24.08.20- பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

24.08.20- பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை

 










Sl

எண்

படம் 

கவிதை

1

238


அன்பினவள் ஆயிரமாய் ஆசைகளை விதைத்தவள்../

ஆழ்மனதில் பதியமிட்டு ஆகாயத்திற்கு வளர்ந்தவள்../

நேயமிகு பார்வைகளை நெஞ்சினிக்கத் தந்தவள்../

ஊடலையே உளமுழுக்க உரமிட்டு வளர்த்தவள்../

உறக்கத்தை கலைத்து உலகினிலே உலவியவள்../


தேமதுர மொழியாலே காதினிக்க ஒலித்தவள்../

கவித்துவமாய் கற்பனையில் காதலாகிப் போனவள்../

விருப்பங்கள் வியப்பாகி விடையறிய வராதவள்../

தேடியலைந்து தினமும் முகமறிய முடியாதவள்../

தேடுகின்றேன்  வஞ்சியவள் வரவாக நிறைவாளென்று..//


#இளந்தை சேது

2


பி

580


தொ(ல்)லைபேசி வழியே தொடங்கிய அழைப்பு//

குலையாது தொடர்ந்தது களிப்புடன் நாளும்//

அலையாக எழுந்திட்ட ஆர்ப்பரிக்கும் நினைவுகளோ//

கலையாக இங்கே கவியாகப் பொழியுதடி//

அன்பினால் விளைந்த ஆசையின் ரணங்கள்//


என்னுடன் நாளும் தொடர்ந்தன கூட//

உன்னையே காதலித்தேன் காதலிக்கிறேன் காதலிப்பேன்//

என்னவளே உந்தனை என்றும் ஏற்றிடுவேன்//

முகமறியா உள்ளங்களாய் மலர்வுடனே அன்பதனால்//

அகத்தினால் இணைந்தனவே அன்புநிறை காதலினால்//


சுந்தரலிங்கம் நிருத்திகன். அல்வாய்.

3

450


செந்தூர இதழோடு சிங்காரச் சிரிப்போடு

நடமாடும் பூவொன்றை வழியிலே கண்டேன்

விழியாலே மொழி பேசிய விந்தைகளை

மனதினிலே கண்டே மையலும் கொண்டேன்

அகம் நிறைந்த காதலியை முகம்


பார்த்துப் பேசிடவே விடாமுயற்சியுடன் தொடர்ந்தேன்!

பூவும் என்னை நோக்கி சிரித்ததே|

பூவுலகும் எனக்கு முன்னால் சரிந்ததே/

பூவோடு தேனும் வண்டாக நானும்

வாழ்கின்ற காட்சியாய் மனத்திரையில் விரிந்ததே!


ரேணுகா சுந்தரம்

4


தி

763


கனவில் வந்து கரம் நீட்டினாள் /

கைக்  கோர்த்து நடை நடந்தோம்/

கன்னி மலரவள்  வாசம் வீச /

காதல்  கதைப் பேசி களைத்திருந்தோம் |

கன்னியவளின் தேகத்தில் சிந்திய வியர்வை /


கைகளில் விழுந்து முத்தாக மாறியது /

கன்னக்குழியில்   முத்தமெனும் மைத்   தடவினாள்  /

கண்மணியின் தேன் நிறைந்த இதழ்களால் /

கனவில்  வந்தவள் நேரில் வருவாளோ  /

கண்களால் காண தரிசனம் தருவாளோ  /


பிரேமா பூ


5

647


கன்னியவள் விட்டுச்சென்ற கல்லூரிப் புத்தகமதில் //

அகப்பட்டு அகம் நுழைந்ததவள்  முகவரியே //

அஞ்சல் பலவும் அனுப்பினேன் அவ்விலாசமதற்கே  //

காதலும் வளர்ந்ததே காரிகையவள் பதிலுரைக்க //

ஏங்கிய மனதின் ஏக்கம் தவிர்க்க //


அன்றொரு நாளில் அந்திப் பொழுதில் //

ஆசை  முகமும் அளந்திட ஆலோசித்தோமே //

அரவமும் தீண்டியதே அவ்வழகுரு மேனியையே //

காதலியவள்  கட்டுடலும்  கல்லறையில் கட்டுண்டதே //

பூவொன்றையே  கண்டேன் முகம் காணவில்லையே //


நாக நந்தினி


6

210


மங்கியதோர் இரவினிலே மங்கையவள் தனிமையிலே.../

பங்கயமாய் அமர்ந்திருக்க  பரிமளித்ததே அவளழகு.../

கார்முகிலின் இடைநடுவில் காய்கின்ற வெண்ணிலவாய்.../

கடற்கரையின் ஓரத்திலே கலங்கரை விளக்கினளாய்..../

பளிங்கான  மலர்முகமும் பரவசத்தில் ஆழ்த்தியதே.../


மண்ணில் உலவுகின்ற மங்காப் பெண்ணிலவோ..../

வெண்ணிலவு கண்டு அலர்ந்த அல்லிமலரோ.../

மயங்கித்தான் போனேனே மதுவுண்ட வண்டாக.../

அந்திக் கருக்கலிலே சிந்தும் புன்னகையில்.../

அழகான தேவதையை அருகினிலேக் கண்டேனே...../


திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍


7


தி

201


விண்ணிலிருந்து வந்தாளோ என்னெதிரே கண்டேன் /

விழியாலே மொழிபேசி விலகியே சென்றாள் /2

பூவொன்று கண்டேன் முகமதைக் காணலையே /3

ஒரக்கண் பார்வையில் அப்படியே வீழ்ந்தேனே /4

மீண்டும் காண்பதற்கு மறுபடியும் தேடுகிறேன் /5


காதலை வீசியவள் கற்பனையில் சிக்குண்டேன் /6

அன்பினால் என்னை ஊரெங்கும் அலையவிட்டாள் /

ஆர்ப்பரிக்கும் அலையாக அவளையே தேடுகிறேன் /8

முகமறியா வடிவழகி ஊரறியாப் பேரழகி /9

தேடுதே என்விழிகள் தொடருதே தினமும் //10


புவனா சற்குணம்   கனடா


8

317



அன்பே அமுதே உன்னைக் கண்டேன்/

அழகிய இதழில் தேனினை உண்பேன்/

மந்திரப் புன்னகையில் மயங்கிப் போனேன்/

மலர்விழி யழகில் கிரங்கி விட்டேன்/

அன்னம் தோற்கும்  உந்தன் நடையில்/


கன்னம் மிளிரும் குழிகளில் அழகில்/

வண்ணம் கலந்த வளையல் சந்தம்/

இன்பம் பருகிட இருக்கும் நீயும்/

பூவென்று பூத்தாய் புரிந்ததும் ஏற்பாய்/

புதிய பயணத்தில் முகத்தைக் காட்டுவாய்/


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி


9


பி

312



காதல் மொழி பேசி மகிழத் 1

தானே பிரம்மா உனை எனக்கு. 2

பிரம்மா படைத்த அழகி நீ. 3

உன் மனம் கொள்ளை கொண்டு 4

நான் இன்று வரை வாழ்கிறேன். 5


நீ ஊருக்குச் சென்று உன்னை.  6

உருகித் தேட வைத்து விட்டாய். 7

உன் முகத்தைக் காட்டிட விரைவில். 8

வந்திடுவாய் என் தேனமுதக் கண்ணே 9

என் விழிகள் உனக்கு மட்டுமே. 10


பொ.சுப்புலட்சுமி தேவகோட்டை


10

775



கண்ணெதிரே தோன்றாமல் நெஞ்சத்தில் நுழைந்தாள்//

முகம் காணாமலே தஞ்சம் அடைந்தேன்//

வழிமேல் விழிவைத்தே தினமும் பார்த்திருந்தேன்//

பாவை அவளின் பார்வை போதுமே//

எண்ண அலைகளில் கவிதையாய் நின்றாள்//


கானம் பாடியே தினமும் அழைத்தேன்//

கற்பனைக் காவியமே சிந்தையின் ஓவியமே//

முத்துச் சரமே உன்முகம் முழுநிலவோ//

முகம் காணவே முப்பொழுதும் துடித்தேன்//

பூவொன்றைக் கண்டேன் முகம் காணவில்லை//


மல்லிகா சக்திதேவி

11


தி

204


வண்ணமாய் நெஞ்சிலே வாடாத பூவொன்று//

எண்ணமாய் விரிந்து நினைவினைக் கடந்து//

புதிதாகப் பூத்ததோ பொன்னெழில் தந்ததோ//

காதலின் பூவாய் கன்னியின் வடிவாய்//

ஆதலில் நானோ அள்ளியே அணைத்து//


வண்டுகள் தீண்டாமல் வாடையில் காயாமல்//

பனியிலே குளிக்காமல் பத்திரமாகக் காத்தேனே//

தரிசனம் தரவில்லை பொன்முகம் காட்டி//

அவளோடு வாழ்ந்தால் ஆயுளும் நீளும்//

அவளின்றி வாழ்ந்தால் என்னுயிர் மாளும்//


ஆஸாத் கமால்


12

636



தென்குமரி முனையினிலே நித்தம் தவமிருந்தேன்!

தேன்குமரி வரவையெண்ணி கடலில் கரைந்திருந்தேன்!

நினைவினிலே அனுதினமும் பறைசாற்றிக் கொண்டேன்

நடந்த தடங்கள் மணலில் தேடினேன்!

தடயம் காணாமல் தணலில் வாடினேன்! 


சாட்சி சொல்ல மீனை நாடினேன்!

நண்டின் பின்னே நானும் ஓடினேன்!

பூவானவள் வந்தாள் முகம் காட்டவில்லை!

பொழுதாகிப் போச்சு சுரம் மீட்டவில்லை!

அழுதழுதும் பார்த்தாச்சு சுபம் கிட்டவில்லை!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி



13


பி

613



வானத்து நிலவாய் காட்சிக்கொடுத்து மறைந்தாள்/

நிலை குத்திய பார்வையால் கவிழ்த்துவிட்டாலென்னை

அன்பினால் விளைந்த ஆசைக்கனவுகள் பலித்திடுமா/

கடலலைப்போல் வந்தென்னை முத்தமிட்டு செல்கிறாள்/

இதயம் ரணமாகி ஆறாவடுவாகி  கசிகிறது/


கண்ணுறக்கம் போய் பலநாள்  ஆகிறது/

வந்திடுவாளா  என் அன்னைக்கு மருமகளாவாளா/

உன்  வசமாகிப் போனதால் நிலைக்குலைந்தேன்/

தேடுகிறேன்  மங்கையவள் தரிசனம் தருவாளோ/

பூவொன்று கண்டேன் முகம்  காணவில்லை/


ஜெயாசந்திரமோகன்

14

592



அந்தி மாலைப்பொழுதின் மயக்கத்திலே வந்தாள்

நந்தியெனக் கருமுகில்கள் சூழ்ந்து இருளானது

சிந்திய சொற்களின் இனிமையில் திளைத்தேன்

பந்தியில் காதல் பரிமாறும் நேரம்

வந்தனர் உறவினர் சென்றனள் மறைந்தனளே


நாவெப்படி அசைந்தது நானெப்படி அறிவேன்

தீவெப்படி கரையானது தீர்வேதும் அறியேன்

பூவெப்படி மணந்தது புதிரானதும் தெரியேன்

கூவெப்படி குயிலின் இனிமையை அறிவேன்

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லையே.


கவிஞர் ராம்க்ருஷ்


15

769



அவளுக்காக அவன் அங்கையில் ரோஜா/

செம்மலாய் வாடுமோ எந்தன் காதல்?/

துடித்தது இதயம் அனலில் புழுவாய்/

கொடுத்த மலரே மன்னவன் மனமாய் /

குவளை விழியாள் ஏற்றனள் கரத்தில்/


குங்கும இதழ் பதித்தாள் கன்னத்தில்/

குறிஞ்சியாய் முகம் மலர்ந்தான் சிரித்து/

நிமிர்ந்தான் குனிந்தான் நாணம் முகிழ்ந்து/

ஆணின் வதனமும் அழகிய  மலரென்று/

அன்றுதான் அறிந்தாள் அவனைக் கண்டு/


 - கற்பகாம்பாள் கண்ணதாசன்



16

482



அந்தி வானம் கடற்கரையில் பார்த்தேன் !

இரவு நேரத்தில் நிலவும் வந்தது !

காதலி என் கைப்  பற்றினாள்!

பூவை  ஒன்று கண்டேன் தீண்டுதலில்!

அவள் முகம் காணவும் இல்லை !


நினைவில் நிறைந்தவள் உயிரில் கலந்தவள்!

கடல் அலை ஓய்ந்து போனாலும்! 

அவள் நினைவு அலை ஓயாது !

உள்ளத்தில் அன்பு வைத்தவள் அவளே !

வெள்ளமென ஆசை அவளிடம் பொங்கிடுமே .


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

17



தி

727



அந்தி சாயும் மாலைப் பொழுது //

முழுமதியே உன்னிடம் மதி மயங்கி //

மனதில் வரைந்தேன்  கவிமடல் உனக்காக  //

ஒருகணம்  மௌனித்தேன்  நேரில் கண்டவுடன் //

வார்த்தைகள் தொலைந்ததால் விழிகள் பேசியது //


தனிமையில் இருமனம்  காதலில் தத்தளிக்க //

காதல் நாடகம் அரங்கேற ஒத்திகை //

நாணம் கொண்ட சிலையாக   வீற்றுருக்கிறாய் //

கரம்பற்றி எய்தேன் காதல் அம்பை  //

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை //


சுசி சுசேனு


18

483



சிற்பி செதுக்காத சேயிழையாள் பொற்சிலையோ/1

கற்புடைக் கண்ணகியாய்க் கண்ணெதிரே தோன்றினாள்

கற்பனைக் கெட்டாத கட்டழகாள் கலைவடிவாள் /3

சிற்றிடையாள் சேலையில் பூத்துறங்கும் புதுமலராள் /4

முற்றியக் கதிராய் நாணிமுகம் கவிழ்ந்திடுவாள் /5


கற்றைநறும் கார்குழல் காற்றாடும் மேகங்களோ/ 6

அற்றைநாள் வெண்ணிலவில் அசைந்தாடி சோலைவந்தாள்/7

இற்றைநாள் பற்றுடனே இருவிழி பதித்தேன்/8

பற்றற்றாள் போல்நடந்த பூவொன்று கண்டேன்/9

பசிதீர்க்கும் பண்புடையாள் ஏன்முகங் காணவில்லை /10


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை


19



தி

489



பூவொன்று கண்டேன் .....முகம் காணவில்லை/

தேனுண்ண வந்தேன் .......தேனங்கு இல்லை/

நானெங்கு போவேன் .....ஏனிந்த மாயம்/

பிழையாகப் படைத்தானே  ......பிரம்மன் என்எதிரி/

மலைத்தேனை தேடிநான் 

.....அலைந்தலைந்து மலைத்தேனே/


விலையதனைக் கொடுத்தாலும் .....மலர்த்தேனும் கிடைக்காதோ/

மலைமகளே மனம்வைத்து ......மங்கைமுகம் மாற்றிடுக/

மென்மையும் மணமுமுளது ..…தேனது காணவில்லை/

வண்டுநான் பரந்தலைந்தேன் ....வண்ணமலர் எங்குமில்லை/

உண்ண உணவின்றி .....என்னசெய்வேனோ/


#சாத்தூர் #கிருஷ்ணதாசன் #கோவை

20


தி

770


உன்னிடம் மயங்கினேன் உறவாட நெருங்கினேன்

ஆசை உன்மேனிலே? ஆனத்ததில் பாடுவேன்****

நேசம் என்பார்வையில் நினைவுகளின் கீதங்கள் 

நெஞ்சினிலே வாழுவோம் காதலில்  முழுகுவோம்****

காலங்கள் சென்றாலும்  கீதங்கள்.யாவுமே


உன் மடிந்தேடுமே நிந்திரைக் காணுமே****

பாவிமனம் கலங்குதே பாதையைத் தான்தேடுதே

கடல்கரையிலே காவியம்  காதலில் முடிந்ததே****

ஓசையில்லா அலைகளை உன்னழகைப் பார்க்குதே

காத்திருந்த கரங்கள் கட்டித்தழுவ நினைக்குதே****


ஸ்ரீதர் லெட்சுமணன்

21


தி

259


முகநூல் நட்பில் அறிமுகம் ஆனாய்.../

அறிவுப்பூர்வமான கருத்துக்களால் வியக்க வைத்தாய்.../

கவிதைகளை குரல் வளத்தில் காட்டினாய்.../

ஊக்கமான கதைகளால் உற்சாகப் படுத்தினாய்.../

கரிசனம் காட்டி இதயம் தொட்டாய்.../


களங்கமற்ற அன்பில் மனதில் நிறைந்தாய்.../

கட்டுப்படுத்தா ஆசை வார்த்தையில் எரிமலையானாய்.../

நட்பு கற்பு போன்றது பொங்கினாய்.../

வருந்திக் கேட்டும் மன்னிக்க மறுத்தாய்.../

பூவான முகம் காட்டாமலே பிரிந்தாய்...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

22


தி

463



உன்னை எண்ணியே தவம் இருக்கிறேன்

பூமுகம் காணவே தினம் தவிக்கிறேன்.

இரவினில் கனவினில் ஒத்திகை பார்க்கிறேன்!

நிழலா   நிசமாவென  உணரத் துய்க்கிறேன் !

காதல்  கவிதை  கொஞ்சம் அனுப்பினேன்!


இசையின் இனிமையை மெல்லக் கூட்டினேன் !

வீணையின் தந்தியை விரல்களால் மீட்டினேன்!

விழிவழி கசிந்த நீரைத் துடைக்கிறேன் !

முகம் தெரியாக் காதலில் திளைக்கிறேன்.

பூவொன்றில் காதில் ரகசியம் அனுப்புகிறேன் !


அரவிந்தன் தஞ்சை

23

207




ஆசைக் கனவுகளோடு அந்தியில் காத்திருந்தேன்/

நேச நெஞ்சில் நினைவுகளை வளர்த்தேன்/

சிந்தும் வார்த்தைகளில் சிகரம் தொட்டேன்/

ஆகாயம் பார்த்ததில் ஆனந்தப் பரவசம்/

பூக்கும் புன்னகையைக் காணத் துடித்தேன்/


ஏக்கப் பெருமூச்சில் இதயம் தவிக்கும்/

என்னவளைக் கண்டிட எத்தனைநாள் தவம்/

தொடர்வண்டியின் பாதையாய் கடக்கும் காலங்கள்/

பார்க்கத் துடிக்கும் பார்வை சங்கீதம்/

பூவொன்று  கண்டேன் முகம் காணவில்லை/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.


24

706



தோட்டத்தில் பூவாசம் நாசியில் மோதிட/

பூக்களின் சிரிப்பு மனதைக் கவர்ந்தது/

பூக்களுக்கு நடுவில் அவள் இருப்பாளோ/

முகம் காணும் ஆவலில் முடியாமல்/

வண்ண மலர்களின் வண்ண நினைவாய்/


வஞ்சியவள் வருவாள் நெஞ்சம் உரைக்க/

தோழிகள் புடைசூழ வந்தவள் மறைய/

இதயம் துடித்திட இசைத்தேன் பாடலை/

நினைவில் நின்று உயிரில் கலந்தாள்/

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை/


மாயாதேவி, சென்னை



25

716



தென்றலாய் வந்து தேகம் தொட்டாய்

மயங்கி நின்றேன் விலகிப் போனாய்

உந்தன் இமைகள் அர்ச்சுனன் வில்லோ

கண்கள் இரண்டும்  நிலவின் ஒளியோ

மின்னல் போல வெட்டிச் சென்றாய்


விரைந்துப் பார்த்தேன் முறைத்து நகர்ந்தாய்

உந்தன் நடையில்  அன்னம் தோற்கும்

இடையில் படரக் கொடிகள் ஏங்கும்

அனிச்சம் அதரங்கள் சுவைக்க வந்தேன்

வெட்கப்பட்டே உன் முகத்தை மறைத்தாய்


- நாகை. ஹாஜா


26

341



சிந்தையில் ஓடும் வந்தனமே நறுமுகையே /

பந்தமாய் வருவாயென மனதிலே நறுமணமே /

காணாத முகத்தை கண்டேனே அகத்தினிலே /

கனவுகள் தோறும் விழித்தேனே முகத்தினிலே /

புறமது காணாமலே பூரிக்குதே உள்ளமே /


கரமது தீண்டவே துடிக்குதே நெஞ்சமே /

கற்பனைக் கோட்டையின் அற்புதத் தேனமுதோ /

சிற்பமே விழித்து நனவினில் வாராயோ /

அகத்தையே நேசிக்கும் அன்புள்ளமே உன்னதமே /

முகத்தையே கண்டாலும் மனதையே விரும்பிடுமே /


பாலா கார்த்திகேயன்


27


616



 புன்னகையின் தீவே பூக்களின் அரசியே

 குளிர் தென்றலே  நளின மயிலே

 வதனம் காண ஏங்கித் தவிக்கிறேன்

 ஏனடி என்னை காதல் கவிஞனாக்கினாய்

 பிரிந்த பின் காவியம் படைக்கவா💟


 தென்றலை தூது அனுப்பினேன் உன்னிடம்

 தேன் தமிழால் கடிதமும் வரைந்தேன்

 காகிதங்களை கிழித்து புயலாய்  வீசினாயா

 வாசத்தினை எண்ணி மலர்களில் தேடுகிறேன்💟


 கா.கேமலாரூபினி



28

773



காணல் நீர்போல வாழ்ந்த நாட்களிலே

காதல் நினைவே கண் தோன்றாமல்

காகிதப் பூப்போல காலம் கடந்தது

குறிஞ்சிப்பூ ஒன்று குளத்தில் கண்டேன்

பாழும் கிணற்றில் குறிஞ்சி யொன்று


மெய் சிலிர்த்தேன் மெய்யாகவே நான்

அதிசயித்து முதலாய் ஆவல் கொண்டேன் 

கிணற்றுக் கிடங்கில் முள் ஒதுக்கி

முன்னேறி நான் சென்றேன் முடிந்தவரை

முகராமல் தவறவிட்டேன்முதலாம் காதலையே..!


எம்.எம்.நிஜாமுதீன்


29

240



வெண்ணிலவே ஓடியது நாணத்தால் மங்கையிவள்//

முகத்தில் புன்னகை புரிந்து பூவாக//

எனதருகில் நின்றாள் மேனி முழுவதும்//

அணிகலன்  சொலிக்க  அன்ன நடையில்//

ஒய்யாரமாக வந்ததென்ன ஆர்வம் கொண்ட//


எந்தன் நெஞ்சிலே படபடப்பு அதிகரிக்க//

விழித்திரை மூடாமல் வியக்க வைக்கும்//

அழகோவியம் கண்டு மகிழ்ச்சி கொண்டு//

விழித்த போது அத்தனையும் கானல்//

நீராக காணாமல் போனதே திசைமாறி//


உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️


30


தி

726



அன்பே என் அதிசய பூவே/

அந்தி சாயும் அழகிய மாலையிலே/

என்னைக் கண்டதும் மலர்ந்தது ஏனடி/

உன் முகம் பார்த்திட ஏங்குகிறேன்/

கண்களும் உன்னைக் கண்டிட ஏங்குதே/


ஏகாந்த வேளையாய் என்னுள் புகுந்தாயே/

ஏதோ செய்து மயக்கங்களும் கொடுத்தாயே/

வாசனைத் திரவியங்கள் வீசிச் சென்றாயே/

வாடாத மலராய் வளர்ந்தே நின்றாயே/

மையல் கொண்டேன் மதிமுகம் காண/


-காளிராஜ்பாலகணேஷ்


31



தி

668



வெள்ளி நீராய்ப் பாய்ந்திடும் நதியோரம்/

பாசத்துடன் நானும் பைங்கிளி அவளை/

பார்த்திடத் துடித்து ஒற்றைக் கால்/

கொக்காகப் பரிதவிக்கும் மனதோடு தவமியற்ற/

பாவையவள் வந்திட்டால் மனக்குறை தீர்ந்திடுமே/


பாசக் கிளியாகப் பறந்தே வந்திடுவாய்/

கதிரவனை கண்டிடவே புன்னகை வீசிட்ட

தாமரையும் அல்லியும் அழகிதழ் விரித்திடவே

தங்கப் பதுமையின் அழகுமுகம் தேடிப்பார்க்க

பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை/


ஏஞ்சல்சோபிதா


32

287



என்றோ ஒருநாள் திருநாள்  எனக்கு 

அன்றைய நாளில உந்தன் அழகினை

முழுமையாய்ப் பார்த்திட மனதினுள் ஆசை

ஒவ்வொரு முறையும உன்னைப் பார்க்கையில

ஒவ்வொரு அங்கமும் தனித்தே தெரிகிறது 


கண்களைப் பார்ப்பின அங்கேயே நிலைக்கிறேன்

கால்களின் மெட்டியின ஓசையைக் கேட்கிறேன்

வளையலின குலுங்களில் விக்கித்துப் போகிறேன்

தள்ளி நின்று  பார்த்திட வேண்டுமோ

தாளாதம்மா உன்னை விட்டுப் பிரிவதென்பது 


தண்டபாணி


33


247



உன்னைக் கண்ட நாள் முதலாய்/

ஒருப் பெண்னை நான் பார்த்ததில்லை /

உனது கண்ணைக் கண்ட நாளாய்/

வானில் மின்னிடும் நட்சத்திரத்தைப் பார்க்கவில்லை/  

உனது காதலின் முடிவை அறியாமல் /


வேறுஎன்னமும் எனக்கு வரப்போவதில்லை /

எனது உள்ளத்தில் இருப்பதெல்லாம் நீயே/ பெண்ணே அதனை திறந்தால் உன்னுருவம் /

சொலிக்கும் கண்ணே பூமியில் நீபோகும்/ 

பாதையெங்கும் பூமேடை அமைத்திடுவேன் மானே/


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம்


34

588



தற்போது பூத்த புதுமலர் ஆனதாலோ,/

கண் இமைக்கும் நேரத்தில், கடுகி/

நீ மறைந்தாய்?!  மாயமாய் மறைந்தாலும், /

உன் வாசனை  என் வசமானதடி. /

பருவம் முடிவதற்குள் பக்கத்தில் வந்திடுடி! /


மற்றவர்கள் வயி(று)றெறிய மாணாலனாய் ஆக்கிவிடு./

அந்தி சாய்வதற்குள் அணைப்புக்குள் வந்துவிடு./

கற்பனைகள் கரைவதற்குள் என்னுள்ளே கலந்துவிடு./

கண்ணாமூச்சி ஆடாதே காற்றினும்  வேகமாகவேன். /

கல்யாணம் செய்து கலங்காது காத்திடுக! /


           .           ~~பாரிஉமா. சர


35





717



பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை/

ஏதென்று நானும் வியந்தே போனேனே

பல நூறு பூக்கள் எல்லாம் சேர்ந்து/

ஒரு பூவாய் ஆன உண்மை கண்டீர்

தாமரையோ அவள் தங்க முகம்/


மின்னிப் பளிச்சிடும் அல்லிக் கண்கள்

முல்லைப் பூவோ அவளின் முத்துப் பற்கள் அழகிய/

செவ்விதழ் வாய் ரோசாமலரே தான்

எல்லாப்பூவும் ஒன்றாய்ச் சேர்ந்த வனப்பு/

பூஒன்றாய் ஆனது முகம் எங்கோ போனது/


கந்தசாமி நடேசன்


36

261



ஆற்றங்கரை ஓரத்திலே மாமன் மகன்

காத்திருக்க அத்தை மகள் வரலையே

பூ ஒன்று பறித்து வைத்திருக்கேனே

வாடிடுதே சூடுதற்கு ஆள் இன்றியே

மலரோடே என் மனமும் சோர்ந்திடுதே


தென்றற் காற்று தேனிசைத்தே வீசிடுதே

சில் வண்டுகள் ரீங்காரம் பாடிடுதே 

விண் மீண்கள் கண் சிமிட்டிடுதே

ஈதொன்றிலும என் மனம் இலயிக்கலையே

வருவாயா நீயென்று ஆவலோடு நோக்கிடுதே !


~ வள்ளல் இராமமூர்த்தி


37

722



தடாகத் தாமரையின் எழிலான கோலம்/

சின்ன நடையில் அழகிய அன்னநடை/

பூத்திடும் பூக்களின் இதழ் கொண்டவளே/

கன்னக் கதுப்புகளில் ஆசையை வைத்தவளே/

நாசியில் நாணம் கொண்ட பேரழகே/தென்றலைத் தழுவிடும் கரம் உடையவளே/

மழைச் சாரலில் நனைந்த மலரே/

உள்ளத்தின் உயிரே அகத்தின் பேரின்பமே/

இதயக் கோவிலின்  இன்ப ராணியே/

நின் முகம்  காண்பது எப்போது/


சுஜாதா அருணாச்சலம்




போட்டி முடிவு

38

652


பூக்களின் தோற்றத்திலேயே பூமகள் வந்ததாளே!/

நிழலைக் கண்டே மயங்கி நின்றேனே/

முகம் காணும் வாய்ப்பு கிட்டவில்லையே/

இருப்பினும் தொலைந்தது இதயம் அவளிடம்/

தேடிச் சென்று பார்த்தாலும் தெரியவில்லை/


நிலவின் ஒளியை கண்கள் தேடுதே/

நிலவே உனது ஒளியை தெளித்திடேன்/

மங்கையின் அழகை கண்குளிர காண்கிறேன்/

இருளை நீக்க ஆதவனே வந்திடு/

அப்பொழுதாவது காண்கிறேன் அவளின் பேரழகை/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages