30.12.20 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 30 டிசம்பர், 2020

30.12.20



மலைச்சாமி


ஆங்கில புத்தாண்டே வருக வருக

அ ழிவை ஏற்படுத்தாமல் .....

அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!


ஆ க்ரோயத்தை காட்டாமல் .....

ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!


இ ழப்புகளை ஏற்படுத்தாமல் ....

இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!


ஈ னச்செயல் புரியாமல் ....

ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!


உ லகை உலுப்பாமல்....

உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!


ஊ னங்களை ஏற்படுத்தாமல் ....

ஊர் செழிக்க ..வருக வருக .....!!!


எ திரிகளை தோற்றுவிக்காமல் ....

எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!


ஏ மாற்றங்களை ஏற்படுத்தாமல் ....

ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!


ஐ யத்தை தோற்றுவிக்காமல் ......

ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!


ஒ ற்றர் வேலைகள் பார்க்காமல் ....

ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!


ஓ லமிட மக்களை வைக்காமல் .....

ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!


ஔ டத்தை பாவிக்காமல் .....


ஔ வை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ...


காதல் முளைக்கலாம்

காத்திருந்து தவிக்கலாம்

களைந்து போனவைகள்

கண்டெடுக்கலாம்

கனவுகள் கூட கட்சி தாவலாம்

சோகமோ...சுகமோ...

மூளைக்குள் முக்தி பெறலாம்

விண்கலம் பல விண்ணுக்குள்

விதி மீறி பறக்கலாம்

இயந்திர வாக்குகளின் நாக்கு

தந்திரமாய் தரணி ஆழலாம்

புயலோ மழையோ அலையோ

பூமிக்குள் புகுவிழா நடத்தலாம்

சாதி மதம் வைத்து தோண்டிய

அரசியல் குழிக்குள் பலர் புதையலாம்

கேன்சரை விட கூடுதலாய்

நோய்கள் பரிசு வழங்கப்படலாம்

அரசும் கூட தனியாருக்கு

தாரை வார்க்கப் படலாம்

பண்பாடு பாரம்பரியம்

தரை மட்டம் ஆகலாம்

ஓட்டுக்காய் இறந்தவர்கள்

உயிரோடு திரும்பலாம்

ஆங்கிலனுக்கு புத்தாண்டு

அடிமை நமக்கும் தானோ..!

ஆங்கிலப் புத்தாண்டை

கொண்டாடி வரவேற்றவர்கள்

எவரும் இதுவரை

தேசவிரோதிகள் ஆனதில்லை

அன்று..!

ஆங்கிலேயனை எதிர்த்த

நம் தாத்தாக்கள் தேச பக்தர்கள்

இன்று

ஆங்கிலேயனது ஆண்டைக் கொண்டாடும்

பேரன் பேத்திகள் நாம் தேச பக்தர்கள்

ஆண்டு போனவன் இந்தியன்

மாண்டு போகட்டும் என

தந்து விட்டு போனதல்லவா...

கொண்டாடித்தான் ஆகவேண்டும்

ஆங்கிலேயர் நாம்... வாழவேனும்...

இந்தியா பெயர்

பிரிட்டிஷ் 2 ஆக மாற்றவேணும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages