**நாலுபுள்ளபெத்தா**
**கருப்பாயம்மா அடுப்படியில தடவித்தடவி சமயலச்செஞ்சிட்டு இருந்துச்சு. சின்ன வயசுல அதுக்கு ஒருகண்ணுல பூவிழுந்துடுச்சு. ஒத்தக்கண்ணுல தான் பார்வ அதுனால அதை ரெண்டாந்தாரமா ஒருத்தருக்குக்கட்டிவைச்சாக மொதத்தாரத்துக்கு புள்ளகுட்டியில்ல**
**அதைக்காரணம்காட்டி ரெண்டாந்தாரமா கலியாணம் பண்ணிவைச்சாக**
**அதுக்கு வஞ்சனயில்லாம நாளு ஆம்பளைப்புள்ளைகளையும் மூணு பொம்பளைப்புள்ளைகளையும் பெத்துக்குடுத்தாங்க . அவளோட புருசன் மில்லு வேலபாத்தாரு அதுல குடும்பம் ஓடுச்சி.**
**மூத்தமகன் மில்லுல வேலைக்கிப்போனான்ரெண்டாவது பேங்கில வேலைக்கிப்போனான் மூணாவது அடங்காதது உருப்படியா ஒருவேலைக்கும் போகாது போனாலும் ஏதாவது தகறாறு பண்ணிட்டு வந்துடும் நாளாவதுமகனும் அண்ணன் இருக்குறபேங்குக்கே வேலைக்கிப் போனான்**
**எல்லாருக்கும் கலியாணாமாகிடுச்சு மூத்தமக சொந்தத்துல கலியாணம் பண்ணிக்குடுத்தாச்சு ரெண்டாவது படிக்கையில செத்துப்போச்சு மூணாவதும் சொந்தத்துல தான்**
**இதுக்கு நடுவுல அவளோட புருசன் செத்துப்போனாரு. சொத்தப்பிரிச்சாங்க மூத்தமகளுக்கு ஒரு நெலத்த எழுதி வைச்சாங்க மகனுக எல்லாம் வீடு வாசலு கொஞ்சம் சொத்துபத்து எல்லாத்தையும் பங்குபோட்டு எடுத்துக்கிட்டாக மூணாவதுக்கு ஒண்ணும் குடுக்கல கருப்பாயி பொறந்த வீட்டுலயே கட்டிக்குடுத்ததுனால எதுவும் குடுக்கல**
**கருப்பாயம்மாவ ஆரு வைச்சிக்கிறதுன்னு பிரச்சனை வந்துச்சு ஆனா அது சொல்லிடுச்சு நான் தனியா இருந்துக்கிறேன் எல்லாரும் எனக்குவேணும் நான் அவரோட வாழ்ந்த இந்த ஓட்டுவீடுலயே இருந்துக்கிறேன் அப்பப்ப நீங்க வந்து பாத்துட்டுப் போங்கன்னு சொல்லிச்சி**
**அதுல ஆருக்கும் பிரச்சனையில்ல. அப்புடித்தான் போச்சு**
**மத்தமூணுமகனும் வருவானுக வந்து பாத்துட்டு கைல காசுகுடுத்துட்டுபோவாக மூணாவது மகன் அதப்புடுங்கிக்குவான் அவந்தான் பக்கத்துவீட்டுல இருந்தான்**
**இப்ப கருப்பாயம்மாவுக்கு முடியாமப் போச்சு மகனுக ஆரும் கூட்டிட்டுப்போகல மூத்தமக வந்து கூட்டிட்டுப்போயி வைச்சிகவனிச்சா அதுக்கும் வந்து சண்டபோட்டாக மகனுக எல்லாரும் எங்களைக்கேக்குறாக நீ போயி அந்தவீட்டுலயே இரு ஆளவைச்சிப் பாத்துக்கலாம் காசு குடுத்துடலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டாக**
**ஆனா கூட்டியாந்ததோட சரி அப்புறம் கண்டுக்கல. இதுக்கு நடுவுல அந்த ஒத்தைக்கண்ணும் பார்வை கொறஞ்சி போச்சு. ரொம்பத்தடவ வேண்டியதாயிடுச்சுநிதானமும் புடிபடல அதுனால கீழவிழுந்து கால ஒடச்சிக்கிடுச்சு. பக்கத்துல ஒரு அம்மாதான் ஒதவிபண்ணும் அதுதான் பாத்துக்கிச்சி,கீழவுழுந்தசேதிகேட்டுமகனுகவந்தாகபாத்துட்டுவிசாரிச்சிட்டுக்கிளம்புனாக**
**அப்ப பக்கத்துவீட்டு அம்மாவுக்கு கோவம் வந்துடுச்சி இப்புடிப்பொறுப்பு இல்லாமப்[போறாங்களே இவனுகஎல்லாம் பிள்ளைகளா நாலு ஆம்புளப்புள்ள பெத்தும்**
**இப்புடி ஒன்னவைச்சிருக்காகளேன்னு சொல்லிச்சி**
**அதுக்கே கண்ணுல தண்ணிவந்துருச்சு**
**ஒத்தபுள்ள பெத்தா உறியில சோறு நாலப்பெத்தா நடுத்தெருவுலதான்னு**
**சொல்லுவாக, அது உண்மையாப்போச்சுன்னு கலங்குச்சுஅதுக்கு கருப்பாயி அழுதுகிட்டே சொல்லிச்சி அவனுகளத்திட்டாத பாவம் மூத்தவனுக்கு ஆப்பரேசன் குடல்ல பண்ணிருக்கு உசுறகைலபுடிச்சிட்டு இருக்கான்**
**ரெண்டாவதும் தடுமாறிக்கிட்டு இருக்கான் மூணாவது இருந்து புரயோசனமில்ல நாளாவது இருக்குறதே மாமியாவீட்டுல யாரக்குத்தம் சொல்றது என்னோட விதி இதுதான் இப்புடியே இருந்துட்டுப்போயிடுறேன் .**
**அவரு இருந்தாப்பொறுக்கமாட்டாரு நல்லவேளை நான்போயி அவரு இருந்துருந்தா ரொம்பசிரமமாப்போயிருக்கும் சாமி அதுல கைவிடல என்னையும் சாமிபாத்துக்கும் புள்ளைகளையும் அதுதான் பாத்துகிடனும்ன்னு சொல்லிக் கண்கலங்கிடுச்சு பக்கத்து வீட்டு அம்மாவுக்கும் கண்ணு கலங்கிடுச்சு**
**அப்ப கருப்பாயோட மூத்த மக வந்தா. ஆரு என்னத்தச்சொன்னாலும் எங்க ஆத்தாவ நான் பாத்துக்கிறேன். எனக்கு த்தெம்பு இருக்கு. பாக்குறவுக அங்க வந்து பாத்துகோங்கன்னு தன்னோட வீட்டுக்கு கூப்புட்டுபோயிடுச்சு.**
**அங்க வைச்சி பாத்துக்கிச்சி . கஞ்சியோ கூழோ நான் குடிக்கிறதை ஒனக்கும் தாறேன் பக்கத்துல நீ இருக்குறதே எனக்கு தைரியம். ராக்காச்சி அம்மன் கூட இருக்குறமாதிரி எனக்கு பலம். நீ என்கூட இருந்தாபோதுமாத்தா....... ந்னு கண்ணு கலங்குச்சி**
**அப்ப கருப்பாயி அம்மா சொல்லிச்சி எனக்கு ஆம்பளைப்புள்ளைக பொறந்தப்ப எல்லாம் சந்தோசப்பட்டேன். பொம்பளைப்பிள்ளைக பொறந்தப்ப வருத்தப்பட்டேன். ஆனா இப்ப பொம்பளைப்பிள்ளைக அருமைய நீ காமிச்சிப்புட்ட..... உனக்கு சொத்துல கூட சரியா குடுக்கல ஆனாலும் தெய்வமம்மா நீ ....ன்னு மக கையைப்புடிச்சி கண்கலங்கி சொன்னப்ப மக அழுதுருச்சு**
**பாத்துக்கிட்டு இருந்த பக்கத்துவீட்டுக்காரம்மா கண்ணுல தண்ணி நிப்பாட்ட முடியல ஏன்னா அவளுக்கு மக இல்ல மகனும் கைவிட்டுட்டான் .... எனக்கும் ஒரு மக இருந்துருந்தா நான் இப்படி இருக்க மாட்டேனேன்னு......அழுதுகிட்டே சொல்லிச்சி...**
**அப்ப கருப்பாயம்மா மக சொல்லிச்சி நான் இருக்குறேன் எங்க அம்மாவோட ஒன்னையும் சேத்துப்பாத்துக்கிறேன் நீங்க என்னோட சின்னம்மா மாதிரிதானேன்னு சொல்லிச்சி**
**அதுக்கு பக்கத்து வீட்டுக்காரம்மா சொல்லிச்சி. என் தங்கம் இந்த ஒரு வார்த்தை போதுமிடி...... நான் உசிறு வாழ நீ நல்லா இருக்கனுமுன்னு கண்கலங்குச்சு.........**
**அ.முத்துவிஜயன்**



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக