சுப்பக்காவைத்தெரியாதவுக அந்த ஊர்ல ஆருமிருக்கமுடியாது அந்த அளவுக்கு சுப்பக்கா பிரபலம். அவ பேச்சைக் கேக்குறவுக வாயப்பொழப்பாக. அந்த அளவுக்கு அவுத்துவிடுவா சேதிகளை.படிச்சது என்னமோ அஞ்சாம் கிளாஸ்தான். அஞ்சாறு இங்கிலீஸ் சொல்லுகளை வைச்சிட்டு பன்ற அமர்க்களம் தாங்க முடியாது. வீட்டுல அம்மாகிட்டயே வாட்டர் கிவ்ம்பா.
அது பாவம் கிராமத்து ஆளு.திருதிருன்னு முழிக்கும். ஒன்ன எல்லாம் எங்கப்பா எப்புடிக்கலியாணம் பண்ணாருன்னு தெரியலன்னு கிண்டலடிக்கும்.
வாசகசாலையில போயி எல்லாப் பேப்பரையும் விழுந்து விழுந்து படிக்கும்
படிச்சாச்ச்சா அவ்வளவுதான் அதை அன்னிக்கிப்பூராம் அவுத்துவுடும் இதுவே நேருல போயி பாத்தமாதிரி. இதைக்கேக்குறதுக்கு சின்னப்புள்ளைக கொஞ்சம் பெரியவுக இருப்பாங்க
தினத்தந்திப்பேப்பர்ல போடுவானே அவன் அவன அரிவாளாலசதக் சதக்குன்னு கழுத்துல வெட்டினான் ரத்தம் பீரிட்டு வந்த்துச்சுங்குறமாதிரி செய்திய பக்கத்துல இருந்து பாத்தமாதிரி சொல்லும்
சுப்பக்கா தீவிர சிவாஜி ரசிகை. ஒருபடம் விடாது . மிட்லண்டு தேட்டரிலயோ வெள்ளக்கண்ணு தேட்டரிலயோ போயி பாத்துட்டு வந்துருச்சுன்னா படம் தெருவுல ஒருவாரம் ஓடும்.
திரிசூலம் வந்த சமயத்துல மூணுசிவாஜியப்பாத்த சந்தோசத்துல எல்லாரையும் படுத்தி எடுத்துடுச்சு. அதுல யும் போன்ல கே ஆர் விஜயா கூட பேசுறத நடிச்சிகாமிக்கும்எல்லாரும் வாயப்பொத்திக்கிட்டு சிரிப்பாக
தெரியிறமாதிரி சிரிச்சா அதுக்கு கோவம் வந்துடும். எங்க சிவாசிக்கணேசன் மாதிரி நடிக்கிறதுக்கு ஒலகத்துலயே ஆளு கெடையாதுன்னும்.
எம் ஜி யார்ன்னா சுத்தமாப் புடிக்காது. அவனுக்கு அளுகத்தெரியாது ஏதாவது தூணப்போயிப்புடிச்சிக்கிவான். எப்பப்பாத்தாலும்நம்பியார்கூடசண்டயபோட்டுக்குக்கிட்டுக்கெடப்பான்ன்னு சொல்லும்.
இப்ப இதுக்கு அவுகவீட்டுல மாப்புள்ள பாத்தாக. சுப்பக்கா கண்டிசன் போட்டுச்சு புருசனா வாரவன் சிவாஜி ரசிகனா இருக்கனும் நல்ல வேலைபாக்கணும் நான் சொல்றதக்கேட்டு நடக்கனும்னு.
உள்ளூர்ல சுப்பக்காவைப் பத்தித் தெரிஞ்சதுனால ஆருக்கும் அதை கட்டிக்குற தைரியம் வரலசின்னபுள்ளக ஏதாவது வித்தியாசமாப்பேசினா சுப்பு மாதிரி பினாத்தாதன்ற அளவுக்கு பிரபலம்
வெளியூர்ல இருந்து தூரத்துச்சொந்தத்துல ஒரு மாப்புள்ள வந்தாரு. பொண்ணு பாத்துட்டுபோறவரைக்கும் வாயத்தொறக்கக்கூடாதுன்னு அவுக அப்பா சுப்பக்காவக் கெஞ்சிக்கேட்டுருந்தாரு.
ஆனாலும்மாப்புள்ளைவீட்டுக்காரவுகளுக்கு தண்ணிகொண்டாந்து குடும்மான்னு சொன்னதும் தண்ணியக்கொண்டாந்து வாட்டர் டேக்குன்னு இங்கிலீசுல பொழந்துடுச்சு. நல்லவேல அவுக அதப்பெருசா எடுத்துக்கல
ஒருவழியாக்கலியாணம் முடிஞ்சிது.அப்பா அம்மாவுக்குநிம்மதிமூட்டையக்கட்டித்தள்ளியாச்சுன்னு,மறுவீடுபோகும் போது சுப்பக்கா அம்மா அப்பாக்கிட்ட சொல்லிச்சி வாராவாரம் வந்துடுவேன் கவலப்படாதீங்க டாடி மம்மின்னு. அவௌகளுக்கு வயத்துல புளியக்கரைச்சுது
சொன்னமாதிரியே ஒருவாரத்துல திரும்ப வந்துடுச்சு. ஒங்களையெல்லாம் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்
எங்க வீட்டுக்காரரு பெரிய ஸ்வீட்கடை வைச்சிருக்காரு கோயம்புத்தூரில பெரிய கட எங்க கடதான். அங்க கல்லாவுல நாந்தான் ஒக்காந்துருப்பேன். பணம் எண்ணி முடியாது ந்னு அவுத்து விட்டுச்சு எல்லாரும் வாயப் பொழந்தாக .மாப்புள்ள எங்கம்மான்னு கேட்டதுக்கு அவரு பிசி அதான் நானாக் கெளம்பி வந்துட்டேன்னு சொல்லிச்சி
இதுக்கு நடுவுல அங்கருந்து போன் வந்துச்சு சுப்பக்காணோமுன்னு. அப்பத்தான் தெரிஞ்சது சுப்பக்கா அதுபாட்டுக்கு கெளம்பி வந்தது.
அவளோட அப்பா சமாதானம் பண்ணி கூட்டிட்டுக் கெளம்புனாரு மாப்புள்ளவீட்டுக்கு
சுப்பக்காவோட அண்ணன் மகனுக ரெண்டுபேரு வாலுக அத்த எங்களையும் கூட்டிட்டுப்போ இங்க பள்ளிக்கொடம் போகச்சொல்லுறாய்ங்க வாத்தியானுக அடிக்கிறானுகன்னு சொன்னானுக
அதுக்கு அது சொல்லிச்சி லீவுக்கு வாங்க
கோயம்புத்துர் பஸ்ட்டாண்டுல எறங்கி லல்லே லாலாஸ்வீட்ஸ்டால்ந்னுபச்சப்புள்ளையக்கேட்டாலும்சொல்லும் ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு
இவனுகளும் ஒருமாதிரி காசத்தேத்திக்கிட்டுக் கோயம்புத்தூரு போனானுக
அங்கபோனா தலையும் புரியல வாலும் புரியல யாருட்ட கேட்டாலும் லல்லே லாலாகட பத்தித்தெரியல அலையா அலஞ்சானுக.
பசிவேற வயத்த கிள்ளுச்சு.கைல காசுமில்ல சுப்பக்காவை திட்டுனானுக
அப்பத் தச்சேலா சுப்பக்கா புருசன் வந்தாரு அவரு பாத்துட்டு விசாரிச்சாரு ஒங்களை எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு அப்ப சுப்பக்காவப்பத்திச்சொன்னதும் அடாடா வாங்க பசங்களான்னு கூட்டிட்டுப் போனாரு. இவுனுகளுக்கு லல்லே லாலா ஸ்வீட் ஸ்டாலப்பாக்க ஆச . அதசொன்னானுக .
சரி வாங்கன்னு போனா அப்புடி ஒரு கடையக்காணோம் அங்க இருந்தது ஒரு டீக்கடை. அதுக்கு மேல சின்னதா ஒரு போர்டு வைச்சிருந்தாங்க அதுல எழுதியிருந்துச்சு கோணல் மானலா
நெல்லை லாலா ஸ்வீட் ஸ்டால் நு அதுல இருந்து சுப்பக்காவை அவனுக லல்லே லாலான்னு கேலிபண்ணுவானுக. ஆனா அதுஅசருறதா இல்ல.
கொஞ்சவருசத்துல தன்னோட மகனோட பொறந்த ஊருக்கே வந்துருச்சு. மகன் வாலிப வயசு. இப்ப சுப்பக்கா மகனுக்கு பொண்ணு பாத்துச்சு. சுப்பக்காவத்தெரிஞ்சவங்க பொண்ணு குடுப்பாகளா....ஒரே அலைச்சல் தான்
அப்புடியும் தேடிப்புடிச்சி ஒரு மருமகளக்கொண்டாந்துச்சு. மருமககிட்ட அதிகாரம் தூள் பறந்துச்சு. இது நில்லுன்னா நிக்கனும் ஒக்காருன்னா ஒக்காரனும்.
பாவம் மருமக பயந்து நடுங்குச்சு. ஆனா ரொம்ப நாளு அதிகாரம் தாங்கல. புருசன சரி பண்ணி தனிக்குடித்தனம் போயிடுச்சு மருமக
சுப்பக்கா சளைக்கலையே
" சிவாஜி பாட்டான யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கன்னு "
பாடிக்கிட்டு தனக்கு வருமானத்துக்கு கடை போட்டுருச்சு. அதுலவார வருமானத்துல
ஜாலியா இருந்துச்சு.
அதுக்கு இப்ப சிவாஜி படம் வாரதில்லன்றதுதான் வருத்தம்.
அதுக்கும் சளைக்காம செல்போன் வாங்கி யூடூயூப்ல் சிவாஜியோட படத்தையெல்லாம் தினம் பாத்துக்கிட்டு காலத்தை ஓட்டுது
ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டர் சுப்பக்கா......அதுமாதிரி கவலையில்லாத பொம்பளைங்களை இப்ப பாக்கமுடியாது.....
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக