Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 238 | சந்தித்த நாள்முதல் கண்ணுக்குள் திருவிழா../ கவினுறும் காதலை மனதினில் வளர்த்தேனே../ சிதறும் நினைவுகள் தொடரும் அவளழகில்../ தேடிடும் இன்பங்கள் தேனினும் இனியவளை../ சொற்களால் சுகமளித்து சொல்லாமல் புகுந்தவளே../ வீணையாக நீயிருந்தாய் மீட்டுதே விரல்களால்../ மயக்கும் குணங்களால் மனதினை வென்றவளே../ மாறாதப் பாசத்தினை மனதினுள் வைத்தவளே./ தீந்தமிழாய் தித்திக்கும் திரவியமே திகட்டாமல்../ விழியழகால் விழுந்தவனோ விருப்பமின்றி எழமாலே../ இளந்தை சேது | |
2 | 201 | இரு விழியில் வீழ்ந்த நாள்முதல் / விழிகளோ மூடவில்லை உன்முகமே தோன்றுதடி / தேடியே தவிக்கிறேன் தேன்விழியே உன்னையே/ சொல்லாமல் பறந்தாயே சோகமாய் நானிருக்கேன்/4 பார்வையால் கவர்ந்த பாவையே உன்னாலே / தூக்கமும் தொலைத்தேன் தூங்காத விழிகளுடன்/ 6 இசையோடு இதயங்கள் ஊஞ்சலாடி மகிழுதே / இனியொரு கணமும் நீயின்றி வாழ்வேனோ/8 இதயத்தில் இனிதாக நடமாட வந்தாயோ / என்னுயிரே வதைக்காதே என்னுடனே வந்துவிடு// புவனா சற்குணம் கனடா | |
3 | 726 | கண்ணாடி இதயத்தின் சிறுகீறல்கள் நீயடி/ கண்டவுடன் காதல் குழந்தைப் பிறக்குதே/ நினைவுகளின் வழியே பேசாமலேப் போகிறாய்/ மரத்திலாடும் ஊஞ்சலாய் உயிரும் அசைந்தாடுதே/ காற்றோடு காதல் தானோ தூரிக்கு/ தென்றல் வீசுகையிலே நடனங்கள் புரிகின்றதே/ ஒளிர்கின்ற முழுமதியாய் ஓயாத ஞாபகங்கள்/ ஒளித் தேவதையாய் காரிருளில் வந்தாயே/ தனிமையின் சிதறல்களை அழித்துச் சென்றாயே/ காத்திருக்கிறேன் அன்பே பேருந்தின் இறுதிஇருக்கையாய்/ --காளிராஜ்பாலகணேஷ் | |
4 | 450 | கண்ணோடு கண்ணோக்கி காதலோடு சிரித்தாய்! உள்ளழகின் உன்னழகால் உள்ளத்தை பறித்தாய்! ஏழுலகம் செனறுவர பேரானந்தம் பெற்றுவர அங்கிருந்தே அனுமதித்தாய்! உள்ளுக்குள் கண்டுரசித்தாய்! வெண்பஞ்சு மேகங்களை கயிறாக்கி காதலை பலகையாக்கி அதிலே என்னை அமரவைத்தாய்! நீயிங்கு வந்திடவே இனியேனும் தாமதிக்காதே! உனக்காக எதிர்பார்க்கும் இளநெஞ்சம் தாங்காதே! இளமை மேகங்களை காலக்காற்று கலைக்குமுன் இதயஊஞ்சல் ஆடிடலாம் இன்றே விரைந்துவா! ரேணுகா சுந்தரம் | |
5 | 582 | கொத்தோடும் மலரும் குழைந்தாடும் குழலில். பொத்தாத இடையும் பொழிவோடு அழைக்கும். முத்தாடும் மார்பில் முரண்டாடும் நகிலில் அத்தானின் பார்வை அசைபோடும் மனத்தில். வண்டாடும் விழிகள் வந்தாடும் அழகில் திண்டாடி அலைவேன் கொண்டாடி மகிழ்வேன்காதல் கோட்டை கட்டிட நானும் மோதல் பாட்டைக் கட்டியும் பாடி காமக் கோட்டை முட்டியே தாண்டி சேமக் காட்டில் எட்டியும் மகிழ்வேனே நெடுவை இரவீந்திரன் | |
6 | 462 | பார்த்தோம் பழகினோம் காதல் கொண்டோம்/ தொடர்கிறது சேர்வோமா என்ற ஏக்கத்துடன்/ ஏங்க வைப்பதே காதலின் வேலையா/ ஏற்றம் பெற்றால் நாம் இணையலாம்/ ஏற்றம் பெற ஓயாமல் உழைப்போம்/ அதுவரை வேண்டாம் ஓயாத பேச்சு/ காதல் வாழும் காதலர் உயர்ந்தால்/ இதயமே உனக்காய் நான் மாறுகிறேன்/ எனக்காய் நீ மாற்றம் கொள்வாயா?/ நமக்கான காலம் எப்போது ஆண்டவா? தயா | |
7 | 700 | இருபதில் தொடக்கம் இதிகாசக் காதலும் அறுபது முடிந்தும் ஆதரவு இழத்தலும்… நிறைந்த கோபங்கள் நிகழ்ந்த சண்டைகள் உதிர்ந்து உதிர்த்து வெற்றுச் செதில்களாய்… விழுதுகளில் விளையாடி விழுந்த காதல் வேர்களில் உறவாடி நிறைந்த நிம்மதியாய்… காலத்தின் பெருவெளியில் கன்னங்கள் சுருங்கலாம் கண்கள் மங்கலாம் அன்பது சுருக்கமின்றி… வாய்கள் மொழிந்த வார்த்தை மறக்கலாம் மெய்கலந்த சுவடுகள் இனிமையாய் இளமையாய்... +++++++++++ மைக்கேல்ராஜ், ஒசூர் | |
8 | 614 | வானில் கதிர்கள் பட்டுத் தெறிக்க/ கடல் நுரை தாலாட்டுப் பாட/ அவள் வந்தாள் ஒளிரும் கதிரவனாக/ மெல்லிய இசை ஒன்று தாளமிட/ காதோரம் அன்பின் ரீங்காரம் பாட/ கடலின் அசைவுகள் தாளம் போட/ ஒலிக்கும் இசையாக வருகிறாள் எனதருகே/ கடல் ஆழத்தில் காதல் ஒன்று/ புதியதாய் பிறந்து கரு உண்டாகி/ பூமியை நோக்கி மெல்ல நகருகிறது/ விஜயலட்சுமி | |
9 | 732 | சிப்பிக்குள் முத்தென ஆழமான கடலினுள்/ தமிழ் வரிகள் கவிதை பாட/ அழியாத கடல் போல் ஆர்ப்பரித்து/ அங்கும் கவிதையாக நீயே வருகிறாய்/ இதய ஊஞ்சலில் ஆடவா போகிறாய்/ அளவிட முடியாத அன்பை தேக்கி/ எல்லையில்லா காதலோடு விஞ்சி நிற்கிறாய்/ கவியும் கானமும் இசையும் தாளமும்/ தமிழும் அமுதும் பாட்டும் குரலும்/ அனைத்தும் கலந்த கலவையாகி மகிழ்விக்கிறாய்/ கீதாஞ்சலி | |
10 | 716 | ஆகாய தேவதையாய் சிறகடித்து இறங்குகிறாய் // 1 மேகமாக எனைத்தழுவி தேகத்தையே தீண்டுகிறாய் / 2 போகுந்தூரம் எவ்வளவோ புரியவில்லை எந்தனுக்கு / 3 வழித்துணையாய் உன்னோடு வந்திடுவேன் நானுனக்கு/ கால்கொலுசை ஆடவிட்டு சாலடித்து உழுகின்றாய் // 5 மாமனோட நெஞ்சினிலே நெற்கதிராய்ச் சாய்கின்றாய் கொஞ்சிப்பேசும் மழலையினால் மஞ்சத்திலே தள்ளுகின்றாய் // 7 மணிக்கணக்காய் விரலாலே மெல்லிசையை வாசிக்கிறாய்// விழியிரண்டு அசைவினிலே விழயென்னை வைக்கின்றாய்/ என்னிதயத்தில் நீவந்து ஊஞ்சல்கட்டி ஆடுகின்றாய் // 10 - நாகை. ஹாஜா | |
11 | 722 | வானவில்லில் ஊஞ்சல் அமைத்து மின்னிடும்/ நட்சத்திரங்களின்mஒளியோடு ஊர்வலம் செல்வோம்/ நாம் இருவரும் கைக்கோர்த்து கதைகள் / கதைத்து இன்புற்று காதல் தேரில்/ பவனி வருவோம் அவனி முழுவதும்/ வையகமே போற்றும் எழிலான ரதமாக/ மன்மதன் ரதியே பொறாமைக் கொள்ளும்/ காதல் சோடிகளாக பறந்து திரிவோம்/ வானில் மாளிகை அமைத்து களிப்புற/ இதய ஊஞ்சல் ஆட வா / சுஜாதா அருணாச்சலம் | |
12 | 246 | ஏகாந்த வேளையிலே எண்ணற்ற நினைவுகள்/ எனக்குள் சுழல்கிறதே இடைவிடாத கனவுகளாக./ இதயத்தில் ஏற்றிவைத்த எண்ணத்தின் தீபமதை/ அணையாமல் பார்த்துவிடு எனையாளும் என்னவளே!/ உந்தன் நினைவுகளும் சுவடுகளாக நெஞ்சத்தில்/ ஊஞ்சலாடி உழல்கிறதே உண்மையின் நிழலாக./ உதிரத்தின் எழுத்துகளில் உனக்காக எழுதினேன்./ உள்ளத்தின் ஆசைகளை ஓவியமாகத் தீட்டினேன்/ நித்திரையைத் துறந்துவிட்டு/ நீலக்குயில் உனக்காக நிச்சயமாய் காத்திருப்பேன் நிலவின் சாட்சியாக./ செல்வம் செல்வகுமார் | |
13 | 668 | கண்கள் மட்டும் பேசிய தாலே/ காதல் இசை பாடி மகிழ்ந்து/ கல்லூரி காலம் கனவுகளில் மூழ்கி/ நகர்ந்து போனதை அறிந்திட வில்லை/ காதலை சொல்ல நேரம் பார்த்திட/ காதலி நீயோ அகன்று செல்ல/ புதைத்து வைத்த காதலும் புதையலாக/ ஒளிந்திருக்கு அடைத்திருக்கும் கதவின் முன்பாய்/ இதயத் துடிப்பை உணர்ந்து கொள்வாய்/ இதய ஊஞ்சல் ஆடவா உயிரே/ ஏஞ்சல்சோபிதா | |
14 | 373 | மங்காத நிலவே மணிமாடக் குயிலே தேனினைத் தேடும் சிங்கார வண்டே/ ஆலமரத்தில் ஆடி அன்புடனே கூடி ஆசை கொண்டு இன்பம் காணலாம்/ இளைய மனது இனிய கனவு உதயமாக நின்று இதயம் சேரலாம்/ தேவதை இனமே தேடுகின்ற கனியே உதட்டுச் சுவையே காதல் சுவைப்போம்/ உயிரின் ஓவியமே உறங்காத கண்ணே ஒளியாக நீயிருக்க ஏற்றிடுவோம் நாளும்/ ஜயந்தினி வாகீசன் | |
15 | 259 | கல்லூரிக் காதல் துளிர்த்துக் காவியமாக / கடற்கரை மணலில் கைகோர்த்து இன்பமாக / கொஞ்சல் சிணுங்கல் ஊடல் சுகமாக / தென்றலாய் வருடிய அன்பு சறுக்கலாக / பெற்றவர்கள் எதிரில் பேசா மடந்தையாக / இதயம் நொறுங்கித் துன்பம் துக்கமாக / சோர்ந்து வீழ்ந்து வெட்டுண்ட வாழையாக / தனித்து வானத்தை வெறித்து தவமாக / நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மலரும் நிலவாக / இதயம் திறந்து காத்துள்ளது உறவாடிட....!!/ ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
16 | 240 | எந்தன் இதயம் அழகான ஊஞ்சல் // நித்தமும் ஆடிக்கொண்டிரு இல்லையெனில் நின்றுவிடும்// எந்தன் உயிர்மூச்சுக் காற்றே நீதானே// நேசிக்க நீயிருக்க வேறென்ன வேண்டும்// உன் மெல்லிய உதடுகளைப் போல// கண்களுக்கும் பொய் சொல்ல கற்றுக்கொடு// உன் காதலைக் காட்டிக் கொடுகிறது// இன்னொரு பிறப்பு பிறக்க போவதில்லை// இந்தப் பிறவியில் கிடைத்த உன்னை// எப்போதும் மறக்க இழக்கப் போவதில்லை// உமா பாலகிருஷ்ணன். பெங்களூர் 🏵️ | |
17 | 707 | காத்திருக்கேன் காதலி காலத்தில் வந்துவிடு/ பூத்திருக்கும் நேரமும் புண்ணாகிப் போகுதே/ நேற்றுவரை என்னிடத்தில் நித்திலமாய் இருந்தாயே/ இன்றுமட்டும் எனைத்தனியே காத்திருக்கச் செய்தாயே/ வீட்டினிலே உன்னையும் முடக்கியே வைத்தனரோ?/ அறையினிலே காதலை அடக்கியே வைத்தனரோ?/ விட்டுச்சென்ற இடத்தினிலே வெண்ணிலவோடு இருக்கிறேன்/ சட்டெனவே நீயும்வந்து கண்ணிலவாய்ப் பதிந்துவிடு/ இல்லத்திலே நீயிருக்க இங்கொருவன் தனித்திருக்க/ இதயங்களும் வாடுதே இருவிழியும் தேடுதே/ ✍️பா.ச.கண்ணன் | |
18 | 266 | பருவ வயது காதல் அரும்பு... மனதில் கிளர்ந்து செய்யும் குறும்பு... உறக்கம் தொலைந்த நிலைக்கு மருந்து... இரக்கம் கொண்டு இதயத்தை விரும்பு... வாழ்வில் இனிமை கூட்டிடும் கரும்பு... சுவையினை சேர்த்திட உடனே திரும்பு... விழியது பட்டு வழியது தொட்டு... வளரட்டும் காதல் கிளையது விட்டு... உல்லாச உலகில் சந்தோச வாழ்வில்... சங்கமம் ஆகிட ஆடலாமா ஊஞ்சல்... ...பூமகன்… | |
19 | 409 | விழிமூடி இருந்தாலும் உன் நினைவே// காதலிலே புது இன்பம் காண்போமே// தினந்தினம் வாராதmசுகம் யாவும்// வந்தது போலவே நாமும் பாடியே// இதய ஊஞ்சல் ஆட வா// தேடி வரும் நாட்கள் எல்லாம்// உல்லாசமாய் இருப்போமே பாரெல்லாம் பறந்தே// திரிவோமே வானூர்தி ஒன்றை நாமே// வாங்கி உலகத்தையே வலம் வருவோம்// முத்தமழை பொழிந்தே பூமியை நனைத்திடுவோமே// ********** க.சுதர்சனக்குரு. | |
20 | 715 | இதய ஊஞ்சல் ஆட வா உதய கீதம் பாட வா அந்தி மந்தாரையில் பூத்த செந்தாமரையே நதி நீரில் நடக்கும் விந்தை உன்னைப் பார்த்த பின் தான் இரவில் மெல்லிசையாய் உள்ளே நுழைகிறாய் தனிமையில் தவிக்கிறேன் துணைக்கு வா உள்ளத்தில் ஒளிர்கிறாய் உணர்வைத் துளைக்கிறாய் என்னோடு நீயும் வர காத்திருக்கிறேன் உறங்காத விடியலைக் கேட்டுக் கொள்கிறேன். அ.உமர்பாருக். | |
21 | 618 | காலை மாலை ....கனவிலும் நினைவிலும்/ காண்பதெல்லாம் கண்ணே ....உன் முகமே/ கண்களை மூடினால் ....கண்ணுக்குள் நீயே/ வான் நிலவின் ...வதன வடிவும்/ விண் முகிலின்.....விதவித உருவமும்/ கோவில் கருவறையில் .....சாமியும் உன்னுருவே/ காட்சிகள் எல்லாம் .....தடங்கலாய் ஆனதே/ கோல மயிலே ......கும்பிட்டுக் கேட்கிறேன்/ நெஞ்சத்துள் நிரந்தரமாய்க் .......குடி அமர்ந்து/ இதயத்துள் ஊஞ்சல் ......ஆடிட வந்துவிடு/ ஔவை. | |
22 | ஏகாந்த இரவில் உச்சிக் கிளையிலே/ ஒற்றையிலே நான் இருக்கிறேன் மயிலே/ என்னிதய ஊஞ்சலிலே ஆடவா கண்ணே/ தனித்தே நானும் இருக்கிறேன் இங்கே/ துணையாக நீயும் வருவது எப்போது/ உயிரும் தவித்துக் கலங்கிப் போகுது/ உன்மத்தம் பிடித்து இருக்கிறேன் நானும்/ உலகமே எனக்கு நீதான் புரியாதா?/ உணர்வில் கலந்து உயிராக இருப்பவளே/ உனக்காக காத்திருக்கிறேன் உறவாக வந்துவிடு// இரா.மதனகோபாலன், தருமபுரி. | ||
23 | 317 | மலையின் ஓரத்தில் மரத்தின் கிளையில்/ கலையின் தூரத்தில் வானத்தின் நிலவில்/ மேகத்தின் அழகில் வண்ணத்தின் இரவில்/ ஊஞ்சலின் ஆடலில் ஒய்யாரத்தின் மடியில்/ கானத்தின் மோகத்தில் கலவையின் வார்த்தையில்/ இலையின் அசைவில் தென்றலின் குளிரில்/ மஞ்சளின் வடிவில் மலரின் உருவில்/ மாலையில் சூடினாள் காதல் சிறகினில்/ இமையினால் எளிதில் ஈர்க்கும் ஒளியில்/ இன்பத்தில் மொழியில் எழுதும் கவிதையில்/ க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம் அவிநாசி | |
24 | 207 | அன்பினில் திளைத்து ஆனந்தமாய் இருந்தோம்/ ஆசைக் கனவுகளை அன்றாடம் வளர்த்தோம்/ நினைவுகள் முழுவதிலும் நிம்மதி அடைந்தோம்/ கவலைகளைத் துறந்து களிப்பில் ஆழ்ந்தோம்/ சிறகுகள் இன்றியே வானில் பறந்தோம்/ திரும்பும் திசையெல்லாம் தென்றலாய் தவழ்ந்தோம்/ மேகங்களின் ஊர்வலத்தில் நாமும் மிதந்தோம்/ நிலவின் ஒளியில் நீந்திக் களித்தோம்/ வாழ்வில் வசந்த உதயம் காணவே/ இதய ஊஞ்சலில ஆடி மகிழ்ந்தோம்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
25 | 652 | அடியே அழகியே தனிமை ஏனோ?/ இதய ஊஞ்சல் ஆடலாம் வா!/ இயற்கை நம்மை சேர்க்கும் வா!/ இதயம் கொடுத்து இன்பம் காணலாமே!/ விழிகள் பார்த்து மொழிகள் பேசலாமே!/ மௌனம் கூட ஆயிரம் பேசுகிறதே!/ சிரிப்பில் வல்லினம் மெல்லினம் சிதறுகிறதே!/ காதலோடு கண்களைப் பார்த்துப் பழகு/ உலகில் சொர்க்கம் காதல் வாழ்வே!/ இணைந்து வாழ்வோம் மண்ணிலும் விண்ணிலும்/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
26 | 735 | காதலில் விழுந்து தன்னை மறந்தான்/ விழுந்தது உன் இதயத்தில் மட்டுமே/ பசி மறந்து வானில் சிறகடித்தேன்/ உறக்கம் இழந்து புரண்டேன் படுகையிலே/ கடைக்கண் பார்வை என்றும் பவுர்ணமி/ நம் காதலை வெல்லும் காந்தம்/ சாதீ தகர்க்கும் மீன் விழியாள்/ மதம் மாயமாகும் மர்மப்புன்னகை/ சாதியில்லாச் சான்றிதழ் உன்னால் சாகாவரமே/ உல்லாச ஊர்வலம் இதயத்தில் உலாவே. படைப்பாளி பைரவி | |
27 | 616 | குளிரும் பனியில் திகட்டும் இரவில் இரு உயிர்கள் ஓர் ஆன்மாவாய் ஒன்றாகி கவிதைக் காவியம் மலரும் கண்களும் இதயமும் கதை சொல்லும் வார்த்தைகள் இறந்து மௌனம் பிறக்கும் அன்புக் கயிற்றில் காதல் ஊஞ்சல் தினமும் ஆடி ஆனந்தம் தவழும் இளமையிலும் முதுமையிலும் இன்பம் பொங்கும் பாசத்தின் ஆதிக்கம் ஆயுளை கூட்டும் உள்ளங்கள் பரிமாறும் உலகம் வியக்கும் கா.கேமலாரூபினி | |
28 | 654 | தென்றலோடு உறவாடி தெம்மாங்கின் இசைபாடி! மன்றமொன்றில் கதைபேசி மகிழ்ந்தாடலாம் வா! சின்னச்சின்ன இடையசைத்து சிருங்காரப் பாட்டிசைத்து அன்னம்போல் நடைநடந்து அழகுநிலா வடிவெடுத்து என்னிதய ஊஞ்சலில் ஆடவா நிலவே! கருங்கூந்தல் காற்றினிலாட கன்னிமனம் இசைந்தாட. வெள்ளியருவி விரைந்தோட விடியும்வரை நாமாட பருவநிலா வெட்கத்தில் பாவைநிலா பக்கத்தில் உடல்கள் இரண்டும் ஒன்றிணைந்து உறவாட பகலவன் துயிலெழும் காலைவரை கலந்திருப்போம்! பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான் | |
29 | 636 | இதய ஊஞ்சல் ஆடவா என்றும்/ இனிய ராகம் பாடவா இனியும்/ இளமை தொடங்கி முதுமை வரையில்/ நாளும் வளமை ராகம் பாடவா!/ கவிதை புனையும் கனிந்த மனதில்/ கருணை மழையை கருமை முகிலாய்/ அருமை நடையில் வறுமை துடைப்பாய்/ புதுமைக் கவியை நினைவில் பதிப்பாய்/ பதுமை உணர்வை பதியத் தருவாய்!/ புதிய உதயம் மலரும் திருவாய்! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி
| |
30 | 261 | எந்தன் இதயக் கோயிலில் உன்னை மூலவராக வைத்தே வழிபாடு செய்கிறேன் தெய்வமாக உள்ளவளே வரமளிக்கத் தயங்குகிறாயே காதல் தேவதையே பக்தனை வதைக்கிறாயே எனது பூசை நிறைவு இல்லையா ... (5) என்ன வேண்டும் என்றே கேள் வானத்து சந்திரனை வலைவீசிப் பிடிக்கவா விண்மீண்களை சேகரித்து மாலையாகத் தொடுத்திடவா தினமும் உன்னை எந்தன் இதய ஊஞ்சலில் ஆட்டி உறங்க வைக்கவா ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
31 | 515 | கண்டவுடன் என்னைக் கவர்ந்து கொண்டு காதல் காவியம் நெஞ்சில் இயற்றியவனே காலங்கள் மொத்தமும் இனியுனக்கே சொந்தம் காத்திருக்கிறேன் என்னிதயத்தில் ஊஞ்சலாடி மகிழ்வித்து கொட்டும் அருவியாக நனைத்திட ஓடிவா உன்னை நினைத்து உறக்கம் தொலைத்து உருகியேங்கி நித்தமும் வாடும் என்னோடு அற்புத இல்லற சங்கீதம் இசைக்கும் அன்பான தலைவனாக எப்போதும் உடனிருந்து உயிர்மூச்சுக் காற்றில் கலந்து தாலாட்டு லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
32 | 602 | "காதல் சிறகை நான் விரிக்க கன்னி உந்தன் மனம் களிக்க விலகி நின்ற நீயும் தான் மனதுக்குள் வந்து நிறைந்து இருக்க மானசீக பார்வையாலே மனதை திறந்தாய் மறுபுறம் திரும்பாது இருக்கி வைத்தாய் கன்னி உன்னை கை பிடிக்க காத்து நிற்கும் எனை சேர்ந்தால் இதய ஊஞ்சலில் ஆடி இங்கே காவியம் தனை நாம் படைத்திடுவோம்
.......ஜி.வெங்கடேசன்....... | |
33 | 287 | வாவா எந்தன் கனவுக் கன்னியே வந்து ஏறிக்கொள் கற்பனைக் குதிரையில் என் உள்மனத்தைச் சுற்றிக் காட்டுகிறேன் போகலாமா பிடித்துக் கொள் பலமாக அதோ கேட்குதே லப்டப் லப்டப் அதுதான் எந்தன் இதயத் துடிப்பு இதோ இதுதான் சுவாசக் குழாய் இதிலே ஓடுது உன் உயிர்மூச்சு இப்போது நுழைகிறோம் இதயத்திற்குள் இதய ஊஞ்சலில் ஆடிவிட்டுத் திரும்பலாம் தண்டபாணி | |
34 | 247 | உனது காதலில் வீழ்ந்தேன் நீயோ/ போகும் இடமெல்லாம் நானும் போனேன் / உனது இதயத்தில் குடியேறி எனது / காதலை பதிவு செய்வதற்கு நாளும்/ பொழுதும் நானும் அலைகின்றேன் நீயோ / கண்டும் காணாமல் செல்கின்றாய் பெண்ணே / தென்றலாய் தவழ்ந்து உன் மேனியில் / படர்ந்து உனது கெஞ்சும் விழியில் / உன்னுடன் கொஞ்சிப் பேசி உனது / உன்னுடன் காதல் கதைப் பேசிட/ த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் | |
35 | 344 | கடந்து செல்லும் மேகம் போலவே கடந்து சென்று விட்டாயே கண்ணா கனக்கிறதே என்னகம் வழியற்ற வலியால் காணப் பிடிப்பதோ உன் முகம் கேட்க விழைவதோ உன் குரல் களித்து ரசிப்பதோ உன் அசைவுகள் காணாமல் துடிப்பதும் உன்னால் தான் குழம்பித் தவிப்பதும் உன்னை எண்ணியே கடைசியில் என்னிடம் எனக்கென்று ஏதுமில்லை கண்ணா நீயென் இதயத்திலமர்ந்நு ஆடுகிறாய்! #எமா# | |
36 | 613 | இருண்ட வானில் ஒளிக்கொடுக்கும் நிலவே// நீ தகதகவென ஒளிக்கொடுப்பது போல்// என்னவளும் இருப்பாள் எட்டாத தூரத்தில்// அவளிருக்க நினைக்கிறேன் இதயம் வலிக்கிறது// நிம்மதி இல்லை நினைவுகள் தொல்லை// சொல்லாமல் போய் விட்ட அவளை// தேடுகிறேன் என் இதயத்தை தொலைத்தேன்// நினைத்தால் இனிக்கும் உன் நினைவே// இனியொரு காலம் எனக்கினி இல்லை// இதய ஊஞ்சலில் ஆடலாம் வாநிலவே// ஜெயாசந்திரமோகன் | |
37 | 224 | 🌹இதயம் கவர்ந்தவளே அருகில் வரலாமா/ 🌹இதய ஊஞ்சல் வெறுமனே ஆடலாமா/ 🌹உதய காலத்தில் ஊர்கோலம் போகலாமா/ 🌹உல்லாச பறவைகளாய்ழவானில் பறக்கலாமா/ 🌹நாளும் பொழுதும் வீணே கழியலாமா/ 🌹நாமும் கைக்கோர்த்து பொன்னூஞ்சல் ஆடுவோமா/ 🌹காதல் நிலவும் காய்ந்து போகிறதே/ 🌹ஊதக் காற்றும் ஓயாமல் வீசுதே/ 🌹தென்றல் வருடும் நேரம் வந்ததே/ 🌹மணநாள் காணவே மங்கையே புறப்படு/ ✍🏻க.குணசேகரன் | |
38 | 475 | அந்திப் பொழுதும் அழகாய் தோன்றும்/ மஞ்சள் முகத்தை காட்டித் தழுவும்/ அன்பே நீயும் அதுவாய் நெஞ்சில்/ இன்பம் தந்த மகிழ்வாய் என்னில்/ மரத்தின் கிளையில் மகிழ்வாய் அமர்ந்து/ துரத்தும் உந்தன் நினைவில் தவழ்ந்தேன்/ புன்னகைப் பூக்கும் பூவிழிக் கண்ணிலே/ என்னையும் பார்த்தே களித்தேன் பூங்குயிலே/ இனியவளே உந்தன் இதயத்தில் ஊஞ்சல்/ ஆடிநான் மகிழவா? ஆசையில் நெகிழவா/ தங்க.ஜான்பீட்டர் | |
39 | 510 | மனதை மயக்கும் மாலை வேளையில்/ கதிரவன் மறையும் அழகிய காட்சி/ அன்பே இருவரும் தனிமையில் அமர்ந்து/ இயற்கையை இரசித்து இன்பங்கள் காணலாம்/ பாடும் பறவைகளின் இசைக் கேட்டு/ கொஞ்சும் தென்றலின் வாசனையில் மயங்கி/ இதய ஊஞ்சலில் இதமாய் ஆடி/ இதயங்கள் பரிமாறி மகிழ்ந்து உறவாடி/ முதுமையிலும் இளம மாறாத காதலுடன்/ வாழ்க்கைப் படகை நீந்திக் கடப்போம்/ ராதாமணி | |
40 | 727 | அந்தி சாயும் மாலைப் பொழுது // அழகிய ஒளிவீசி அடங்கும் கதிரவன் // போனவளை எண்ணி ஏங்கும் உள்ளம் // தனிமை சோகம் தனித்திட வருகைபுரிந்திடு // நொடிகள் கடந்திட யுகமாகி போகிறது // மனதின் புழுக்கத்தை மேகத்திடம் தூதுவிட்டேன் //இருவரும் இணைந்து காதல்கீதம் இசைப்போம் // என்னுடைய இதய ஊஞ்சலில் ஆடவா //என்னிதய தேவதையே என்னுடன் சேர்ந்திடுவாய் // இணைந்து வானில் சிறகடித்து பறந்திடுவோம் // சுசி. |
போட்டி முடிவுற்றது



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக