சு.ரவி
மரபுக் கவி எழுதுவோம்
பாடம் 1
மரபுக்கவி எழுத விழைவோர் அறிய வேண்டிய அடிப்படைகள்:
அசை: ஒரு சுவரெழுப்ப எவ்வாறு செங்கற்கள் தேவையோ அதுபோல் ஒரு வார்த்தையின் அடிப்படை உறுப்பே அசை எனப்படும்.
அசைகளால் உருவாவது சீர்.
1,ஓரசைச் சீர்: இது இரண்டு வகைப்படும்.
1.1நேரசை: ஒரு குறில், அல்லதுஒரு நெடில் தனித்தோ, ஒற்றடுத்தோ வருவது நேரசை.உ-ம்: ப, பண், பா, பால் இவை நேரசையாகும்.
நிரையசை: இரண்டு குறில்கள் இணைந்தோ அல்லது ஒரு குறிலைத்தொடர்ந்து நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வருவது நிரையசை ஆகும்.
பல,பலர், கலா, கலாம் இவை நிரையசை ஆகும்.
இவை முறையே ‘நாள்’, ‘மலர்’ என்ற வாய்பாடுகளால் குறிக்கப்படும்.
1.2. ஈரசைச் சீர்கள்;
நேரசையை ‘ அ’ என்றும், நிரைஅசையை ‘ இ’ என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது இரண்டு அசைகள்
கீழ்க்கண்டவாறு இணையும்:
அ -அ, இ-அ,அ-இ, இ-இ
அதாவது,
நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை
(உ-ம்)
கந்தா, கடம்பா, முருகா, அருள்புரி
இவற்றின் வாய்பாடுகள் முறையே
தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்
முதலிரண்டும் “மாச்சீர்கள்”
என்றும் பின்னிரண்டும் “ “விளச்சீர்கள்” என்றும் அழைக்கப்படும்.
பயிற்சி:
கீழ்க்கண்ட சொற்களை என்ன அசை என்று குறித்து, அவற்றின் வாய்பாடுகளை எழுதவும்.
வா, சிலர், கண்ணன், ராதை, ஜானகி, காதல், திருமணம், இதுவா, இலக்கணம்
( அடுத்த பாடம்: மூவசைச் சீர்கள்)
அன்புடன்,
சு.ரவி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக