23.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

23.10.20

அருணா ரகுராமன்



23.10.20


நானிருப்பேன் உன்னோடு 

****************************

கண்களாக நீ இருந்தால்  அங்கே/

கண்ணின் கருமணியாக நான் இருப்பேன் /

கருத்தினில் உறவாடி தினம்  உனக்குக்/

காதல் கவிதைகள் படித்து இருப்பேன் /


உள்ளத்தோடு உறவாடி உயிராக அங்கே /

ஊக்கமாய் உள் உணர்வாய் எண்ணமாய் /

நீக்கமற நிறைந்து நினைவாய் தெளிவாய் /

 ஒவ்வொரு மூச்சிலும் பேச்சிலும் நிறைந்து /

உன்னோடு தானிருப்பேன் உறுதியுடன் உடனிருப்பேன் /


கண்மூடிக் களைத்து உறங்கும் வேளையிலும் /

கண்ணா உன்னை நான் நீங்காமல் /

கனவினிலும் நனவாகக் காவலுக்கு விழித்திருப்பேன் /

இன்னல்களில் நீங்காது எதிர்பார்ப்பில் வாழாது /

கண்ணில் நீரைக் காட்டாது என் /

கவலை ஏதும் கூறாது என்றும் /

உன்னை எ ண்ணி உனக்காக வாழ்த்திருப்பேன் .


அருணா ரகுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages