Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 698 | கல்விக் கற்றவளும் அடுப்பனைச் சுற்றுகிறாள்// ஆயுள் கைதியாய் ஆண்டவன் படைத்தானோ// தாலாட்டு ஒருபக்கம் கணவன் மறுபக்கம்// வீட்டு வேலைகளில் விடுப்பில்லா தொழிலாளிகள்// தேனி ஆ.சுந்தர் | |
2 | 261 | பெண்கள் நாட்டின் கண்கள் என்பர் இவர்கள் இன்றேல் உலகில் ஏதுமில்லை கணவரை மனதிலும் குழந்தையை வயிற்றிலும் சுமக்கின்ற குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கிகள் ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
3 | 697 | வெளியில் காட்டா வலிகளைச் சுமந்து / தேவைகள் யாவும் செய்து மகிழும் / அம்மா அப்பா உறவுகள் என்றும் / தன் சுகம் துறந்த சுமைதாங்கிகளே...! முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை... | |
4 | 326 | சுமையோடு சுமையாக வாழ்கின்ற வாழ்க்கையிலும்// இமைபோல நம்மைக்காக்க தாயன்றி வேறுண்டோ// அமைந்திட்ட வாழ்வினிலே குமையாது வாழ்ந்திடவே// உமையவளின் மறுபிறப்பும் அவளன்றி வேறுண்டோ// நாகராசன் சின்னசாமி | |
5 | 344 | பறக்கும் பட்டாம்பூச்சி நானென்று நினைத்தாயோ? மாடு... கம்பீரமான காளை மாடல்ல.. கரத்தை இழுக்கும் கறவை மாடு வாழ்ந்திடப் போராடும் பசு மாடாவேன்! #எமா# | |
6 | 462 | வாழ்க்கை என்னும் கடின பாதையை/ நாம் இலகுவாகக் கடந்து செல்ல/ தம்மையே அர்ப்பணிக்கும் தாய்,தந்தையர்/ கடவுளை மிஞ்சிய சுமைதாங்கிகள் அன்றோ/ தயா | |
7 | 614 | வளர்த்து படிக்க வைத்த மகன்/ மருமகளின் உந்துததால் தனிக் குடித்தனம்/ மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன்/ அடைக்க திணரும் பெற்றோர்களே சுமைதாங்கிகள்/ விஜயலட்சுமி | |
8 | 715 | சுகமான சுமையை சுமந்தாள் கருவில் உளிகளின் வலிகளில் சிற்பமாய் சிரிப்பாள் சுவையான உணவாக்குவாள் சமையலைறச் சிறையில் முகம் சுளிக்காத அன்பைப் பரிமாறுவாள். அ.உமர்பாருக். | |
9 | 482 | பெண்கள் படும் வேதனை அதிகமே / சமையலும் நாளும் செய்கிறாள் அவளே / குழந்தையும் கணவனையும் கண்ணாகவேகாத்திடுவாள் துயரை வெளியில் சொல்லாத சுமைத்தங்கிகளே . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
10 | 201 | பெற்றவரே சுமைதாங்கிகள் பாடுபட்டுப் பெற்றெடுத்த / பிள்ளைகளைப் படிக்கவைத்து கடனுக்குமேல் கடனாளியாகி/ திருமணமான சிலநாளில் தனிக்குடித்தனம் மனனேக/ கடனடைக்க முடியாமல் சுமைதாங்கியாய் அன்னைதந்தை// புவனா சற்குணம் கனடா | |
11 | 652 | பெண்களே வீட்டில் மாபெரும் சுமைதாங்கிகள்./ எந்த ஊரடங்கிலும் விடுமுறை இல்லை./ உடல்நிலை குன்றினாலும் சமையல் நிறுத்தப்படவில்லை./ எல்லாம் தோள்களில் சுமக்கின்றனர் அன்னைமார்கள்./ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
12 | 463 | அன்னையின் கருவறையில் சுமையாய் நான். வாழ்க்கைத் தடமே சுமையுடன் நகரும். இல்லறச் சுமையே இன்பம் தந்திடும் ! இறுதியில் நால்வர் சுமக்க நாம். அரவிந்தன் தஞ்சை | |
13 | 220 | இல்லற இனிமை தவறாது நகர்த்தும்.. பெரும்பணி செய்துடும்,பேதையிவள் பரிதாபம்.. பகலெல்லாம் துளி ஓய்வின்றி கோதையிவள்.. கோடுத்த உதிரம் உயர்வென்று யாருணர்வர்.. வளருங்கவி அமுதன் | |
14 | 710 | கட்டிய நாள்முதல் கணவனைச் சுமக்கிறாள்// பத்து மாதங்கள் கருவினைச் சுமக்கிறாள்// தன்னை வருத்தினும் தரணியே தாங்குவாள்// மரணம் வரைக்கும் சுமைதாங்கி பெண்களே// அம்பிகா ஸ்ரீகுமார் | |
15 | 483 | அன்னையாய்த் தங்கையாய் அக்காவாய் மனையாளாய்/1 பன்முக உறவுகளாய் பாரத்தை சுமப்பவர்கள்/ பெண்களே சுமைகளை பெரிதாகச் சுமக்கின்றார் தன்னலம் கருதாதப் பெண்களே சுமைதாங்கிகள் //4 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
16 | 605 | சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதிடுவாள்/ தமைநம்பிக் காத்திருக்கும் குடும்பத்தைச் சுமந்திடுவாள்/ இமைக்குள்ளே வைத்தேதான் இனிதாகக் காத்திடுவாள்/ சுமைதாங்கியாய் இருந்தே சுகத்தைமட்டும் தந்திடுவாள். மஞ்சுளா ரமேஷ் | |
17 | 428 | கதிருதிக்க விழித்தவளும் கருக்கலிலே படுக்கும்வரை தன்னுடம்பை மெழுகாக்கி தளர்வினிலும் தைரியமாய்க் குடும்பமென்ற கோவிலைத் தனியாளாய்த் தாங்கிடுவாள் பிரதிபலன் பாராத பெருமைமிகு மூதாட்டி.. சுப்பிரமணியன் அன்புமலர் | |
18 | 618 | நாடு முழுவதும் விடுமுறை வந்தாலும்/ நாளொன்று கூட ஓய்வின்றி உழைத்து/ நலமுடன் நாம்வாழப் பாடுபடும் பெற்றோரே/ நம்மைத் தாங்கும் சுமை தாங்கிகள்/ ஔவை. | |
19 | 238 | மணவாழ்வின் பரிசாக மணியாக மகன்கள்../ தோளிலும் மார்பிலும் தாங்கியச் சுமைகள்.../ மணமுடித்தும் மருமகளையும் சுமக்கவே சுகமே../ மகனின் வாரிசினையும் வாரியணைத்து சுமப்பேனே../// இளந்தை சேது | |
20 | 221 | குடும்பம் என்னும் கோயிலைச் சுமந்து குழந்தைகளை வளர்த்து கொடையாக நாட்டுக்குத் தந்திடும் பெற்றோர் தம்வாழ்வுடன் குழந்தைகளையும் தத்தமது பேரன்பேத்திகளையும் சுமைதாங்கி வாழ்ந்திடுவர் புஷ்பா கிறிஸ்ரி | |
21 | 266 | சுமந்திடும் பாரம் சென்றிடும் தூரம்... சுகந்தரும் கீதம் இல்லாளின் நாதம்... இன்முகம் பூக்கும் இல்லமது சிறக்கும்... சுமைதாங்கி சுமக்கும் சுகமான சுமையே... ...பூமகன்… | |
22 | 258 | ஈரைந்து திங்கள் கருவில் சுமைதாங்கி/ காலமெல்லாம் நெஞ்சிலும் சுமந்து- குடும்பத்தைத்/ தோளில் தாங்கும் பெற்றோரை- முதியோர்/ காப்பகத்தில் விடாது, காக்கணும் பிள்ளைகளே! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26. | |
23 | 348 | கடலுக்கு மீன்களைச் சுமக்கவே பாரமில்லை // தாய்மைக்குத் தாக்குதல் இயல்பாகவே தூரமில்லை // கவலைகளை ஒட்டாது அகற்றும் பெண்மைக்கு // மிதவைத் தோணியாய் நிற்போமே நாமே // உடுமலை ராமர் | |
24 | 616 | உயிரளித்த உன்னத பொக்கிசங்களே சுமை தாங்குவதில் நிகரில்லாதவர்களே உங்களுக்கு சேவை செய்ய பூரிப்படைகிறேன் போதும் சுமந்தது கொடுத்திடுங்கள் என்னிடம். கா.கேமலாரூபினி | |
25 | 445 | இமைகள் மூடாமல் சுமைகள் தாங்கி// வீட்டு பாரமெல்லாம் தன்னுள் வாங்கி// சமைக்கும் பொழுதெல்லாம் கனலை தனதாக்கி// விழுதாகி சுமக்கிறாள் சுமையை சுகமாய்// மு.பிரபு, நெருஞ்சனக்குடி | |
26 | 434 | தனக்கென வாழாதத் தியாகச் செம்மலாய்/ தன்னலம் கருதாது உழைக்கும் வள்ளலாய்/ நம்பிக்கை விதைத்திடும் கலங்கரை விளக்கமாய்/ கம்பீரமாய் நடைபோடும் பெற்றோரே சுமைதாங்கிகள்// மீனாட்சி சுந்தரம் | |
27 | 345 | இந்திய நாட்டின் நிரந்தர சுமைதாங்கிகள் எங்கள் உடையோ கோவணம் மட்டுமே மழையாலும் பாதிப்போம் வறட்சியாலும்பாதிப்போம் உலகிற்கே உணவளித்து பசியோடு விவசாயிகள் வைர. நாகராசன். | |
28 | 280 | பசியென்று வரும் பிள்ளைகளுக்கு பாசத்துடன்// உணவளித்து குடிகார கணவனின் அடிகளுடன்// வீட்டு வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்// விடிவெள்ளி மங்கையர்கள் எல்லோரும் சுமைத்தாங்கிகள்// கோட்டீஸ்வரி ராமசாமி | |
29 | 450 | கண்ணுக்குத் தெரியாத குடும்பச் சுமைகளையே/ சுகமாக எண்ணியே சுமக்கின்றழபெற்றோரின்/ அன்பை நாமறிந்துரதள்ளாமையும் இயலாமையும்/ அவர்ளை வாட்டுகையில் கண்ணாக காத்திருப்போமே! ரேணுகா சுந்தரம் | |
30 | 688 | தாய்மை கருவில் இருந்து பிறப்புவரை// பிள்ளைகளை சுமந்து தாலி இட்டவனை// நெஞ்சில் இருத்தி காலம் பூராவும்// உயிர் பிரியும்வரை சுமைதாங்கியாக அம்மா// கீத்தா ராமன் | |
31 | 347 | இல்லத்தைச் சீராக்கி, இதயத்தை நேராக்கி/ உண்பதற்கு சோறாக்கி, அறிவினைக் கூராக்கி/ அறும்புகள் செய்யும் குறும்புகள் ரசிப்பாள்/ சுமைதாங்கியே குடும்பம் நிமிர்ந்திட வைப்பாள்/ வேங்கடலட்சுமி ராமர் | |
32 | 259 | கணவர் பிள்ளைகளை அன்பாய் பராமரித்து / வெளியில் வீட்டில் வேலைகளை கவனித்து / சூழ்ந்த சொந்தங்களை குறைகளின்றி அணுசரித்து / மெழுகாய் ஒளிரும் பெண்கள் சுமைதாங்கிகளே.....!! / ஜெயலெட்சுமி | |
33 | 204 | பெண்ணாய்ப் பிறந்தே கண்ணாய்க் குடும்பத்தை// காத்திடும் கரங்கள் கடவுளின் வரங்கள்// துன்பத்தை தோளோடு சுமந்தே பொறுத்து// தாங்கிடும் சுமைதாங்கிகள் அர்ப்பணிப்பின் அகல்விளக்குகள்// ஆஸாத் கமால் | |
34 | 243 | பூமி அன்னைக்கு மரம் பாரமா // கொடிக்கு காய் கனி பாரமா // கடலுக்கு கொத்தளிக்கும் அலை பாரமா // தாய்க்கு பெற்றெடுத்த குழந்தை பாரமா / இந்திரா ஆனந்தன் | |
35 | 674 | பிறந்ததும் துறந்திட புகுந்ததும் புதிதாகிட// முடிச்சிட்ட மூன்றாமவன் முதலும் முழுமையுமாகிட// கட்டிலும் கணக்கிட தொட்டிலும் தொடர்ந்திட // சுகமான சுமைத்தாங்கிளும் பெருமைகளின் சிகரமே// இரா.தேவி | |
36 | 716 | பெற்ற பிள்ளைகள் போற்றவும் இல்லை // 1 தினமும் அழுத்துது குடும்ப தொல்லை // 2 படுத்தால் உறக்கம் வருவதும் இல்லை //3 உண்ணும் உணவு என்றும் கவலை // 4 - நாகை. ஹாஜா | |
37 | 668 | வியர்வை முத்துகளை நிலத்தில் வளமாக்கியும்/ வாழ வழியின்றி பட்டினியால் கலங்கும்/ உழைப்பவனின் பாரம் அறியா தேசத்தில்/ இறுதிவரை சுமை தாங்கியாகவே வாழ்கிறான்/ ஏஞ்சல்சோபிதா | |
38 | 722 | இதயத்தை தாங்கி இன்பத்தை தாங்கி/ குடும்பத்தை சுமந்து பலவலிகளை கடந்து/ இன்னல்களை இடையூறுகளை தாங்கும் சுமைதாங்கி/ வாழ்வில் போராடும் பெண்ணே சுமைதாங்கிகள்/ சுஜாதா அருணாச்சலம், திருப்பூர் | |
39 | 388 | காணாமல் போன சுமைதாங்கிக் கற்களைக் காணலாம் குடும்பங்களில் கண்ணியமான பெண்களாய்.. கொண்டவன் பிள்ளைகள் பேணிடப் பாடுபடும் குடும்பச் சுமைதாங்கி ஆகிடும் தியாகிகளாய்...! செண்பக ஜெகதீசன்... | |
40 | 207 | காலமெல்லாம் சுமக்கும் கருவறைப் பெட்டகம்/ பிள்ளைகளைச் சுமந்த காலங்கள் சுகமே/ சோகங்களைச் சுமந்த நாட்களும் வரமே/ சுமைகளைச் சுமக்க இதயத்திலும் இதமே/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
41 | 317 | மொத்த பாரத்தைச் சுமக்கும் பெண்கள் முகத்தில் கலக்கம் இல்லாமல் அவர்கள் குழந்தைகள் வளர்த்து ஆளாக்கிய மனங்கள் குதூகலம் இல்லாமல் இருக்கும் தெய்வங்கள்... க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
42 | 562 | பெண்ணே நீ பூமித்தாயை போல / அவள் அனைத்து உயிர்களையும் சுமப்பதுபோல்/ நீ குடும்பப் பொறுப்பை சுமக்கிறாய்/ நீயும் அவளும் ஒன்றுதான் இவ்வுலகில்/ பா.பத்மநாபன் | |
43 | 709 | வானவில் உன் முமுதுகில் அமர்ந்து // வலிகளே வாழ்க்கையென வரி விதித்து // பிணி மூப்பு சாக்காடு பரிசுடன்// கருவற கல்லறை பயணத்தில் அம்மா// தாழை. இரா. உதயநேசன் | |
44 | 373 | இளமைக் காலம் நலமாய் இருக்க/ துன்பம் களைந்து மகிழ்ச்சி கொள்ள/ கடைசி நேரமதில் தனியாக இருந்து/ சுமையைத் தாங்கும் வயதான காலங்கள்!! ஜயந்தினி வாகீசன் | |
45 | 564 | சுகமான சுமைகள் தாங்கிடும் இதயம் எதையும் ஏற்கும் என்றும் அன்புடன் வளமாகும் வாழ்வில் ஒளிதரும் விளக்கு உளமார வாழ்த்துவோம் உத்தரத்தில் வைத்தே. இராசையா கௌரிபாலா. | |
46 | 707 | ஐயிரு திங்கள் அடிவயிற்றில் சுமப்பவள்/ மணந்த நாள்முதல் மார்பில் சுமப்பவள்/ மாளும் நாளதில் மடியில் சுமப்பவள்/ கருமுதல் கடைசிவரை பெண்ணே சுமப்பவள்/ ✍️பா.ச.கண்ணன் | |
47 | 568 | பெண்மைக்கு பத்துமாதச் சுமையும் பேரானந்தமே// ஆண்மைக்கு அடித்தளச் சுமையும் ஆனந்தமே// பிள்ளைக்கு புத்தகச் சுமையும் பூரிப்பாகுமே// பூமியன்னைக்கோ புரிதலில்லா மக்கள் சுமையாகுமே!! கு.ஜெயக்குமாரி/ஜெய் | |
48 | 250 | வீடெனும் அஃறிணைப் பொருளுக்கு இவர்கள் இல்லமெனப் பெயர் பெற்றிடவே உழைத்தனர் வரும் துன்பமதை சுமந்து மகிழ்வையே வளரச்செய்த பெற்றவர்களே என்றும் சுமைதாங்கிகள் செல்வலஷ்மி | |
49 | 613 | எத்தனை பெற்று சுமந்தால் என்ன // உழைத்துருகி உருக்குலைந்தே ஓடாய்ப் போன// சுமைதாங்கி கண்ணீரும் சுமைகளும் மாறாது// எந்நாளும் உனக்கு என்றுனக்கு விடிவு..// ஜெயாசந்திரமோகன் | |
50 | 244 | பூமாதேவியின் மகள்களும் பிறந்தனரே சுமைதாங்க // இறுதிவரை தியாகமாய்க் காப்பற்றுவதில் தெய்வங்கள் // படைத்தவனும் கல்மனதால் படைத்திட்டப் பெண்களையும் // மதிக்கும் பண்பு மானிடர்களுக்கும் பிறக்காது // கவிஞர் கோவை செல்லப்பன் | |
51 | 578 | மணநாள் தொடங்கியே வாழ்நாள் வரையிலும்// குடும்பத்தைக் காத்திடும் சுமைத் தாங்கிகள்// வையகம் போற்றிடும் பெண்மையின் தியாகத்தை// விடியலும் தோற்றிடும்ரதாயவள் விழிப்பிலே// ...கவியாசகன்...!!! | |
52 | 680 | மின்னலான பாய்ந்த கல்லை தேடிப்பிடிப்போம்// ஆண்மைக் கொண்டு வெட்டித் தீர்த்தோம்// எரியும் நெருப்பை வேடிக்கைப் பார்போம்// சுமைத் தாங்கிகள் கனவோடு களைகிறார்கள்... மா.ஜீவன்ராஜ் | |
53 | 692 | சுமக்க வேண்டிய கனவுகளைப் புதைத்து / விட்டு சுமத்திடும் சுமைகளைத் தாங்கிடும்/ தூணாகிறாள்! உள்ளத்தில் எழும் ஆசைகளுக்கு/ உறக்கம் தந்துவிட்டு உறங்காமல் பாடுபடுகிறாள்! முனைவர்.சு. சித்ரா , கரூர் ,தமிழ்நாடு | |
53 | 269 | தாய்மையின் மெல்லிய பிஞ்சு கரங்கள் நோகினும் வலியால் தொடரும் பணிகள் காணின் கண்கள் கலங்குதே நீரால் சுமையை தாங்கும் தாய் தேய்வமே..!! ஆலங்குளம்,சொ.செ.சுப்பிரமணியன் |
திங்கள், 3 ஆகஸ்ட், 2020
01.08.20-சுமைதாங்கிகள்
Tags
# கவிதை போட்டிகள்
# நறுக்கென்று நாலுவரி
# முடிவுகள் நிலுவை
Share This
About பாலா திரு
முடிவுகள் நிலுவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக