தொடர்-1.பூக்களின் காதலன் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தொடர்-1.பூக்களின் காதலன்

பூக்களின்_காதலன்

தொடர்கதை



12.08.20


அந்த அழகிய மாலைநேரம் மேகமூட்டம் தன் ஆளுமையை வானத்தில் செலுத்திக்கொண்டு பகலை இருட்டாக்கத் துவங்கியது  ஆகாய அளவு உயர்ந்த மரங்கள் மட்டுமே அதிகமாய் இருந்த அந்த சாலையின் ஓரம் வெகு கம்பீரமாக ஒரு பள்ளி கட்டிடம் அநேகமாக வெள்ளைக்காரர்கள் கட்டிவிட்டதென்றே சொல்லலாம் .. இந்த கால கட்டிடக் கலைக்கு சவால் விடும் வகையில் இருந்தது .. அதன் முகப்பு சுவற்றி வளைவாக ஓரு சிமண்ட் பலகையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்று கேரள மொழியில் அழகாய் எழுதியிருந்தது .. 

    

பள்ளி இருக்கு சாலையில் நான்கே கடைகள்தான் அங்கேயே வீடுகட்டி வாழ்ந்துவரும் பாபு சேட்டன் பேக்கரி  .. அங்கே சேட்டர் போடும் சிற்றுண்டி யாவுமே தரமானவை ஆகையாலே பல வருடமாக வியாபாரம் சரியாமல் இருக்கிறது குறிப்பாக சேட்டன் காலையில் போடும் சமோசாவின் ருசியும் .. மாலையில் போடும் வெங்காய பக்கோடா வாசனையும் யாவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது .. அதுக்கும் கொஞ்சம் தள்ளி ரேகா பேன்ஸி ஸ்டோர்ஸ் .. பெண்கள் பள்ளியென்பதால் என்றும் அக்கடையில் கூட்டம் அலைமோதும் அடுத்து இடது புறம் ஒரே ஒரு ஹோட்டல் சூடான சமையல் இல்லையென்றாலும் எந்நேரமும் சாப்பாடு உறுதி .. 


  அடுத்ததாக பள்ளிக்கு நேர் எதிரே ஒரு பூக்ககடை பெண்ணுக்கும் பூவுக்கும் தொடரபை புரிந்த தியாகு சேட்டான் பத்து வருடத்திற்கு முன் போட்ட கடை அது .. அழகழகான பூக்கள் அனைத்து நிறங்களிலும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் .. வர்ணித்தது போதும் கதைக்கு போவோவ் .. 

  

  யடோவ் கிருஷ்ணா மழை வரும்போலுண்டு டா .. என்று நம் கதையின் நாயகன் கிருஷ்ணாவை எச்சரித்தார் அவனின் சொந்த தாய் மாமன் தியாகு .. கிரிஷ் பாதி தமிழ் பாதி மலையாளம் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன் டைம் பாசுக்காக பூக்கடை வைக்க நினைத்து பார்ட் டைம்மாக மாமா கடையில் பூக்களின் காதலனாக வியாபாரம் செய்து வருகிறான் ..

 ஒல்லியான தேகம் 

  எதார்த்தமான பேச்சு 

 சிரித்தால் சிரிப்பை அழகு படுத்தும் அவன் சிங்கப் பல் .. இவ்வளவு தோரணையான ஒரு இளம் வாலிபன் பெண்கள் பள்ளியின் எதிரிலுள்ள பூக்கடையில் ... !! 


 பார்ப்போம் அடுத்தது என்னென்ன நிகழப் போகிறது என்று ... 


 *** தொடரும் ****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages