12.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 14 நவம்பர், 2020

12.11.20

 



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு




நகர்வு( சிறுகதை)


அன்று அவருக்குப்பணிஓய்வுநாள் சந்தன மாலை பூங்கொத்து பழக்கூடை உடன் பணிக்கொடை லட்சங்கள்.....கண்ணீர் விடைகொடுத்தல் ......இத்யாதி.......


சம்பிரதாயங்கள் முடிந்து வீடுவரும்போது


ஆரத்திஎடுத்து உள்ளே அழைத்தார்கள்


மகனும் மருமகளும் வந்திருந்தார்கள்


கட்டிஅணைத்துக்கொண்டார் மகனை


எப்படியோ நல்லபடியா ஓய்வுபெற்றுவிட்டேன்


சோதனைகள் பல நடுவில் ஒருவழியாக பிழைத்தாச்சு


மகன் கேட்டான் அப்பா ரிட்டயர்மெண்ட்


பணம் எவ்வளவு தேறுச்சு என்று


55லட்சம் என்றார் பெருமையாக


என்னசெய்யப்போகின்றீர்கள் என்றான்


பேங்கிலபோட்டுவைச்சிட்டு வட்டியவாங்கி


நிம்மதியா குடித்தனம் நடத்தவேண்டியதுதான் என்றார்


லூசாப்பா நீ அவன் 7சதவீதம் வட்டிதான் கொடுப்பான்


இவ்வளவுநாள் கவர்ன்மெண்ட் வீட்டுல


சிரமக்குடித்தனம் பண்ணீட்டீங்க பேசாம


நல்ல மூணுபெட்ரூம் இருக்குற வீட வாங்கி


வசதியா மிச்சகாலத்துக்கு இருக்கலாம் என்றான்


அவருக்கு உடன்பாடில்லை .மனைவியும்


மகனுடன் சேர்ந்துகொண்டாள் அவன் நல்லதுதானே


சொல்றான் பேங்குல இப்பல்லாம் நம்பமுடியலஆன்லைன்ல எவனாவது எடுத்திருவானாம்


ஆச்சு பிரமாதமான வீடு புதுமனை புகுவிழா வீடுமனைவிபெயரில்


மனைவிக்கு வாயெல்லாம் பல்


அழகா இருக்குங்க வீடு வசதியாவும் என்று பெருமை


ஒருவருடம்போனது


மகன் வந்தான்


அப்பாஒருயோசனை நீங்கரெண்டுபேரும் தனியாஎன்னபண்ணப்போறீங்க பேசாமஎங்ககூட வந்திருங்க என்று கரிசனமாக அழைத்தான்.....


இது ஏதோ இவருக்குச்சரியாகப்படவில்லை


இப்பவும் மனைவி ஒத்து ஊதினாள்


அவன் சொல்றதும் சரிதான், நமக்கும்பொழுதுபோகலை


பேரனைகொஞ்சிகிட்டு பொழுதப்போக்கிடலாம்


வீட்ட வாடகைக்கு விட்டுடலாம்


வாடகை உங்கபேருல


அக்கவுண்டுல போடச் சொல்றேன் செலவுக்காகும்


நல்லதுதானே என்றாள் மனைவி


ஆச்சு குடிபெயர்ந்தாச்சு


ஆறுமாசமாச்சு


மகன் இப்போ கோபமாச்சொன்னான் வந்த இடத்தில்வாயவைச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டீங்களா


அவரொம்ப ஃபீல் பன்றா


எதுக்கு கண்டதுல எல்லாம் கொறை கண்டு பிடிக்கிறீங்க குற்றம் சொல்லிட்டே இருக்கீங்க வாய மூடிட்டு போட்டதை சாப்பிட்டு சும்மா இருக்கக்கூடாதோ ன்னான்


தப்புபண்ணீட்டமோன்னு தோணிச்சு அவருக்கு


உங்களுக்கு நல்ல இடம் பாத்துருக்கேன் சாப்பாடெல்லாம்


அவங்களே போட்டு நல்லாபாத்துக்குவாங்கலாம்


வாடகைப்பணம் வாங்கி நானே கட்டிட்டேன் நீங்க சந்தோசமா இருக்கலாம் பிக்கல் பிடுங்கல் இருக்காது....மருத்துவ வ்சதி கூட உண்டுன்னான்


புரிந்தது இவருக்கு கிளம்புடி உடனே


சொந்த வீடு இருக்கு அங்கபோகலாம்


எதுவும் எடுத்துக்காத என்றார்


பேரனோடபோட்டோ மட்டும் எடுத்துக்கிறேன்


என்று வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்


மனைவியால் தாங்க முடியல


வழியில் கோவிலில்


நிற்கச்சொல்லி வேண்டினாள்


அப்ப சொன்னாள் ஆண்டவனே அவன


மன்னிச்சிடு தண்டிச்சிடாதே என்று


ஏங்க நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க


வீட்ட எப்பவோஅவன் பெயருக்கு மாத்திக்கொடுத்துட்டேன் என்று


கைகளை கண்ணீரால் நனைத்தபடி


என்னடி சொல்றேன்னு கலங்கி கண்ணில் நீர் வரக்கேட்டார் அவர்


அவளிடம் பதில் இல்ல கேவல்தான் வெளிப்பட்டது.........


அ.முத்துவிஜயன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages