏதாவது காசுகுடுத்தா வாங்கிக்குவாரு. கோயில்ல இருந்து சம்பளமுன்னு எதுவும் அவருக்குக்கெடையாது. என்ன குடுத்தாலும் வாங்கிக்குவாரு

வெள்ளி,செவ்வா அப்புறம் விசேசநாளுகள்ல குப்ப குவிஞ்சிடும் அள்ளுறதுக்குள்ள அச்சுவிட்டுறும். ஆனாலும் சளைக்காம அள்ளிப்போடுவாரு. அதுக்கு தனியா காசெல்லாம் கெடையாது

அவருக்கு 88 வயசிருக்கும். அவரபாக்க ஆரும் வந்து பாக்கல

இந்த நேரத்துலதான் புளியங்குடிக்காரர் இவர அடையாளம் கண்டுபிடிச்சது

அப்ப அவரு சொன்னாரு இங்குணக்குள்ளதான் கெடக்கேன் எல்லாத்தையும் மறந்துட்டு

அப்புறமா ஏதாவது தகவல் வந்துச்சா. ந்னு கேட்டாரு

ஒன்னும் வரல,\நொந்துபோயி ஊரவிட்டு வந்துட்டேன்னாரு

இவரு இங்கவாரதுக்குமுன்னாடி புளியங்குடிலதான் இருந்தாரு அங்க கூலிவேல வெவசாயவேலை எல்லாம் பாத்துக்கிட்டு இருந்தாருஅங்கயும் இப்புடித்தான் என்ன வேல குடுத்தாலும் செய்வாருகுடுக்குறத வாங்கிக்குவாரு. அவருக்கு குடும்பம்னா ரெண்டு மகளுக அப்புறம் பொண்டாட்டிதான். இவரோட பொண்டாட்டி கொஞ்சம் வசதியான வீட்டுல இருந்துவந்தவுக. அவளுக்கு இவரோட பொழப்பு புடிக்கல

அதுநால அடிக்கடிசண்டதான். கெட்டபழக்கமெல்லாம் இவருக்குகெடையாது ஆனா சுதாரிப்பில்லாத மனுசன் புத்திசாலித்தனம் போதாதுன்றது அவளோட நெனப்பு. அதுநால திட்டிக்கிட்டே கெடப்பா இவரு காதுலபோட்டுக்க மாட்டாரு. அப்ப பக்கத்துல இருந்த ஒருத்தன் அடிக்கடி வந்துபேசிக்கிட்டு இருப்பான் அந்த அம்மாகிட்ட

ஒருநா அவளக்காணாம். அவ யாருகூடயோ ஓடிப்போயிட்டதா சொன்னாக இவரு நம்பல பொறந்த வீட்டுக்குத்தான் போயிருப்பான்னு அங்க போயிப்பாத்தாரு. அங்கயும் வரல. அப்புறம் அவ திரும்பி வரவே இல்ல என்ன ஆனான்னுதெரியல. எல்லாரும்சொன்னாக அவஓடிப்போயிட்டதா

இவருக்கு ஒண்ணும் புரியல அதுக்கப்புறம் ரெண்டுமகளையும் கஸ்டப்பட்டு வளத்தாரு பெரியவுகளானாக ஒருபொண்ண கைல இருந்த காசு கொஞ்சமா நகைபோட்டு கட்டிக்குடுத்தாரு அந்த ஊருல ஒருத்தரு ஒதவுனாரு. ரெண்டாவதுமக கொஞ்சம் அழகா இருப்பா. அவமேல இவரு அம்புட்டுப்பிரியம் வைச்சிருந்தாரு. செல்லமா வளத்தாரு அம்மா இல்லாதகொற தெரியாமப்பாத்துக்கிட்டாரு.

ஆனா அடிக்கடி கேப்பா அம்மா எங்கன்னு. இவரு சொல்லுவாரு செத்துப்போயிட்டான்னு

அவ நம்புனமாதியும் தெரியும் நம்பாதமாதிரியும்தெரியும். ஒருநா அவளையும் காணோம். இவருக்கு ஒண்ணும் புரியல. எல்லாரும் சொன்னாக . ஆத்தா மாதிரியே புள்ளயும் ஓடுகாலின்னு

இவரால தாங்கமுடியல. அழுக அழுகயா வந்துச்சு. கொஞ்சநாளு வீட்டுக்குள்ளயே கெடந்தாரு. சோறு ஆரு போடுவா . தற்கொலை செய்யலாம்னு முடிவெடுத்தாரு அதுக்கு தைரியம் வரல

ஒரு நா ராத்திரி கெளம்பிட்டாரு ஊரவிட்டு அங்க இங்க சுத்தித்தான் இங்க வந்து சேந்தாரு. இப்புடி இவரு வந்து எல்லாத்தையும் நாவகப்படுத்திட்டாரு.

அப்பப் புளியங்குடிக்காரரு கேட்டாரு உனக்குதகவல் தெரியுமா உன் ரெண்டாவது மக திரும்பி வந்து ஒன்னத்தேடுனதுன்னு கேட்டாரு

இவருக்குதூக்கிவாரிபோட்டது,. வந்துச்சா என்மகன்னுகேட்டாரு

ஆமா அவமாத்திரம் வரல ஒன்னோட பொண்டாட்டியும் வந்தான்னாரு

இவருக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு. பொலபொலன்னு கண்ணீர் கொட்டுச்சு

அப்ப அவருசொன்னாரு. ஒம்பொண்டாட்டி இப்ப பம்பாயில இருக்குதாம் அது கூடத்தான் ஒன்னோட ரெண்டாவதுமகளும் இருக்காம்

ஒன்னோ மககலியாணத்துக்குக்கூப்புடத்தான் வந்தாக தேடுனாக ஒன்னப்பத்திய தகவல் ஏதும் தெரியல

அப்பத்தான் ஒன் மகசொன்னா

அவளோட அம்மா குற்றாலத்துக்குக் குளிக்கவந்தவுக கூட வீட்டுவேலைக்கிநல்ல சம்பளம்தாரோம் அப்புறமா ஒங்க குடும்பத்தைகூட்டிட்டுவரலாம்னு சொல்லிக் கூப்புட்டுப்போயி வச்சிருந்ததையும் அப்புறமா கடுதாசிபோட்டதையும் அப்புறம் வந்து கூட்டிட்டுப்போனதையும் சொன்னா

அவுகளுக்கு புள்ளக ஆரும் கெடையாதாம் அதுனால கொஞ்ச சொத்தை ஒன்சம்சாரம் பேருலயும் மீதிய தருமத்துக்கு எழுதிவைச்சதையும் சொன்னாளாம். அப்புறமாத்தான் வந்து மகளக்கூப்புட்டுப்போயிருக்கா. போயிட்டு திரும்பிவந்தா நீ ஊரவீடு ஓடியாந்துட்டன்னாரு இவருக்கு கண்ணீர்தார தாரயா ஊத்துச்சு

ரெண்டு[பேரும் நல்லா இருக்காகளா அதுபோதும் ந்னு அழுதாரு

அப்ப வந்தவரு சொன்னாரு.பேசாம நீயும் போகவேண்டியதுதான அங்கயேன்னு. அதுக்கு இவரு சொன்னாரு இந்த மாடசாமி வேணாம்னு முடிவெடுத்துத்தான போனாக. அங்கயே நல்லா இருக்கட்டும்

நான் இங்கயே இருந்து பழகிட்டேன் இன்னும் கொஞ்சநாளு என்ன இந்தகோயிலும் சாமியும் பாத்துக்கிடும்.

ஒருதடவ குப்பவேணாம்னு ஒதுக்கிட்டா அது குப்பதான் திரும்ப கோயிலுக்குள்ள வரமுடியாதுநானும் வேணாம்னு ஒதுக்கித்தள்ளுன குப்பதான்.......ன்னு சொல்லிட்டு குலுங்கிகுலுங்கி அழுதாரு ...அவரால சமாதானப்படுத்த முடியல மாடசாமிய அவரும் கண்ணு கலங்குனதைத்தவிர வேற ஒண்ணும் செய்யமுடியல.......

(பின் குறிப்பு இது கற்பனை அல்ல உண்மைசம்பவத்தை வைத்து எழுதப்பட்டது )

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages