16.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 16 அக்டோபர், 2020

16.10.20

 



கிஷோர் கான்



16.10.2020

இன்று உலக மயக்கவியல் தினம்: 


கி.மு. 400-ம் ஆண்டு காலத்திலேயே அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. ஆனால், அப்போது மயக்க மருத்துவம் இல்லை. 


அறுவைச் சிகிச்சையின் போது நோயாளியின் கை, கால்களைக் கட்டிப் போடுவது, நோயாளி அசைந்துவிடாமல் பிடித்துக் கொள்வது அல்லது மரக்கட்டையால் அடித்து மயக்க நிலையை அடையச் செய்வது போன்ற முறைகள் இருந்துள்ளன. 


அந்த காலக் கட்டத்தில் செய்யப்பட்ட சிறிய அறுவைச் சிகிச்சைகள்கூட சித்திரவதைகளாகவே இருந்துள்ளன. 


1846-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வலியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும் என்பதை வில்லியம் தாமஸ் கிரீன் நிரூபித்தார்.


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் பொதுமருத்துவமனையில் கில்பர்ட் என்ற நோயாளிக்கு தாடையில் உள்ள கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சை நடந்தது. 


ஈதர் என்ற மயக்க மருந்து வாயுவை பயன்படுத்தி நோயாளிக்கு மயக்கம் கொடுத்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன், வலியில்லாமல் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். மருத்துவ உலகம் அவரைக் கொண்டாடியது. 


இதனை முன்னிட்டே ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி (இன்று) உலக மயக்கவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


மயக்கவியல் துறையின் தந்தையாக வில்லியம் தாமஸ் கிரீன் போற்றப்படுகிறார்.


மயக்க மருத்துவம் குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனும், மயக்கவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:


‘‘அறுவைச் சிகிச்சைக்கு முக்கியமான முதுகெலும்பாக மயக்க மருத்துவர் திகழ்கிறார். 


நோயாளியின் உடல் அறுவைச் சிகிச்சைக்கு தகுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறு நீரகம், மூளை போன்ற உறுப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார். 


அறுவைச் சிகிச்சை முடியும்வரை உடனிருந்து நோயாளிக்கு வலி இல்லாமலும், உணர்வு இல்லாமலும், உறக்க நிலையில் இருக்கும்படி செய்கிறார். 


அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தன்னுடைய பணியை சுலபமாக செய்ய ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறார்.


அறுவைச் சிகிச்சை முடிந்ததும் மயக்க நிலையில் இருக்கும் நோயாளியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான் சவாலான பணி. 


நோயாளி கண் விழித்து, தானாக சுவாசித்து, உறவினர்களை அடையாளம் கண்டு, உடலின் எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க வேண்டும். 


இதை உறுதி செய்த பின்னர்தான் மயக்க மருத்துவர் அந்த இடத்தை விட்டுச் செல்ல முடியும். 


மயக்க மருத்துவர் பணி என்பது அறுவைச் சிகிச்சைக்கு முன்பே தொடங்கி, அறுவைச் சிகிச்சைக்கு பின்னர்தான் முடிவடைக்கிறது.


நோயாளிகளை மயக்க நிலைக்கு அழைத்துச் செல்வதில் இரண்டு வகை உள்ளது. 


கை, கால் போன்ற இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் போது அந்த இடத்தை மட்டும் உணர்வு இழக்கச் செய்வது ஒரு வகை. 


இதில், அறுவைச் சிகிச்சையின் போது நோயாளி சுய நினைவுடன் இருப்பார். நோயாளி சொந்தமாக சுவாசிக்க முடியும். 


இதுவே தலை, நெஞ்சு, வயிறு போன்ற இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் போது முழு மயக்கம் கொடுப்பது மற்றொரு வகை. 


அப்போது நோயாளியின் செயற்கை சுவாசத்தை மயக்க மருத்துவர் கவனித்துக் கொள்கிறார். 


அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர், மயக்கம் தெளிய மாற்று மருந்து கொடுத்து சுய நினைவுக்கு அழைத்து வந்து, அவர் சொந்தமாக சுவாசிப்பதை உறுதி செய்கிறார்.


இதேபோல் இதயம், நுரையீரல்களின் இயக்கத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் முன்பு போல் நல்ல முறையில் இயங்க வைக்கிறார். 


வலி மருத்துவம் இப்போது பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் வலியில்லாமல் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். 


மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற நாட்பட்ட வலிகளுக்கு மயக்க மருத்துவரால் தீர்வு காண முடியும்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம் அளிக்கவும் வலியின்றி பராமரிக்கவும் வலியில்லா மருத்துவம் பயன்படுகிறது. 


தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, ஷாக் டிரீட்மெண்ட், ஹிப்னாடிஸம், குற்றவாளிகளிடம் உண்மையை கண்டறிவது போன்றவற்றில் அவர்களின் பணி முக்கியமானது. 


மயக்க மருத்துவரின் பணி பெரும் சவால்களைக் கொண்டது. அவர்களின் பணி சிறப்புகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.


அறுவைச் சிகிச்சை முடிந்ததும் மயக்க நிலையில் இருக்கும் நோயாளியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான் சவாலான பணி....


#உலக_மயக்கவியல்_தினம்


#எம்கே.



வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.


மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.


அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.


ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.


அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!



1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.


2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.


3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.


5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.


6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.


7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.


8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.


9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.


10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.


11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.


12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.


13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.


14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.



*படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.*


இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது! 


பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள்! கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும்! 


படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது! கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை! 


ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார்! 


புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் ! 


அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள்! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும்!

தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.

 

அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க! மகிழ்ச்சி இறைவா நன்றி 🍁 மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன்.


#எம்கே.


🌸🌸🌸🌸🌸🍁🍁🌸🌸🌸🌸🌸



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages