Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 450 | தரையிலே வாழ்கையில் நல்லவராய் வாழ்ந்திடு! நல்லதையே செய்திட விரை மூடாதே பாவத்தின் திரை! படியாதே வாழ்க்கையிலே பாவத்தின் கரை! ரேணுகா சுந்தரம் | |
2 | 434 | தரையில் விரிப்புகளாய் நாற்றுகளை விதைத்து/ விரைவில் வளர்ந்து நிமிர்ந்துத் தலையாட்ட/ திரையாய்க் காத்திடும் உழவரின் வாழ்க்கை/ கரை சேரும் நாளென்று எதிர்பார்ப்பில்// மீனாட்சி சுந்தரம் | |
3 | 210 | ##தரையில் வாழ்ந்திடத் துன்புறும் மனிதர் #விரைந்து செல்வம் தேட #திரை கடல் ஓடினால் #கரை சேருமே வாழ்க்கைப் படகு திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
4 | 555 | தரையிறங்கி வந்த வெள்ளி நிலவே // விரைந்து வருவாய் உந்தன் // வெட்கத்தின் திரை விலகியே // இருவரும் வாழ்க்கையின் கரை தொடுவோமே // ரா.ரேகா ராஜகுமார். | |
5 | 221 | தரை தொட்டு கிடக்கும் கூந்தல் விரைவாக நடக்கும் வேளைகளில் திரை போட்டுக் காட்டும் கரையில்லா அழகின் காவலில்லா காவியம் புஷ்பா கிறிஸ்ரி | |
6 | 461 | தரையினில் வாழ்க்கை தமிழோடு இருக்கட்டும். விரைவாய் செயல்படு சிறக்கட்டும். திரையிடு திசையது எங்குமே கரையொன்றும் காணாத கடமை ஓங்கவே. கோ அருச்சுணன் | |
7 | 674 | தரையில் வாழ தடுமாறும் மனிதா// விரைந்து வருவாய் மதுக்கடைக்கு// திரையரங்கு தினமும் தேடியே// திருந்தாத நீயுமே கரைசேர காலமுண்டோ// இரா.தேவி | |
8 | 726 | தரையிலே தவழ்ந்து தாயிடம் வளர்ந்து/ விரைவான வாழ்க்கையினை தேடி/ திரையாக முகமூடி அணிந்து/ கரைகிறோம் இறுதியில் பிடி சாம்பலாக/ -காளிராஜ்பாலகணேஷ் | |
9 | 727 | தரை(யில்) தவழ்ந்த குழந்தைப் பருவம் கடந்து விரை(ந்து) வளர்ந்து பருவம் அடைந்து திரை(யில்) தோன்றிய அழகிய சித்திரமாய் கரைசேர்ந்தாய் மணப்பெண்ணாய் திருமணம் புரிந்து.. சுசி | |
10 | 580 | தரையினில் வீழ்ந்த விதையினைப் போலே// விரைவில் எழுவோம் தமிழர்// திரைகடலோடியும் திரவியம் தேடி// கரையினை சேர்வோம் விடிவு பெற்றே!// சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய். | |
11 | 749 | தரை (யது) கொண்டு உழவது செய்வோம் விரை(ந்து) வாரீர் தோழர்களே! வறுமைத் திரை(யது) கிழித்து வெற்றிக் கரை(யது) அடைய வாருங்கள் க.மூ.முகம்மது றிஸ்மி | |
12 | 425 | தரை மேல் பிறக்க வைத்தான் விரைவாக நீயும் வளர்ந்தாய் திரையிலும் அழகு மின்னியது கரை புரண்டோடும் வாழ்வுக் காலமெல்லாம் கலாகண்ணன் | |
13 | 751 | தரைத் தொட்ட என் விரலை விரைந்தோடி வந்து இருகணைத்து திரை மூடி என்னை கரை சேர்த்தாய் கள்வனே கல்வா திருமதி . டேனியல் | |
14 | 734 | தரையை தொடாத நிலவு ..போல........ விரைந்து செயல்படாத அரசுஎந்திரம்............ திரையின் காட்சி போல ஆட்சி........ கரையேறுவானா பாமரன்.............. ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன் | |
15 | 482 | தரையிலே பொறுமையுடன் வாழ்ந்திடவும் பழகிடு ! உழைப்பு ஒன்றே விரை ! இணையாக் கல்வி திரையில் ! கரைப் படியாத கையால் உயர்ந்திடுவாய். தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
16 | 238 | #தரையில் தாயால் உயிர்ப் பெற்று../ #விரைவாய் செல்வத்தை சேர்த்து../ #திரையின்றிப் பகிர்ந்தேன் உறவோடு.../ #கரை சேர்ந்தேன் வாழ்வின் முழுமையோடு..// #இளந்தை சேது | |
17 | 386 | தரைமேல் பிறந்தாய் தகைமை கொண்டாய்/ வாழ்வில் வளம்பெற விரை/ வறுமைக்குப் போடு திரை/ கருத்தாய் உழை கரை சேர்ந்திடவே/. தென்கரை தாயுமானவன். | |
18 | 722 | தரையில் நின் பாதம் பதிந்திட/1 விரைந்து வந்திடு கருவறைக்கு/ திரையில் தாயாக மிளிர்ந்திட/ கரைந்திட்ட என் மலடி கனவுகள்/ சுஜாதா அருணாச்சலம் | |
19 | 614 | தரையில் பிறந்த மீனவன் நான்/ படகில் விரைந்தேன் கடலுக்கு/ திரை கடல் ஓடியும்/ திரவியம் தேடி கரை சேர்ந்தேன்/ விஜயலட்சுமி | |
20 | 259 | தரையில் விழுந்த மீனாகத் தவித்திருக்கிறேன்.../ விரைவில் முடிவை எதிர்பார்க்கிறேன்.../ மனத் திரை விலக்கிடு.../ கரை காண காலம் தள்ளாதே...!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
21 | 747 | தரை த்தட்டிய கப்பலென நிற்காதே// விரை நடையில் புறப்படு// திரை விலகும் வழியில்// கரை ச்சேரும் தடுமாறும் வாழ்க்கை// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
22 | 347 | தரை தொட்டு வளர்ந்து நிற்கிறோம்/ விரைவாய் உச்சத்தைத் தொடுவோம்/ திரைகளை விலக்கியே உண்மையுணர்/ கவலையே இல்லாமல் கரை தொடலாம்/ வேங்கடலட்சுமி ராமர் | |
23 | 207 | தரையில் கிடந்த தங்க எழுதுகோலை/ விரைவாக எடுத்தே வியக்கும் சிந்தனையால்/ திரைக்கதையாய் எழுதி திறம்பட முடித்தேன்/ கரைகண்ட கப்பலாய் கனவில் மகிழ்ந்தேன்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
24 | 743 | தரை இறங்க வேண்டிய விமானம்/ பள்ளம் நோக்கி விரைந்தது/ மழையிலே பனித் திரை/ கரை சேரத் துடிக்கும் பயணிகள்/ இளங்கோ | |
25 | 698 | தரையில் விழும் ஆலம் விழுதாய் விரைந்தே கரம் பிடிப்பேன் கடலில் எழும்பும் திரையாய் வாரி அணைத்து கரையில் சேர்த்திடு தேனி ஆ.சுந்தர் | |
26 | 692 | தரையில் விழுந்தாலும் வித்தாய் எண்ணியே / விரைந்து விண்ணோக்கி வளர்ந்திடு!/ திரையும் அலையொலியில் புகழந்திடுமே!/ கரையினில் சாதனைச் சுவடுகளைப் பதித்திடுமே!/ முனைவர்.சு. சித்ரா , கரூர்,தமிழ்நாடு | |
27 | 261 | #திரை மறைவில் நடைபெரும் குற்றங்கள் #விரைந்து நீக்கப்பட வேண்டுமென #கரை ஓரம் வசிப்போர் #தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
28 | 732 | தரையில் இருந்து கடலுக்குள் சென்றவன்/ விரைந்தான் மீன்களைப் பிடிக்க/ வலையெனும் திரையில் சிக்கின/ மகிழ்வுற்றான் கரை சேர்ந்து/ கீதாஞ்சலி | |
29 | 21 | தரையில் நிற்கும் தங்கத் தாமரையே/ விரைய எண்ணுகிறாயோ புக்ககம்/ திரை மறைவில் பார்க்கிறாயோ/ கரையில்லா காதலனை... அன்பின் மணவாளனை. #தனம்_மீனாட்சிநாதன் | |
30 | 588 | தரை தொடும் பின்னியக் கூந்தல்! // விரைபடும் என் மனக் கற்பனை. // திரையிட்ட முகத்தைக் கான, கரையாய் யெனை ஏற்பாய். // ~~பாரிஉமா. சர | |
31 | 216 | தரைத்தளம் நோக்கிய தளர்வற்றப் பயணம்// விரைவாக செயல்படும் எந்திரமாய்// திரையிட்ட திறனென்று நிறுவி// கரைசேரப் போகிறேன் தினமும் வேகிறேன்// அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி. | |
32 | 706 | தரையில் தத்தி நடந்த மழலையை/ விரைந்து தூக்கினாள் தாய்/ திரை மறைவில் மழலை/ கரை காணா இன்பம் தாய்க்கு/ மாயாதேவி,சென்னை | |
33 | 668 | தரையில் ஆற்றலுடன் வீசும் காற்றே/ விரைந்து தொடும் மேகமதை/ திரைக் கொண்ட கடலுமே/ கரைத் தொடாத நேரம் உண்டோ/ ஏஞ்சல்சோபிதா | |
34 | 201 | தரை இறங்கும் நேரம் விமானம்/ விரைவாகக் கீழே திரும்பியது/ திரையில் எதுவும் தெரியாததால்/ கரை சேர்க்க முடியாது தடுமாற்றம் // புவனா சற்குணம் கனடா | |
35 | 348 | வரம்பறியா கப்பல் தரை தட்டும் // விரைவாய் முனை முட்டும் // கடலும் திரை விலக்க // பாதுகாப்பாய் அணைத்துச் சேர்க்குமே கரை // உடுமலை ராமர் | |
36 | 226 | தரை அதுவே தளம் நமக்கென/ / விரைந்து நீ செயல்படு/ / திரை எதையும் கோராதே/ / கரை படியா வாழ்வதனை வாழு// இராம.சுதாகரன்.சென்னை.. | |
37 | 517 | தரையில் பூத்த புதுத் தாரகையே/ விரைந்தே மலரும் நறுமுகையே/ திரைகள் விலகும் வருங்காலம்/ கரை தாண்டி இணை சேர்வோம்/ -ஆனந்த் சுந்தரராமன் | |
38 | 258 | தரை மேல் வாழ்ந்திடும் மனிதா/ நல்லவை செய்ய விரைந்திட/ விதியெனும் திரை விலகி/ இல்லறக் கடலில் கரை சேர்வாய்! தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.
| |
39 | 754 | திரை விலக்கியது நிலா காதல்/கரை புரண்டு ஓடி/ விரைந்து மனம் தேடி/ தரை தாண்டி வானம் தாவுகிறதே. க.சுப்புலட்சுமி | |
40 | 399 | 🍁/ #தரையில் கட்டைவிரலால் கோலமிடும் தாரகையே!../ 🌺/ #விரைவான விழியசை மொழியே!.../ 🌻/ #திரைச்சீலையில் முகம் புதைப்பதா?..../ 🌹/ #கரையற்றக் காதலால் கட்டுண்டேன் காரிகையே!.../ சாக்கை.பொன்னழகு | |
41 | 745 | தரையில் வரைந்த வண்ணக் கோலங்கள் விரைவாக அழிந்திடு முன்பே திரைகடல் திரவியம்ழசேர்த்துக் கரை சேர்வாய் என் தலைவனே. க.சுலோஜனா | |
42 | 597 | தரையில் விழுந்த நீர்த் துளிகள்// விரைவில் பள்ளத்தை நாடிடுமே // திரையில் காணும் காட்சிகள்யாவும்// அலையின் கரையில் வரும் நுரைகளே.....// லக்க்ஷிகண்ணா | |
43 | 240 | தரையில் கால் பதித்து நடந்தால்// விரைவாக அம்மாவிடம் வரலாம்// திரை போல பாதுகாப்பேன்// கரை சேரலாம் கவலை வேண்டாம்// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
44 | 291 | தரை தந்த பெண் அடிமை கரை காணா நிலையில் திரை போட்டு இருந்தது விரைவான வளர்ச்சியை இன்று அடைந்துள்ளது ஜெயா தமிழினி | |
45 | 636 | தவழ்ந்தது சின்ன வயதில் தரையில்! தொடர்ந்து வாழ்வில் முன்னேறு விரைவில்! நடந்தது கூத்து விழித் திரையில்! இறுதியில் நிற்கிறோம் வாழ்வின் கரையில்! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
46 | 428 | தரை அமர்ந்து ஆவலாய் நானிருக்க விரைவாய் ஆடிடும் நாட்டியத்தாரகை திரைவிலகிட அழகாய்த் தெரிந்தாள் கரை கடந்த அலையாய் ஆடினாள் சுப்பிரமணியன் அன்புமலர். | |
47 | 224 | 🌿தரைமீது தவழ்ந்து வரும் பெண்ணிலவே/ 🌿திரைச்சீலை வேண்டாமே உனக்கு/ 🌿விரைந்து வந்திடு தென்றலே/ 🌿கரைந்து போகிறது காதல் நினைவுகள்/ ✍🏻...க.குணசேகரன் | |
48 | 244 | அகிம்சை நெறிகொண்டே தரையில் அமர்ந்து // விழிப்புணர்வாய் விரைந்தே செயல்பட்டு // வேற்றுமைத் திரையை அகற்றியே // கரைசேர்ந்தோமே அடிமைக்கடலில் இருந்து சுதந்திரமாய் // கவிஞர் கோவை செல்லப்பன் | |
49 | 675 | தரையை நம்பி எங்கள் வாழ்வு/ விரைவாய் முன்னேற்றம் காண்போமே / திரையில் வரும் காட்சியெல்லாம்/ கரையில் பதிந்த பதிவு தானே// அருண் | |
50 | 688 | தரை கண்ட கடல் கப்பல்/ விரை வாகி செல்லாமல்/ திரை போட முடியாமலும்/ கரை வந்து சேர்ந்தது அழகாக/ கீத்தா ராமன் | |
51 | 716 | உனக்காக நான் தரையில் தவமிருக்கிறேன் // 1 விரைந்து கரம் தொடு // 2 என் மனத்திரை ஓவியமே // 3 கரையாய் நான் அலையாய் நீ // 4 - நாகை. ஹாஜா | |
52 | 462 | தரையில் தைரியமாய் நீ வாழ/ விரைவில் கற்றிடு அனைத்தையும்/ திரை போட வேண்டாம்/ கரை சேரும் உன் பருவம் தயா | |
53 | 735 | தரையில் தவழும் தேவதை நீ/ விரைவாய் நடக்கும் காதலி / திரையில் புன்னகை நாயகி / கரையோரக் காலடித்தளம் ஓவியமே நீ. படைப்பாளி பைரவி | |
54 | 754 | திரை விலக்கியது நிலா காதல்/கரை புரண்டு ஓடி/ விரைந்து மனம் தேடி/ தரை தாண்டி வானம் தாவுகிறதே. க.சுப்புலட்சுமி | |
55 | 317 | தரை சுத்தம் செய்ய வேண்டும்/ கரை இல்லாமல் நல்லது/ திரைச் சேலை அவசியம்/ விரைந்து வராது நோய் நொடிகள்/... க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம்,அவிநாசி | |
56 | 717 | தர்மம் தழைக்கத் தரையில் வாழ் அதர்மம் செய்ய விரைந்தால் திரையாய் மூடும் வாழ்வையே திசை அறிந்து கரை சேர்வாய் கந்தசாமி நடேசன் | |
57 | 755 | தரை மீது துடிக்கின்ற மீனாட்டம் திரையோரம் தவிக்கின்ற என்னவளே! கரையாதே! கலங்காதே! துணிவோடிரு! விரைந்தோடி வருவேன், உனை எனதாக்க! - ஜெயக்குமார் சுந்தரம் | |
58 | 373 | தரை மீது தள்ளாடும் மீனைப்போலே// விரைகிறேன் கண்ணே காதல் நினைவாலே// திரை போடும் பெண்ணே உன்னோடு// கரை சேரக் கையோடு கைசேர்ப்பேன்!! ஜயந்தினி வாகீசன் | |
59 | 483 | தரையில் எங்களைப் பிறக்க வைத்தான் / விரைவில் துயரில் மூழ்கினோம்/ விழித்திரையில் கண்ணீர்க் கங்கையாய்/ கரையிலா உழைப்பால் கூடுகள் ஆனோம்/ ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
60 | 213 | தரையில் பசுமைப் போர்வை இருக்கிறது // விரையை மண்ணில் விதைத்ததால் // திரைச்சீலை மூடாது இருந்து // கரைகட்டி நீர்ப்பாய்ச்சினால் நன்றாக வளர்ந்திடுமே. கவி.மரு.ஜெயக்குமார் பலராமன் | |
61 | 618 | விரைந்து வரும் கடல் அலை/ தரையைத் தொடும் போது/ நுரைகள் எல்லாம் திரையாகி/ கரைந்து போகும் கண் எதிரே/ ஔவை. | |
62 | 671 | தரைமீது நடந்து வந்த நிலவென விரைந்து ஓடியாடி விளையாடி திரைகடலில் அலைகளிலே நீராடி கரையேறி புதுமலராய் தலைதுவட்டி தங்கமேவா... கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
63 | 312 | தரையில் நீ நடக்கும் பூவழகியோ விரைந்து ஓடி மகிழவோ திரை கடலில் அழகை கரையில் கண்டு மகிழும் தேவதையோ... பொ.சுப்புலட்சுமி, தேவகோட்டை | |
64 | தரையில் தமிழாய் இனிது வாழ்வோம்! திரையில் திருவள்ளுவராய்த் தெரிவோம்! கரையில் கலங்கரையாய் ஒளிர்வோம்! விரைவில் கடல் கடந்தும் ஆள்வோம்!
கன்னிமுத்து வெல்லபதியான் (சரவணமுத்து நவேந்திரன்). | ||
65 | 707 | #தரை தன்னில் விழுந்த விதையே/ #விரை உந்தன் வழியே/ #திரை எல்லாம் நீக்கிடு/ #கரை கண்டு களித்து வாழ்ந்திடு/ ✍️பா.ச.கண்ணன் | |
66 | 562 | தரையில் புரண்டுப் புலம்பாதே மனிதா/ நம்பிக்கையோடு விரைந்து எழுந்திடு/ மனத்திரையை விலக்கிப் பார்த்திடு/ வெற்றியின் கரை வெளிச்சமாய் தெரியும்/ பா.பத்மநாபன் | |
67 | 613 | தரையில் அமர்ந்து தைக்கத் தொடங்கினேன்/ விரைவாக கொடுக்க வேண்டும்/ திரைசீலை நீளமானது/ கரையை வெட்டி மடித்து தைய்த்தேன்/ ஜெயா சந்திரமோகன் | |
68 | 564 | தரையை நோக்கிப் பொழியும் மழை விரைந்து கடலை அடைகின்றதே திரை வானில் கருமேகம் கரைகின்றதே பறவைகள் காலக் குறிகாட்டி. இராசையா கௌரிபாலா. | |
69 | 287 | திரைப்படம் எடுத்துத் திரவியம் தொலைத்து விரைவிலே ஏழையாய் வீழ்ந்திட்டாய் தரைமட்டம் ஆயினும் தளராதே குறுக்கு வழியில் கரைசேர முடியாது தண்டபாணி | |
70 | 616 | தரையே நிரந்தரம் ஒன்றாய் கலந்திடு விரைந்து செயல் ஆற்று திரை விலக்கு தீமைக்கு அஞ்சாதே கரையில் நிற்காதே ஆழத்தை அளந்திடு கா.கேமலாரூபினி, யாழ்ப்பாணம் | |
71 | 256 | தரையில் இருந்து உயர்ந்து எழும்பி/ விரைந்த விமானம் விண்ணில் / மேகத் திரையில் நுழைந்தது/ கரைகாணா இன்பம் கண்களில் தோன்றியது/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
72 | 515 | கடலில் திரை மேலோங்கி சுழல/ கரை எட்டும் நோக்கில்/ படகுகளில் விரையும் மீனவர்கள்/ தரை தொட்டாலே அடங்கும் தவிப்பு/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
73 | 652 | தரை மார்க்கமாக பயணம் செய்திடுவோம்/ விரைவாக உரிய இடம் சென்றிடுவோம்/ திரையில் காணாத பயணமாக இருந்திடும்/ கரையில்லா உள்ளங்களோடு இனிதாய் பயணித்திடுவோம் கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
74 | 709 | தரைமீது சிந்திய குருதிகள் எத்தனை// விரைந்து கிடைக்காத சுதந்திரமண்// திரைபோல மாறியதே வறியோர்க்கு// கரைசேர காலமுண்டோ ஏழைக்கு விடியலுண்டோ// தாழை. இரா. உதயநேசன் | |
75 | 737 | தரையில் தலை நிமிர்ந்து வாழ் விரைந்தே வினைகள் ஆற்றாதே அறியாமை திரை நீக்கு அன்பு வாழ்வின் கரை சேர்வாய் திருமதி சரோஜனி நடேசன் | |
76 | 578 | தரை வந்து தவழ்ந்திடு நிலவே// மழலை உறங்கும் முன்னே விரைந்து// திரை மறைவில் ஒளிவதும் ஏனோ// இருள் கரைந்து விடியும் முன்னே// ...கவியாசகன்...!!! | |
77 | 725 | #தரை வந்த வெண்ணிலவே நீ/ #விரை காதல் மொழிப் பேசிடவே/ #திரை உள்ளே இருந்துப் பார்த்தாலே/ #கரை சேர்வது எப்போதுக் காதலிலே....✍️ கவிஞர்.மரு.கி.ம.எழிலன் | |
78 | 718 | தரையினில் நிலவாக அவளைக் கண்டேன்!/ விரைவாகவே காதல் கொண்டேன்!/ திரை போட்டுத்?! தடுத்ததனாலே/ கரை காணாப் படகாகத் தவிக்கின்றேனே!/ கீழ்கரவை குலசேகரன், இலங்கை | |
79 | 574 | விரை செறி தேன் கமலமே திரை நூறிட்டு மறைத்தாலும் தரையினில் கதிரவன் உனக்காய் கரையிலா காதலோடு கத்திருக்கிறேன் மறவாயோ. துரைராசா காண்டீபன், திருக்கோவில். |



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக