28.02.21 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

28.02.21

 அருணா ரகுராமன்

28.02.21



மாத்திரை வாழ்வு 

*****************

உணவே மருந்தான நாள் மாறி /

உண்ணும் மருந்தே உணவாக ஆனது /

மாத்திரை குறைந்தாலும் உடல் நலம் /

மாத்திரை குறையுமென  நம்பும் மனம் /


வாழ்வியல் மாற  வளமைகள் சேர/

உழைப்புகள் குறைய   உடமைகள் பெருக / 

 கூட்டுக்குடும்பங்கள் மறைந்து பொறுப்புகள் நிறைந்து /

தனிமனிதனின் தீவான வாழ்க்கை இதில் /

தேவை எதுவென தேடுதலே இயற்கை /


காலையில் எழுந்துக் 

கடன்களை முடித்து /

 கடவுளைத் தொழும் கட்டுப்பாடான நிலைமை  /

உற்றார் உறவினர் உறவாடும் சேர்க்கை/

 மாறும் மனது ஆற்றும் அடங்கும் /

காலம் மாற  கடமைகள் சேர /இணையமே கதி மற்றது அவதி /

இணைந்தது மாத்திரை கிடைக்கவே நித்திரை /


அருணா ரகுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages