பெ.தி.சுகுமார்.
09.10.20
<><><><><><><><><><><><><>
"" திருக்குறள் கவிதை"
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் -- 122
" கனவு நிலை உரைத்தல் "
●●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
காதலர் பிரிவெண்ணிக்
கண்ணயரத் தூதுகண்ட;
காதலரின் கண்களுக்கு,
விருந்தென்ன கொடுப்பேன்!
காதலில் மயங்கிய
கயல்மீன் கண்களதும்;
காதலாள் சொல்லேற்றுச்,
சற்றதும் உறங்குமே!
உறங்கும் சமயத்தில்,
தலைவர் வருங்கனவில்;
உறங்காது வாழ்ந்திருக்கும்,
செய்தியைச் சொல்லுவேன்!
உறங்காத நனவில்,
அன்பில்லாத் தலைவரையும்;
உறங்கும் கனவில்,
காண்பதால் உயிர்க்கின்றேனே!
உயுரடன்று தலைவரைக்
கண்டு இன்புற்றேன்!
உயுருடன் கனவு,
கண்டின்று இன்புறுகிறேன்!
உயிர்க்கனவும் நனவும்,
எனக்கொன்று தான்!
உயிர்நனை நனவில்லை
என்றால் கனவில்லையே!
கனவில் காணும்,
தலைவர் பிரியார்;
கனவு மட்டுமிருந்து,
நனவதும் இல்லையேல்!
கனவில்லா நனவில்,
அன்பூட்டாக் கொடியவர்;
கனவில் வந்ததெனைத்,
துன்புறுத்துவ தேனா!
ஏனோ என்
தலைவர் தழுவுகிறார்;
ஏனென்று கூறாது,
உறக்கத்தில் தோள்களை!
ஏனோ விழிப்பினில்,
நெஞ்சடைந்து தங்குகிறார்!
ஏனோ பழிக்கிறார்,
அறியாதார் கனவின்பமே!
கனவுகாண் இன்பமறியாதார், நனைவின்ப மில்லையென;
கனவினை ஒதுக்கிப்,
பழியினைப் பேசுகிறார்!
கனவில்லா நனவில்,
அவர் என்னை;
கனவாக்கிப் பிரிந்தார்,
என்று இழிக்கின்றாரே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக