19.08.21-தமிழ் தெரிந்து கொள்வோம்.: 1-மொழி முதல் எழுத்துகள் என்றால் என்ன...? - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

19.08.21-தமிழ் தெரிந்து கொள்வோம்.: 1-மொழி முதல் எழுத்துகள் என்றால் என்ன...?





அகன்


தமிழ் தெரிந்து கொள்வோம்.


= 0 = 0 = 0 = 0 = 0 =0 = 0 = 0 = 0




கொஞ்சம் தமிழ்….. கொஞ்சும் தமிழ்…


^^^^++++^^^^+++++^^^^++++^^^^




மொழி முதல் எழுத்துகள் என்றால் என்ன...?


👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁




.................................பாகம் - 01.




மொழி என்றாலும், சொல் என்றாலும், பதம் என்றாலும், வார்த்தை என்றாலும் ஒரே பொருள் தரும் சொற்கள் தான்.




ஆகவே, சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எவை எவை என்று இங்கு பார்ப்போம்.




தமிழில் ஆய்த எழுத்தையும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள் உள்ளன.




அவற்றில் பன்னிரண்டு உயிர் எழுத்துகள், பதினெட்டு மெய் எழுத்துகள், ஓர் ஆய்த எழுத்து என முப்பத்தோரு எழுத்துகள் அடிப்படை எழுத்துகளாக உள்ளன.




பதினெட்டு மெய் எழுத்துகளோடு பன்னிரண்டு உயிர் எழுத்துகள் தனித் தனியாகப் புணர்ந்து (18 X 12 = 216) இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.




ஆய்த எழுத்து எந்த எழுத்துடனும் புணர்வதில்லை. எனினும், பல நேரங்களில் மெய்யெழுத்து போலவும், மிகச் சில நேரங்களில் உச்சரிப்புக் கருதி உயிர்மெய் எழுத்து போலவும் தன்னை மாற்றிக் கொள்கிறது. ஆய்த எழுத்து மொழி முதல் எழுத்து ஆவதில்லை




ஆக, ஆய்த எழுத்து தவிர்த்து மிச்சமுள்ள இருநூற்று நாற்பத்தியாறு எழுத்துகள் அனைத்தும் மொழி முதல் எழுத்துகள் ஆகுமா…?




ஆகாது.




மெய் எழுத்துகள் பதினெட்டும் மொழிக்கு முதலில் தனித்து வருவதில்லை. ஆகவே, இருநூற்று நாற்பதாறு எழுத்துகளில் பதினெட்டு எழுத்துகளை கழிக்க மிஞ்சுவது இருநூற்று இருபத்தெட்டு எழுத்துகளே மிஞ்சுகின்றன.




மொழி முதல் எழுத்துகளை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். அவை,




01. உயிர் எழுத்துகள் மற்றும்


02. மெய் எழுத்துகள்.




வாருங்கள்… அதையும் பார்த்து விடலாம்.




முதலில் மொழிக்கு முதலில் வரும் உயிரெழுத்துகளைப் பார்ப்போம்.




01. உயிர் எழுத்துகள்.




அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - என்பன பன்னிரண்டு உயிர் எழுத்துகள்.




உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் முதலில் வரும்.




உ - ம்:




அ - அம்மா, அணில், அருமை, அழகு, 


ஆ - ஆடு, ஆட்டம், ஆதரவு, ஆரணங்கு, ஆசை, 


இ - இலை, இடம், இரவு, இரை, இடக்கு,


ஈ - ஈக்கள், ஈகை, ஈறு, ஈதல், ஈச்சம், ஈர்ப்பு.


உ -  உரல், உறக்கம், உணவு, உறவு, உடை, 


ஊ - ஊசி, ஊக்கம், ஊற்று, ஊதல், ஊட்டு, 


எ -  எழுத்து, எத்தனை, எப்படி, எறும்பு, 


ஏ - ஏற்றம், ஏக்கம், ஏழு, ஏதிலி, ஏணி, ஏச்சு, 


ஐ - ஐந்து, ஐயம், ஐயா, ஐக்கியம், ஐப்பசி, 


ஒ - ஒன்று, ஒன்பது, ஒட்டகம், ஒட்டடை, 


ஓ - ஓடு, ஓது, ஓட்டம், ஓடம், ஓரை, ஓர், 


ஒள -  ஒளட்டு, ஒளடதம், ஒளதா, ஒளதாரியம், ஒளவியம், ஒளவை.




ஒளட்டு - ஒரு வகை வாண வெடி.


ஒளடதம் - மருந்து,


ஒளதா - யானை மீதிருக்கும் அம்பாரி.


ஒளதாரியம் - உதார குணம்.


ஒளவியம் - பொறாமை, அழுக்காறு.


ஒளவை - நம்ம ஒளவைப் பாட்டி.




உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழி முதல் எழுத்தாக வரும்.




அடுத்து மொழி முதலில் வரும் மெய்யெழுத்துகளைப் பார்ப்போம்.




..............- "அகன்" @ அனுராதா கட்டபொம்மன்.


...............................................................................18.08.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages