உன் பார்வையில்( சிறுகதை)
அந்தப்பையன் இவளைப்பார்க்குறப்போ என்னவோ செஞ்சிச்சி. அந்தக்கண்ணுகள் கிட்ட இருந்து பாரவைய எடுக்கவோ நகத்தவோ முடியல இவளை அறியாமலே கண்ணுல இருந்து தண்ணி ஊத்துச்சு. பக்கத்துல இருந்த மகனும் மகளும் என்னம்மா ஆச்சு ஏன் அழுகிறன்னு கேட்டாங்க. அப்ப அவளால எதுவுமே சொல்லத்தெரியல. விக்கி விக்கி அழுகத்தான் முடிஞ்சது......அவ அந்தப்பையனக்காமிச்சா
அவன்கண்ணப்பாருங்கன்னு சொல்லிட்டு அழுதா . மகள் அவனைப்பாத்தப்ப அவளுக்கும் அதே மாதிரி உணர்வு ஏற்பட்டுச்சு. அவ கண்ணும் கசியத்தொடங்குச்சு...அவளுக்கும் அழுக தொத்திக்கிச்சு.....
அப்ப அவளோட மகன் இரும்மா அவன் யாரு என்னான்னு விசாரிச்சிட்டு வாறேன்னு சொல்லிட்டு அந்தப்பையன் கிட்டப்போனான். அம்மாவும் மகளும் அழுதபடி பாத்துக்கிட்டு இருந்தாங்க......
அவளோட புருசன் மெயின் ரோட்டுல லேத் வைச்சிருந்தாரு. வீடு கொஞ்சம் உள்ளாற தள்ளி இருந்துச்சு. எல்லாம் ஒரு கிலோமீட்ட்ர் தூரத்துக்குள்ளதான்.
அவர் ராத்திரி எட்டு மணி வரைக்கும் லேத்துல தான் இருப்பாரு. அப்புறமா பூட்டிட்டு சாப்புட வீட்டுக்கு வருவாரு. மெக்கானிக் வேலைதான். ஆனா ஓரளவு சமாளிக்கிற அளவுக்கு வருமானம்.
அன்னிக்கி காலையிலதான் 10000 ரூ பொதுக்கணக்குல கடன் வாங்கி டவுனுக்குள்ள போய் சாமான் சட்டெல்லாம் வாங்கி கோயில்வீட்டுக்குள்ள கொண்டுபோய் வச்சிட்டு வந்துருந்தாரு. மத்தியானம் அங்க இருந்து கெளம்பும் போது 5000 ரூ பக்கமா காசு அவர்கிட்ட இருந்துச்சு.
அவங்க பங்காளிக காணிபாக்குற கோயில்ல ஆடிமாசம் ஒன்னாந்தேதி ஒவ்வொரு வருசமும் ஆள் மாறும். பங்காளிக சுத்துமொறையில பாப்பாக. இந்தவருசம் இவருக்கும் பங்காளிகளுக்கும் பாக்குறது யாருன்றதுல கடுமையான சண்டை. பஞ்சாய்த்து வைச்சிப்பேசி இவரு பாக்குறதுன்னு முடிவாச்சு. அதுல அவரோட ஒடம்பங்காளிக கடுப்புல சண்டபோட்டுருந்தாக மறுநாளைக்குள்ள அவரைத்தூக்குறதுன்னு பகிரங்கமா அறிக்கையும் விட்டுட்டுப்போயிருந்தானுக. அதுனால வீட்டுல எல்லாரும் ஒரே டென்சனா இருந்தாங்க
அப்பத்தான் மறுநாள் ஆடி ஒன்னாம் தேதி காணிபாக்க கோயில் சாவிவாங்க சாமான் சட்டெல்லாம் வாங்கி கோயில் வீட்டுல போட்டுட்டு லேத்துக்கு வந்துருந்தாரு. அவருக்கு சரக்கு அடிக்கிற பழக்கமும் உண்டு....அதுனால ஏகப்பட்ட பிரச்சன.
அன்னிக்கி எட்டு மணிக்கு வாரவரு வீட்டுக்கு வரல. அவரு சம்சாரம் மகன்கிட்ட சொல்லிட்டு இருந்தா போய் ஒரு நடை அப்பாவைப்பாத்துட்டு வாடா.... இன்னும் காணோமுன்னு. அவன் சொன்னான் அவரு வந்துருவாரு... தண்ணியக்கிண்ணியபோட்டுருப்பாரு அதுனால லேட்டா வருவாரு நீ சாப்புட்டுத்தூங்குன்னான்
ஆனா அவளுக்குத்தூக்கம் வரல. மனசு கெடந்து அடிச்சிகிச்சி. அவருக்கு சாப்பாட எடுத்துவைச்சிட்டு சாப்புட ஆரம்பிச்சா. ஆனா சாப்பாடு புடிக்கல . பேருக்கு சாப்புட்டு லைட்ட அமத்திட்டு படுத்தா. ஆனா இன்னும் அவரு வரலையேன்னு கவலையா இருந்துச்சு. மணி 11 ஆச்சு இன்னும் அவர் வரல திரும்ப மகன் கிட்ட சொன்னா.போய் ஒருநடை பாத்துட்டு வாடான்னு அவன் அதெல்லாம் வந்துருவாரு ந்னு சொல்லிட்டு போய் படுத்துட்டான்.
ஆனா தூரத்துல நாய்க ஊளையிடுற சத்தம் கேட்டுச்சு, இவளுக்கு அடிவயிறு கலங்குச்சு. என்னமோ நடக்கப்போகுது ...பங்காளிக வேற அவரை குறிவச்சி தூக்கிடுவோமுன்னு சொன்னது பயமா இருந்துச்சு.. எப்ப கண்ணு அசந்தோமுன்னு அவளுக்குத்தெரியல
காலையில வாக்கிங் போன ஒருத்தரு அவங்க வீட்டுக்கதவைத்தட்டி ஏம்மா ஒயின் சாப்புக்குமுன்னாடி ஒரே கூட்டமா இருக்காம் யாரோ செத்துக்கெடக்காங்கலாம்னுன்னு சொன்னவன்ன பகீருன்னு இருந்துச்சு. மகன எழுப்புனா வாடா இவரு வேற ஆளைக்காணோம் ஒயின் சாப்புக்கிட்ட ஏதோ கூட்டமா இருக்காம்ன்னு சொல்லி அவனைக்கெளப்பிட்டு வண்டிய எடுத்துட்டு அங்க போனாங்க
கூட்டதை வெளக்கிட்டுப்பாத்தா அங்க இவரு கெடக்காரு. பக்கத்துல இருக்கவங்க பேசிக்கிட்டாக யாரோ ராத்திரியோட ராத்திரியா அடிச்சிப்போட்டுட்டாக பாவம் நைட்டுப்பூறம் செரமப்பட்டு காலம்பறதான் உசிறு போயிருக்குன்னு ...இவ தலையில ஆடிச்சிட்டு அழுதா. அதுக்குள்ள மகளும் வந்துட்டு அப்பா அப்பான்னு அழுதா. கடுமையா போராடுனதுக்குண்டான தடயம் இருந்துச்சு.
இவ மகன்கிட்ட சொன்னா ராத்திரி போய் பாத்துட்டுவா பாத்துட்டுவான்னு சொன்னேனேடா கேக்கலயே இப்ப ப்பாரு போயட்டாரேடா....கொண்ணுபுட்டானுகளேன்னு
அழுதா.
அப்ப அவரைத்தூக்கிடுவோமுன்னு அறிக்கை விட்ட பங்காளிக வந்து அழுதாங்க. சின்னம்மா நாங்க பேச்சுக்குத்தான் சொன்னோம் நாங்க எதுவும் செய்யல..... ந்னு அழுதானுக.
அதுக்கு யார்பண்ணாங்களோ அவங்க அனுபவிப்பாங்கன்னு அழுதா.
அதுக்குள்ள போலீஸ் வந்துருச்சு.அவங்களைப்பாத்துட்டு இவனுக பயந்துட்டு ஓடிட்டாங்க. போலீஸ் வந்து கோடு போட்டு போட்டோவெல்லாம் எடுத்துட்டு பாடிய பெரியாஸ்பத்திரிக்கி கொண்டுபோய்ட்டாங்க இவங்களை போலீஸ் ஸ்டேசன்ல வந்து கம்ளெயிண்ட் குடுக்கச்சொல்லிட்டுப்போயிட்டாங்க. இவங்க எல்லாரும் அழுதுகிட்டே அங்க போனாங்க அங்க கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிட்டு யாருமேல சந்தேகமுன்னு கேட்டு பதிவுபன்னிட்டு பெரியாஸ்பத்திரில வந்து பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ணி வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டாங்க
இவங்க சொந்தக்காரங்க எல்லாம் அடிச்சிபிடிச்சிட்டு அங்க போனா அங்க ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ். அப்ப அங்க ஒருத்தர் ஒரு பாரத்தைக்குடுத்து கேட்டாங்க. அதுல எல்லாம் மகனும் இவளும் கையெழுத்துப்போட்டுக்குடுத்துட்டாங்க . அப்புறமா சாயங்காலம் பாடிய குடுத்தாங்க . கொண்டுபோய் எரிய்யூட்டிட்டு காரியம் முடிச்சாக.....
இப்ப அவளோட மகன் அந்த பையன் யாரு என்னான்னு விசாரிச்சப்ப அவனும் இதே ஊருதான். அவனுக்கு கண்ணுல கோளாறு ஆயி ரெண்டு கண்ணும் தெரியாமப்போச்சு. போனவருசம்தான் பெரியாஸ்பத்திரில இருந்து கண்ணு கெடைச்சி ஆப்பரேசன் பண்ணி கண்ணு தெரிய ஆரம்பிச்சிருக்குன்னு சொன்னாங்க.....
அப்பத்தான் அவனுக்கு நெனப்பு வந்துச்சு அப்பாவோட கண்ணத்தானம் பண்ண எழுதிக்குடுத்தது. அவன் அவனோட அம்மாகிட்ட சொன்னான். அம்மா ஒருவேளை இது அப்பாவோட கண்ணாக இருக்க வாய்ப்பு இருக்குன்னுசொல்லும்போதே அந்தப்பயன் கண்ணுல இருந்து தண்ணி ஊத்துச்சு
அப்ப இவ சொன்னா ஆமா அது அவரோட கண்ணுதான்.... என்னைப்பாக்குது... உடம்பெல்லாம் சிலித்துப்போகுது...ன்னு கண்ணீர்விட ஆரம்பிச்சா. மகளும் அப்பா அப்பான்னு அழுக ஆரம்பிச்சிட்டா. அதுக்குள்ள அந்தப்பையன்னோட அம்மா வந்து இவ கையப்புடிச்சிக்கிட்டா. இது ஒருவேளை உங்க கணவரோட கண்களா இருக்கலாம் எதுவாயிருந்தாலும்..... ரொம்ப நன்றி என் பையனுக்குத் திரும்ப பார்வை கெடச்சதுக்கு நீங்கதான் காரணம் உங்க கையக்காலா நெனச்சி தொட்டுக்கும்புடுறேன்னு கண்ணீரோட சொன்னாங்க
இதோ இப்ப என் வீட்டுக்காரரு எங்களை உங்க பையன் மூலமா பாகுறாரு. அந்த சந்தோசம் போதும்ன்னுசொன்னா.
அப்ப இவளோட கண்ணுல தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சது. அந்தபையோனோட கண்ணுலயும் ஊத்த ஆரம்பிச்சது எல்லாரும் கண்ணதொடச்சிக்கிட்டாங்க....... நானும் தான்.....
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக