ஒத்தையடிப்பாதையிலே - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 12 ஆகஸ்ட், 2020

ஒத்தையடிப்பாதையிலே

 










Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

639

ஒத்தையடிப் பாதையிலே அத்தமக   போகையிலே//  

வாடுதம்மா எம்மனசு  தேடுதம்மா வஞ்சியவளை//  

போகுதம்மா என் உசுரு காற்றோடு //

தேடித் தான் வருவாளோ , போன//

என் உசுர திருப்பித் தருவாளோ //


உடுமலை சே.ரா . முஹமது

2

344

சோளக்காட்டு ஓரத்திலே கூதற்காற்று வீசுகையிலே

சோடிக்கிளி தேடி வந்த பச்சைக்கிளி

ஓரக்கண்ணால் ஒய்யாரமாய்ப் பார்த்த படி 

ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையாகப் போகுதடி

என் நெஞ்சும் கூட வேகுதடி!


#எமா#

3

745

ஒத்தையடிப் பாதையிலே நடந்து போகையிலே/

வாய்க்காலில் ஓடும் தண்ணீரும் தோட்டத்தில்/

விளைந்த பயிர்களுமே கண்களுக்கு விருந்து/

வீசுகின்ற காற்று மேனியும் சிலிர்த்திடும்/

இயற்கையை இரசிக்கக் கொடுத்து வைக்கணும்.


க.சுலோஜனா

4

462

ஒத்தையடிப்பாதை இது இல்லை என்பேன்/

மனதை ஒன்றாக்கும் மாயப்பாதையாய்த் தெரிகிறதே/

உலகின் மொத்த அழகும் தெரிகிறதே/

மகிழ்ச்சியை அள்ளித்தரும் மாயமிதுவோ/

வாருங்கள் கவலை மறந்துகளிப்புறுவோம்


தயா

5

240

ஊர் செல்லும் அழகிய பாதை//

திசை மாறிய புதிய  பயணம்//

தென்றல் காற்று வீசுகிறது எந்தன்//

நெஞ்சிலே புத்துணர்ச்சி நடையில் தடுமாற்றம்//

தொடர்ந்து வருமோ வயல்களும் வழியெங்கும் //


உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️

6

201

ஒத்தையடிப் பாதையில ஒத்தையில போறவளே/

தனியனா நிக்குறேன்டி தங்கமே வாடிபுள்ள/

ஆத்தோரம் மீன்புடிச்சு ஆக்கியே தின்னுடலாம்/

வேகாத வெய்யிலிலே வெந்து தவிக்கிறேன்டி/

வந்தாலே சிலிர்க்குமடி வாசமான ரோசாவே//


புவனா  சற்குணம்  கனடா

7

283

ஒத்தையடிப் பாதையிலே மாமன்மகள்  போறபுள்ள/

சுத்திவந்து என்மனசை சொக்கவைக்குறாய் புள்ள/

கன்னக் குழியால குடெஞ்சு விழுத்துறியே/

குயிலும் கூவுகையில் குயில்ப்பாட்டுப் பாடுறியே/

கனவுல நீவந்து கனிவாப் பேசுறியே/


ஜமுனாமலர் இந்திரகுமார்

8

692

ஒத்தையடிப் பாதையில நடந்து வரும்/

வேளையில மொத்த உசுரும் போகுதடி/

ஒன் நெனைப்பில் ஏங்குதடி! சலசலத்து /

ஓடும் நீரோடையா அசைந்து வரும் /

தேரழகில் மங்களமே! அங்கமெல்லாம் குளிருதடி/


முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு

9

747

ஒத்தையடி பாதையிலே ஒத்தையா போகையிலே//

அத்தமக நெனப்பே அனலாக் கொதிக்குதடி //

அன்னமே வந்திருடி ஆனந்தம் தந்திடுடி//

உயிரே போனாலும் உன்னேசம் மாறாதடி//

சம்மதம்  தந்துவிடு சந்தோசதில் வாழ்ந்திடலாம்//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

10

259

வளமான பயிர்கள் தென்றலில் அசைந்தாட.../

வண்ணப் பறவைகள் கானம் இசைத்திட.../

வரப்பு நீர் வழியில் சலசலத்திட.../

கஞ்சிக் கலயங்கள் மரக்கிளைகளில் தஞ்சமாகிட.../

மங்கையர் ஒய்யாரமாக நடக்கின்றனர் களையெடுத்திட...!!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

11

238

பலபேர் நடந்துசெல்ல பாதையது உருவாகும்../

கவனமாகக் கடந்திடவே தொலைவோ குறைவாகும்../

நல்லவற்றை உரிமையாக்க நாகரீகம் அறிந்திடனும்../

வழிதவறிப் போகாமல் வாழ்க்கை செழிப்பாகனும்../

சிந்தையிலே சேர்த்திட்டால் சேருமிடம் அண்மையாகும்..//


#இளந்தை சேது


12

256

ஒத்தையடிப் பாதை இருமருங்கும் வயல்கள்/

ஒன்றிப் போகணும் ஒதுங்கி வழிவிடணும்/

முந்த நினைப்பது இடையூறைக் கொடுக்கும்/

வழிவிட மறுப்பதும் வாழ்வினைக் கெடுக்கும்/

உறவாய்ப் பழகி உயர்வோம் வாழ்வில்/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.


13

614

வரப்போரம் அவள் நடந்து வருகையிலே/

கொலுசு சத்தம் நாதமாய் ஒலிக்கிறது/

தலையில் சுமந்து வரும் போணியிலே/

உள்ளிருக்கும் மீன் குழம்பின் வாசம்/

நாவில் எச்சில் ஊற வைக்குது/


விஜயலட்சுமி

14

715

ஒத்தையடிப் பாதையிலே ஓரமாப் போறவளே

சிட்டாப் பறக்கும் சில்வண்டைப் பார்த்தாயா

தொட்டா மினுங்கும் செம்மேனியைத் தேடுதே

உட்கார்ந்து கொஞ்சம் பேசுனா என்ன 

பயப்படாதப் புள்ள மாமன் விரதம். 


அ.உமர்பாருக்

15

348

மல்லிப்பூ வாசமா சாரல் வீசையிலே //

பேச்சிலே சொக்கி சிலம்புறத கேட்டீகளா //

ஏலம் பறிக்கும் ஒத்தயடிப் பாதையிலே //

தளிரைக் கொறிக்கும் வெள்ளாடு போல //

ஆரவாரமா காத்திருக்கா பேச்சியம்மா மருமகள் //


உடுமலை ராமர்

16

465

ஒத்தையடி பாதையிலே ஓடிக் கொண்டுள்ளேன்

செத்து மடிகின்ற சிந்தனை மனதுடனே

மதத்தின் திணிப்பு மனிதம் அறுக்குது

இனத்தின் ஆளுமை எண்ணம் மாய்க்க

என்னத்தை சாதிப்போம் இருந்து இங்கே..?


இரா.வெங்கடாசலம்

17

254

ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாய் நடைநடந்து/

அத்தைமகள் போறாளே நான்வருவது தெரியாமலே/

பச்சை வயலெங்கும் தலையசைத்து ஆடும்/

இச்சையால் எம்மனசு வளையபட்டி தவிலாகும்/

திருவிழா செய்சங்கர் நாதசுரம் ஆலாபனையாகும்/


கி..மா.கனகராசன். சூலூர்.

18

734

ஒத்தையடிப்பாதையிலே ஒதுங்கிநீ  போகையிலே 

ஒய்யாரமாய்நான் வந்தா ஒதுங்கிநீ  போறேயடி...

ஒத்துக்கொள் நீ எனக்கே 

ஒருபோதும் மறுக்காதே

என் மாமா மகளே......


ஆர்.சிக்கந்தர் ஜலாலுதீன்

19

224

ஊருக்கு நடுவிலே ஒத்தையடிப் பாதையிலே

ஒய்யாரக்  கொண்டையுடன் அத்தைமகள் போறாளே

காடுகழனி  செழித்திருக்க  கன்னியவள் விழித்திருக்க

கல்யாண சுபவேளை களைகட்டி வந்திடாதோ/

அறுவடை முடியட்டும் பரிசம் முடித்திடுவோம்

   

  ✍🏻க.குணசேகரன்                                                                                                                                                     

20

450

சுத்திமுத்தி பாத்தப்படி மாந்தோப்பை ரசிச்சப்படி/

ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையாக நடக்கையிலே/

மறைஞ்சிருந்த மச்சானும்/ என்னெதிரே நிக்கையிலே

வெக்கத்திலே நானும் பாதையைத்தான் பாக்கையிலே

சட்டுனு அணைக்கையிலே பரவசத்தை என்னசொல்ல!


ரேணுகா சுந்தரம்

21

749

வயலும் விளைஞ்சிருக்கு வக்கடையும்  திறந்திருக்கு

வஞ்சியவள் நினைப்போடு வழிபார்த்துக் காத்திருக்கேன்

அஞ்சுகமே வந்து விடு அள்ளி உன்னைத் தந்து விடு

வீசுகிற தென்றலும் வீறுகொள்ள வைக்குதடி

ஓடியே வந்து விடு ஒத்தையடிப் பாதையிலே


க.மூ.முகம்மது றிஸ்மி, இலங்கை.

22

476

ஒத்தையடிப் பாதையிலே உன்னினைப்பில் போகையிலே/

உவப்பில் சிரிக்கையிலே  உரசிப் போனதடி/

விசமமாப் பாத்ததடி  வேலியோர ஓணான்  /

கள்ளிப்  பூவும்  கண்விழித்து மலர்ந்ததடி/

கண்மணி  நீயிருந்தால்  கலகலப்புக் கூடுமடி/


பரிமளாதேவி

23

345

ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாக நடப்பவளே.

காதோடு தோடுகள் களிநடனம் புரிகிறதே.

காலோடு கால்சலங்கை இசையும் இனிக்கிறதே

மேகக்கூந்தல் இடையைத்தாண்டி இனிமையாக

அசைகிறதே.

என்னிரு விழிகளும் விழுங்க துடிக்கிறதே.


வைர. நாகராசன்.

24

710

1. பச்சைக் கம்பளமாம் வயல் வெளியில்/

2. கண்ணுக்கு விருந்தாக பசுமைக்குப் பைங்கிளியும்/

3.பொய்யோ எனும் இடை அசைத்து/

4.ஒத்தையடிப் பாதையிலே ஒயிலாக வாறாளே/

5. எனக்கு அடங்காத என் ஆத்துக்காரி/


ஸ்ரீகுமார் அம்பிகா

25

617

பழைய நினைவுகள் நெஞ்சில் வந்ததே!//

காட்டுல மேட்டுல உன்னோடு நடக்கையிலே!//

உள்ளத்து கனவுகளை உதட்டில் சொன்னேனே!//

உறுதி தந்தாயே ! உண்மையைச் சொன்னாயே!//

காத்திருந்தேன் உனக்காக  ஒத்தையடிப் பாதையிலே!//


முதுவைமுகம்

26

580

ஒத்தையடிப் பாதையிலே ஓடிடும் தமிழினமே//

கொத்துக் கொத்தாக  கயவர்கள் காலடியில்//

செத்து இங்கே நாம் வீழ்ந்திடினும்//

முத்தான தமிழனின் மூச்சினில் நிறைந்தது//

சொத்தான தமிழும் சமத்துவ நீதியுமே//


சுந்தரலிங்கம் நிருத்திகன்.,அல்வாய்.

27

409

அத்தை மகள் நினைவோடு ஆசை//

மைச்சான் நானும் இங்கே ஒற்றையடிப்//

பாதையிலே சத்தமின்றிப் பொன வேளை//

வெள்ளம் பாயும் வாய்க்கால் வயலின்//

நடுவே சறுக்கி விழுந்து  விட்டேன்//

**************

க.சுதர்சனக்குரு.

28

605

பச்சைப் பட்டுடுத்திப் புவிமகளும் சிரித்திருக்கப் /

பச்சைப் பசுங்கிளிகள் பக்குவமாய்ப் பண்ணிசைத்து /

இச்சை தீர்க்கின்ற இன்பராகம் பாடிடவே /

மொத்தமாய்க் கொல்லுதடி மோகனமே உன்னழகு /

ஒத்தையடிப் பாதையிலே உனக்காகக் காத்திருக்கேன்.


மஞ்சுளா ரமேஷ்

29

721

ஒத்தையடிப் பாதையிலே தத்தையவள் போகையிலே

பெத்தவங்க மனசெல்லாம் பெண்ணவளின் நடைமேலே

தலைகவிழ்ந்த கதிர்போல தரணியிலே நடக்கனுமாம்

பாதையிலே கண்வைத்து பருவமதைக் கடக்கனுமாம்

மணமேடை ஏறும்வரை மனசைப் பழக்கனுமாம்.


:::::: பாலு தியாகராசன்:::::::


30

483

அழகிய அன்னமென அத்தைமக நடந்துவந்தா/

பழகிய  ஒத்தையடிப் பாதையிலே! அன்றுதான் /2

எழிலாச்சு ஒயிலாச்சு என்விழியில் அப்பாதை/3

கல்யாணம் பண்ணிக்கிட்டு கைகோர்த்து அவளோட/4

செல்லாத இடம்நோக்கிச் செல்லத்தான் என்னாசை//5


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை


31

746

வஞ்சியுன்னைக்  கொஞ்சிடவே என்னுசிரு துடிக்குது/

வாடக்காத்து வீசையில ஏமனசு கூசுது/

வாயாடிப் புள்ள வாவேன்டி என்னருகே/

ஆத்துமேட்டுத் தோப்புக்குள்ள அந்தமகன் நானிருக்கன்/

ஒத்தையடிப் பாதையால ஓரமாக வந்துவிடு/


--- மௌஜீத் ஏ ஹசன்---

32

588

ஒத்தையடிப்பாதையிலே! தனியா நான் ஒருவன் நிற்கையிலை!..//

என்னைச் சூழ்ந்த பசுமையெல்லாம் பட்டு போனதா  தெரியுதடி!//

பக்கத்தில் நீ இல்லையடி பாழும் மனது தவிக்குதடி! //

முடிவில்லா ஒற்றைப் பாதை மூன்று முடிச்சால் முடியுமடி! //

முறைப்பெண்ணே!  யென்னை முறையாக நீ மணந்தால், //

பஞ்சடைந்த யென் கண்கள் பசுஞ்(ம்) சோலை காணுமடி! //


                        ~~~பாரிஉமா. சர.                             

33

475

பச்சைப் பசேலென்ற பாதையும் தெரியுதே/

நச்சென்றுக் கால்கள் நடக்கவும் தோணுதே/

ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமாய் சென்றேனே/

சித்தமும் மகிழவே  சிலாகித்து நின்றேனே/

தென்றலும் என்னைத் தழுவியும் போனதே/


தங்க.ஜான்பீட்டர்

34

613

ஒத்தையடிப் பாதையிலே ஒத்தையா  போறவள/

நில்லு கொஞ்சம் நானும் வாறேன்

ஆசையா  நாளுவார்த்தைப் பேசிகிட்டு  போவோமே/

கண்டாங்கிச் சேலையில அழகாதான் இருக்கேடி/

மல்லிகை  வாசம் மடிமீது  இழுக்குதடி//


ஜெயாசந்திரமோகன்

35

716

ஒத்தயடிப் பாதையிலே வித்தைக்காட்டிப் போறவளே //1

அத்தமகன் நானிருக்கேன் முத்தமொன்றுத் தாராயோ //2

கஞ்சிக்கலயம் தூக்கிக்கிட்டு களத்துமேடு போறவளே //3

கொஞ்சிப்பேசி மகிழ்ந்திடவே கூடக்கொஞ்சம் வாராயோ 4

வந்தென் நெஞ்சுக்குள்ள மையங்கொள்ள மாட்டாயோ //5


- நாகை. ஹாஜா

36

636

தத்தித் தாவும் குயிலின் குரல்!

தெத்திப் பாயும் நீரின் சுழல்!

காற்றில் ஆடுகின்ற பச்சைப் பயிர்கள்!

கண்களைக் கவர்கின்ற நெற்கதிர் மணிகள்!

ஒத்தையடிப் பாதையிலே தத்திவரும் நினைவலைகள்!


சுத்தமல்லி உமா ஹரிஹரன் திருநெல்வேலி

37

726

பச்சைப் பட்டாடையிலே பூமாதேவி சிரிக்கிறாள்/

காண்பவர்கள் கண்களையும் பசுமையாக உருமாற்றுகிறாள்/

பரப்பிலே படர்ந்த அருகம்புல் மாலையாக/

அருகிலே பூக்கள் அர்ச்சனை தூவ/

ஒற்றையடிப் பாதையில் தாய் தவமிருக்கிறாள்


--காளிராஜ்பாலகணேஷ்

38

652

புல்லுக்கு நடுவே சிறு இடைவெளியே!/

காலுக்கு மட்டும் அது வழியே!/

 நடந்துதான் கடந்திடனும் இவ்வழி பாதையை/

எதிரே வந்தால் தடம் மாறிடுமே!/

பக்குவம் இல்லையெனில் பாதை தடுமாற்றம்தான்/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

39

574

ஒத்தையடிப் பாதையில் நித்தமும் நினைவுகள் /

முட்களாக தைக்க இதயம் வலிக்கும்/

ஒப்புரவு இன்றி ஓரமாய் நின்று/

காதல் கல்வெட்டில் கவிவடித்த காலங்கள்/

கானலாய்க் கரைந்து கண்களில் பொங்கும் ./


துரைராசா காண்டீபன், திருக்கோவில் .

40

707

ஒத்தையடிப் பாதையிலே ஒய்யாரமா போறவளே/

உன்னநெனச்சு காத்திருக்கேன் என்னக்கொஞ்சம் பாரேண்டி/

ஒருவாட்டி பாத்துப்புட்டா உனக்கென்ன கொறஞ்சிருமோ/

உனக்காக காத்திருந்தா உம்மனசு நெறஞ்சிருமோ/

கண்ணிலே சொல்லடி காதலித்துக் கொல்லடி/


✍️பா.ச.கண்ணன்

41

210

ஒத்தையடிப் பாதையிலே ஓடைத்தண்ணி  ஓடயில../

அத்தைமக நினைப்பில பித்தனாக ஆனேனே.../

மாமான்னு  கூப்பிட்டால் மனசெல்லாம் நிறஞ்சிடுமே..../

ஏம்மான்னு கேட்டிடவே மனசுமிங்க தவிக்கையிலே.../

வயலோரம் புதுநாத்தும் தலையாட்டி மகிழுதே..../


 திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍

42

399

👣/ ஒத்தையடிப் பாதையிலே அத்தைமகள் நடக்கையிலே!.../

👣/ அத்தான் மனசை   கொக்கிப் போட்டவளே!.../

👣/ கொத்தித் தின்றவளே  அழகான ராட்சசியே!.../

👣/ சொல்லத் தெரியவில்லை உன்னழகை வர்ணிக்க!.../

👣/ கவிஞனென்று வெளியிலே சொல்லிட வெக்கமே!.../ 


                    --சாக்கை.பொன்னழகு.

43

373

வயக்காடு வரவேற்க நெற்கதிர் முத்திருச்சு

கிராமத்துக் கிளியே வாறானே மாமன்

ஒத்தையடிப் பாதையில் உக்காந்து பேசலாமே

இதமான காற்றோடு இளந்தென்றல் வீசிட

கையோடு கைசேர்த்து நாளெல்லாம் இருப்போம்!!!


ஜயந்தினி வாகீசன்

44

727

இருபுறமும் நெல்வயலு  நடுவில் வகுடெடுத்தே //

ஒத்தையடி பாதையில பல்லிளிக்கும் நெல்மணிகள் //

நீண்டுருக்கும் வழிநெடுக்க பச்சைசேலை உடுத்தியச்சோலை//

கொக்குகள் பறக்கும் பசுமையான வயற்க்காடு //

வீசும் தென்றலில் நாணும் நாணல்கள் //


சுசி.

45

280

ஊரோடு உறவாடி ஒத்தையடிப் பாதையிலே//

வரிசையாய் போகயிலே மச்சான் தொடர்ந்தால்//

மனசு நெறஞ்சிடும் பயமும் நீங்கிவிடும்//

வரப்புத் தாண்டி வழுக்கி விழுந்தால்//

மலையான தோளில் மரபோடு தாங்கும்//


கோட்டீஸ்வரி ராமசாமி

46

668

வயலிலும் வரப்பிலும் வழுக்கிடா கால்கள்/

ஒத்தையடிப் பாதையிலே வஞ்சி யுன்னைக்/

கண்ட நேரமுதல் காலோடு மனதுமே/

வழுக்கி காதலால்  வீழ்ந்திட கரத்தை/

பிடித்திடு வீழாமல் இணைந்தே வாழ்வோம்/


ஏஞ்சல்சோபிதா

47

434

மலரும் நினைவுகளில் மூழ்கிய மனதோடு/

மங்கையின் காதலைச் சேமித்த விழிகளோடு/

ஒத்தயடிப் பாதையிலே ஓடிவரும் வேளையிலே/

தாவணியில் வந்தாயடி புள்ளிமானாய் என்னெதிரே/

வாயற்ற ஊமையாய் நின்றேனே உன்னெதிரே//


மீனாட்சி சுந்தரம்

48

618

ஒத்தையடிப் பாதையிலே தன்னந் தனியே/

ஒய்யார நடை நடந்து செல்பவளே/

ஓரக் கண்ணால் பார்த்து முறைப்பதேனோ/

ஒரு வார்த்தை சம்மதம் சொல்லிவிடு/

ஓரமாய்க் கூடவே வருவேன் துணைக்கு/


ஔவை.

49

562

இயற்கையன்னை மடியினிலே தவழ்ந்திடும் நெற்பயிர்கள்/

உழவனின் வியர்வையில் விளைந்திட்ட பொன்மணிகள்/

காண்பவர்  பசிதீர்க்கும் பச்சைநிறக் கதிர்கள் /                               

ஒற்றையடிப் பாதையில்  இருபுறமும்   பசும்சோலைகள்           மனதை   மகிழ்வூட்டி  இதயத்தைத் தாலாட்டுகிறதே/


பா.பத்மநாபன்                            

50

261

ஒத்தையடிப் பாதையிலே ஓடியாடிப் போகையிலே

அத்தை மகளே உன்னைக் கண்டேன்

உசிலம்பட்டி சேலைக் கட்டி கைவீசியே

போகையிலே மாமன்தான் மயங்கிப் போனேனே

வாரியே அனைத்திட உள்ளம்தான் துள்ளுதடி !


~ வள்ளல் இராமமூர்த்தி

51

582

ஒத்தைடிப் பாதையிலே ஓடிவரும் பெண்மயிலே

பித்தனென் பர்வையையும் பெயர்த்தெடுத்துப் போரவளே

சுத்திசுத்தி வருவாயே சோகந்தீர நீவந்து

முத்தமழை பொழிவாயே மோகமுடன் தொடுவாயே!


நெடுவை இரவீந்திரன்

52

616

ஒத்தையடிப் பாதையிலே காத்திருக்கிறேன் மன்னவனே

நீ கொடுத்த நினைவுகளில் வாழ்கிறேன்

ஏங்கி தவிக்கும் என் இதயத்திற்கு

விரைந்து வந்து விடியலை கொடு

கண்களின் தவத்திற்கு இதயத்தை வரமாக்கு


கா.கேமலாரூபினி

53

735

வயலின் வரப்பு கிராமத்தின் வழிகாட்டி/

சிற்றூரை இணைக்கும் ஊழலில்லாப்பாலம்/

குறுக்கு வழியில் விரைவுப்பயணம்/

சாலையில்லா ஊரு உதவுது பாரு/

மழையில் நடந்தால் வழுக்கும் அபாயமே.


   படைப்பாளி பைரவி

54

256

ஒத்தையடிப் பாதையிலே அத்தைமகள் கைவீசி/

ஒய்யாரமாப் போகையிலே குளிருதே என்னிதயம்/

சரியென ஒருவார்த்தை சத்தமின்றி நீசொல்ல/

ஊர்கூட்டிப் பரிசந்தான் மாமன் போடுவேன்/

மார்கழிக்குப் பின்னாலே மணமேடை காணவே..!


                     தங்க. சரவணன்,

              வடபழநி, சென்னை-26.

55

287

ஒத்தையடிப் பாதையிலே இளைப்பாரி உட்கார்ந்தேன்

அத்தைமகள் அரிசிக்கஞ்சி கொண்டுவந்தாள் ஆசையோடு

அவளயே தொட்டுக்கொண்டு  அத்தனையும்  சாப்பிட்டேன்

அவள் திரும்பிபோகிற நடையைப்  பார்த்து 

விரைத்துநின்ற நெற்கதிர் வெட்கப்பட்டு குனிந்துகொண்டது 


தண்டபாணி

56

480

கால் ஒட்டும் பூமிதான்/

அப்பனவன் கைபிடித்து அளந்திட்ட பூமிதான்/

அன்றாடும் அளந்தது  என் கால்கள்தான்/ 

ஆண்டுகள்  பலவானாலும் அடிவைத்து நடக்கையிலே/

 அப்பனின் நினைவுகள் அளவில்லா இன்பந்தான்/ 


கலைச்செல்வி

57

578

மானிடர்  வாழ்ந்திட மண்ணகம் நிலைத்திட//

மாசற்ற உழைப்பாலே செழித்த வயல்வெளியே//

பருவமழை பொழிந்திட இயற்கையின் எழிலென//

உழவரின் திறன்தனை பறைசாற்றும் நெற்கதிர்கள்//

ஒத்தையடிப் பாதையிலே வளைந்திருக்கும் பேரழகே//


...கவியாசகன்...!!!

58

221

வயல்காட்டின் இருமருங்கில் வயல்நெல்லும் நாணிநிற்க

ஒற்றையடிப் பாதையின் ஓரத்து நெல்மணியும் 

ஒற்றையாய் தலைசாய்த்து ஒய்யாரமாய் கூவியழைக்க 

அறுப்புக்கு நேரமாச்சு அறுத்துவிட ஓடிவாவென்று

அஞ்சாது கேட்டுவிட அறுப்புவேலைக்கு ஓடினேன் 


புஷ்பா கிறிஸ்ரி


 

இத்துடன் போட்டி இனிதே முடிகிறது 

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் 

வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages