அருணா ரகுராமன்
இதயத்தில் இணைந்தவளே
****************************
இதயத்தில் இணைந்தவளே என்னுயிராய் நிறைந்தவளே /
என்ன சொல்லிப் புரிய வைக்க /
என் நிலையைத் தெளிய உரைக்க /
கண்ணோடு கலந்து கருத்தினிலே உறவாடி /
எண்ணத்திலே நிறைந்து மணவாழ்வில் மகிழ்ந்தாடி /
பண்ணோடு கலந்த இனிய இசையாக /
பாடித் திரிந்த காலங்கள் மனதாட/
காலன் பிரிக்க கணநேரம் பறந்தாயே /
சட்டென விலகி சடுதியில் மறைந்தாயே /
பட்டென நீ பாதியிலே அகன்றாலும் /
பற்றது மாறாது பரிதவிப்பது உணராயோ /
காலமெல்லாம் நான் தவித்து அழ/
நாளும் பொழுதும் யுகமாய் கழிய/
பழங்கதை பேசி
பித்தனெனப் பிதற்றி/
கண் பெற்று இழந்த குருடனென /
எண்ணுகின்றேன் நாட்களை ஆருயிரே அன்பே /
அருணா ரகுராமன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக