<><><><><><><><><><><><><>
"திருக்குறள் கவிதை"
தினம் ஒரு அதிகாரம்
பொருளியல்-- அரசியல்
அதிகாரம் -- 48
" வலியறிதல் "
•••••••••••••••••••
<><><><><><><><><><><><><>
வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியதுவும்;
வினைத்துணையும், சுர்தூக்கிச் செயலங்கு பட்டிடணுமே!
வினைவழி முறையறிந்து, செய்வோர்க்கு இயலாத;
வினை என்று எதுவும் இல்லையே!
இல்லாத வலிமை, எதுவென்று அறிந்து;
இல்லையென முடிக்கும், தன்வலி தானறிந்து;
இல்லாது முடிக்காது, இடையில் விட்டொழிவார்;
இல்லாத தன்வலிமை, அறியாத பலருமே !
பல்லாற்றல் ஒத்திடாது, தன்வலியும் உணராது;
பலமின்றித் தனைவியப்பான், கெடுவான் விரைந்து!
பலமில்லா மயிலிறகாயினும்; மிகுந்திடின் வண்டியில்;
பலங்குன்றி அச்சதுவும், போகும் முறிந்தே!
முறிந்திடும் உச்சி ,
மரமதில் ஏறியபின்;
முறிந்திடும் என்றுணரி, மேலும் முனைபவன்;
முறிந்திட உயிருக்கு, ஆபத்தைத் தேடுபவனே!
முறித்திடணும் திறமைக்கு, மீறிய செயல்களையே !
செய்திடணும் உதவி, தன்வரவு நன்கறிந்து!
செய்வாழ்வு நெறியாகிப், போற்றிடலாம் பொருளதனையே!
செய்செலவு பெரிதாக, இல்லாது போகிடினும்;
செய்திட வருவாயும், சிறிதாக இருந்தாலுமே!
இருந்திடும் வாழ்வதும், இல்லாது அழிந்திடும்;
இருந்திடும் வரவறிந்து, செய்யாத செலவினால்!
இருந்திடும் பொருள் அறியா, உபகாரமதும்;
இருந்திடாச் சொத்தாய், விரைவில் அழிபடுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக