12.02.21 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

12.02.21

மலைச்சாமி


12.02.21


வரலாற்றில் இன்று – 12.02.2021


என்றும்..


அன்புடன்..


என் இனிய காலை வணக்கங்கள்...


பெப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்


55 – ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.

1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.

1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.

1818 – சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.

1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

1873 – எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.

1912 – சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.

1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.

1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

2001 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.

2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்புகள்


1809 – சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)

1809 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)

1918 – ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)

1967 – என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்


இறப்புகள்


1804 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)

1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)

2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்

2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)


சிறப்பு நாள்


டார்வின் நாள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages