23.02.21- நாடு மாறி போச்சுங்க - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

23.02.21- நாடு மாறி போச்சுங்க

அருணா ரகுராமன்

23.02.21


நாடு மாறி போச்சுங்க 

******************

பருவமழை தவறி போச்சு

பயிரெல்லாம் வீணாச்சு

வாய்க்காலும் வத்தி போச்சு 

வாங்க மாமா போயிடலாம் பட்டணம்

வாழ்க்கை இன்பம் சேத்திடலாம் நிச்சயம்


வானளவு கட்டிடமாச்சு 

வாட்ட சாட்டமா மனிசங்களாச்சு 

குட்டை பாவாடை பெண்களாச்சு

தாட் பூட்டென சத்தமிட்டு 

தொட்டு பேசும் பழக்கமாச்சு 

பாக்க பாக்க வேடிக்கத்தான் மச்சனே

இங்க ஆம்பள யாரு பொம்பள யாரு 

புரியலயே மச்சானே


மழ மேகந்தான் இருளுதுன்னு நினைச்சுகிட்டேன்

இது வாகனங்க புகையின்னு சொன்னாங்க

கம்மி கமறும்இருமலுக்கும் 

கண்டபடி காரணங்க சொல்லுறாங்க

வட்ட வட்டமா தோசய சுட்டு 

வண்ண வடிவமா ஏதேதோ கொட்டி 

வாய்க்கு நுழையாத பேரும் வெச்சு விக்கறாங்க 

வக வகையா சனங்க வாங்கி திங்கறாங்க


எங்க பாத்தாலும் ஏனிந்த கூட்டம்

இடிச்சுண்டு ஓடும் ஓட்டம்

எதுக்காக சனங்க இப்படி ஓடுறாங்க

எத பிடிக்க ஒருத்தரை ஒருத்தர் சாடுறாங்க


அண்ணாந்து பாத்தே கழுத்து நோவெடுக்குது

அடங்காத சத்தத்தினால் காதுவலி சேந்தாச்சு

கரிய புகையினால் கமறும் இருமலாச்சு

கண்டத தின்னு வயிறும் கெட்டாச்சு


நாடெல்லாம் மாறி போச்சு அத்தானே

நம்ம நடைமுறைகள் போனதெங்க மச்சானே

பட்டணம் நமக்கு வேணாம் மச்சானே

புறப்படுங்க நம்ம வீட்டுக்குத்தான் அத்தானே 

ஒருநாள் நகர வாழ்க்கையே அத்தானே

இது நரகமென காட்டிடுச்சு மச்சானே 

இனி ஒருநாளும் ஆசபடமாட்டேன் அத்தானே

இப்படி நாம் வாழ வேணாம் அத்தானே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages