காத்திருப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 2 அக்டோபர், 2020

காத்திருப்பு




 காத்திருப்பு

...............................



 கொளுத்த மீனுக்காய்

 கொக்கும் வாடியது/

வாட்டம் கண்ட

புலவரும் கவிவரையலானாரே/

வரைந்த கவி

உணர்த்திடுது பொறுமையின் எல்லையை/ 

ஓடு மீன்  ஓட 

உறு மீன் வருமளவும்

வாடியிருக்குமாம்

கொக்கு/

மூதுரை வடிவமாய்

ஔவையும் உரைத்தனள்/ 

பொறுமையின் 

பெறுமதி யாவரும் 

கற்றனர்/ 

கற்றவர் யாவரும் 

 கொக்கினை

மறந்திடார்/

மறந்திடா திருந்திடில்

கொக்கே வலியதாம்/

வலியது பொறுமையே

என்பதும் தெளியுமே/

தெளிவது வந்திடில்

புரிந்திடும் கருவுமே/


ஜமுனாமலர் இந்திரகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages