06.02.21 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

06.02.21

அருணா ரகுராமன்

06.02.21




ஆதலினால் காதல் செய்வீர் 

*************************

கண்ணும் கண்ணும் மோதி 

கலந்து தெறித்தது மின்னல் 

ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்யும் காதல் 

ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி ஆரம்பித்தது 

அம்பிகாபதி அமராவதி எனவும் தொடர்ந்தது 

காதலன் மஜ்னுவை  பித்தனாக்கி 

பாலை வனத்தில்  அலையவிட்டது 

கன்னி லைலாவை கண்ணீரால் கரைய வைத்தது

அன்னம் சென்று அன்பை சொன்ன 

அந்த நாளைய நளன் தமயந்தி காதல் 

மலரை நிலவை தென்றலை தூதுவிட்டு 

மனதை விட்டு நீங்காத கண்ணதாசன் பாடல் 

காதல் என்ன கடைசரக்கா ? 

மோதல் இல்லாமல் முட்டி மோதி செயிக்க முடியுமா  ? 

இதயத்திலிருந்து எழுவது காதல் 

இரவல் கேட்டு வாங்குவதில்லை 

பணம் பதவி மதம் இனம் 

தாண்டிய உணர்ச்சி இது 

என்னென்று சொல்லமுடியாத எழுச்சி இது 

பருவ கோளாறு என சொல்பவரும் உண்டு எனில் 

வயதில் பழுத்த தம்பதியிடையிலும் காதல் உண்டு 

காதல் வேறு காமம் வேறு 

உடல் மட்டும் காதலல்ல 

உயிரோடு கலந்து நிற்பது உண்மை காதல் 

முகம் பார்த்தோ பாராமலோ கடிதம் மூலமோ 

முகநூலோ 

 முறிந்து போகாமல் நிற்பதே காதல் 

உயர்ந்தாலும் தாழ்த்தாலும் துணை வருவது காதல் 

வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை 

வழங்கி வளம் செய்வது காதல் 

காதல் காதல் காதல் 

காதல் இல்லையேல் சாதல் 

ஆதலினால் காதல் செய்வீர் 


அருணா ரகு ராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages