சுந்தரம்
07.01.21
ஒரு தாய் மக்கள் நாம் எண்போம்
“எங்கடா சேகர்?”
“டேய் அவன் சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்காண்டா”
“சாப்பிடறதுக்கு முன்னால்கூட கும்பிடுவோமே! இப்ப எதுக்கு?”
“இல்லைடா தத்து எடுக்க வரவங்களுக்கு இவனைப் பிடிக்கணும்ணு வேண்டிக்கிட்டு இருக்காண்டா”
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே சேகர் வந்தான். முகத்தில் சந்தோசம்.
“ சேகர்! சாமி என்னடா சொல்லிச்சு?”
“தத்து எடுக்க வரவங்களுக்கு கண்டிப்பா என்னைப் பிடிக்கும் கடவுள் என்னைக் கைவிட மாட்டார்”
மோகன் சிரித்தான்'
“ ஏண்டா சிரிக்கிறே”
“ஒண்ணும் இல்லேடா”
சரியாக பனிரெண்டு மணிக்கு ஒரு கணவன் மனைவி வந்தனர். அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிக்க, நிர்வாகி அனைவரையும் அமரச் சொல்ல, சேகர் நின்று கொண்டிருந்தான். அவர்கள் பார்வை தன் மீது பட வேண்டும் என்று . கணவன் மனைவி இருவரும் அவனைப் பார்த்து அருகே வந்தனர் சேகர் அவர்களை
தெற்றுப்பல் தெரிய சிரித்தான்.
“உட்கார்ந்து சாப்பிடுப்பா”
தலையை ஆட்டி சமர்த்தாக சாப்பிட்டான். கை கழுவி வந்தான். அவர்கள் போய் விட்டனர் .
"எங்கடா அவங்க?" சந்தேகமாக கேட்டான் சேகர்.
கவிதாவும்,மோகனும் சேகரை நடுவில் உட்கார வைத்துக் கொண்டனர்.
“அவங்க போயிட்டாங்க”
“என்னது தத்து எடுக்கலயா?”
“ சேகர்.... அவங்க தத்து எடுக்கத்தான் வந்தாங்க! பக்கத்தில இருக்கற பாலர் பள்ளியிலிருந்து.... அதுவும் ரெண்டு வயசுக்குள்ள அழகா உள்ள ஆண் குழந்தையைத் தான் எடுப்பாங்க. நம்மளை மாதிரி வளர்ந்த பிள்ளைகளை இல்லை.”
“அப்ப நாம இப்படியே இருக்க வேண்டியது தானாடா”
“ நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம்டா! உனக்கு அப்பா அம்மா மட்டும் தான் இல்லை. உனக்கு இத்தனை நண்பர்கள்,அண்ணாகள், தம்பிகள்,அக்காக்கள், தங்கைகள் இருக்காங்களேடா”
“ இது உனக்கு முன்னமே தெரியுமா? ஏண்டா சொல்லலை”
“ தெரியும். நீ ரொம்ப சந்தோஷமா இருந்தே... உன்னோட சின்ன சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை”
“அதுக்குத்தான் சிரிச்சியாடா?
நீ சாமி கை விட மாட்டார்னு சொன்னியே ....... அதை நினைச்சுத்தான்.... …



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக