Sl | எண் | புகைப்படம் | கவிதை |
1 | 697 | அண்ணன் தம்பி பெற்றோர் எனவே / அன்பைச் சுரக்கும் உறவுகள் இருக்கையில் / ஆடிப் பாடிக் கூடி வாழ்ந்தால் / நொடிகள் தோறும் இன்பம் ஊறும் / நோயும் பிணியும் ஓடியே போகும் / கோடி நன்மைகள் நிலைத்து கிடைக்கும்...! முனைவர் பெ.வெற்றிநிலவன்,குடந்தை... | |
2 | 341 | நாடி வரும் மிகுந்த சந்தோசம்/ தேடித் தரும் சிறந்த உற்சாகம்/ ஓடிப் போகும் கவலை நம்மிடம்/ வாடி நிற்கும் தனிமை அகன்றிடும்/ ஆடிப்போய் ஒதுங்கும் பகைவர் கூட்டம்/ ஈடில்லை ஒற்றுமை பலமே வந்திடும்/ பாலா கார்த்திகேயன் | |
3 | 596 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/ கூட்டுக் குடும்பமே குன்றாவொளி தரும்/ நாடி நம்மை நயமாய் அணுகும்/ நனி துன்பங்களைத் துடைத்து விரட்டும்/ தேடி வந்து தெளிய வைக்கும்/ தெள்ளமுதாய்த் திகழும் உறவுக் கூட்டம்! சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை | |
4 | 462 | உழைப்பினால் வாழ்வில் உயர்ந்து நின்றோம்/ பொறாமையில் தனியாகப்பிரிந்து நிற்கிறோம்/ இன்பம் இல்லாமல் துன்பமாய் வாழ்கிறோமே/ மீள வழி இல்லையா என்றால்/ இருக்கிறது வழி சொல்கிறேன் கேள்/ அன்பைக் கொடுத்து அகிலம் காப்போம் தயா | |
5 | 692 | பாசத்துக்கு பஞ்சமில்லை வேசத்துக்கு வேலையில்லை / தனிமனித பாரமில்லை தரணியாள முடக்கமில்லை / அல்லல்கள் வருவதில்லை வேதனைகள் தொடுவதில்லை/ அன்பிற்கு அளவில்லை கதைகளுக்குச் சலிப்பில்லை/ ஒரு மரத்தின் கிளைகளாய் ஒரு / கூட்டுப் பறவைகளாய் வாழ்ந்திடும் உறவுகள் !/ முனைவர்.சு.சித்ரா கரூர் தமிழ்நாடு | |
6 | 716 | கூடி வாழ வேண்டும் அன்பு // 1 அதுவே என்றும் சிறந்தப் பண்பு // 2 ஒரு கைத்தட்ட ஓசை இல்லை // 3 இரு கையணைக்க விலகும் தொல்லை // 4 விட்டுக் கொடுத்தால் வருமோ துன்பம் // 5 கொட்டும் அன்பால் கோடி இன்பம். // 6 - நாகை. ஹாஜா | |
7 | 482 | அந்தக் காலத்து இன்பம் வந்திடுமா / பாட்டியின் அறுசுவை உணவு கிடைத்திடுமா / அண்ணன் தங்கை பாசம் நிலைத்திடுமா/ பெற்றவர்களில் அன்பும் கூடுமா ஏங்குகிறேன்/ அத்தனையும் கானல் நீராகி போனதே / கூடி வாழ்ந்தால் கோடி நன்மை . தஞ்சை கோ பாலசுப்ரமணியன் | |
8 தி | 428 | குழந்தைகளாய் கூட்டுக் குடித்தனமாய் குதூகுலமாய் கும்மாளம் கொண்டாட்டம் எல்லாமே அக்காலம் சிக்கனமம் சேமிப்பு அக்கறையாய் இருந்திடுமே நொடிப்பொழுதும் நோயின்றி மகிழ்வாகக் கழிந்திடுமே விட்டுக் கொடுத்தும் விரும்பி அளித்தும் கூடியே வாழ்ந்துவிட்டால் குறவொன்றும் இல்லையம்மா. சுப்பிரமணியன் அன்புமலர். | |
9 தி | 614 | தனி மரம் தோப்பு ஆகாது/ ஊர் சேர்ந்து தேர் இழுத்தால்/ நிலையை அடைந்து விழா முடிவுறும்/ இளமையில் தனி மனிதனாய் வாழ்ந்தாலும்/ முதுமை காலத்தில் துணை தேவை/ மரணித்தாலும் தூக்க நால்வர் அவசியமே/ விஜயலட்சுமி | |
10 | 502 | மனிதன் மட்டுமல்ல பறவைகளும் விலங்குகளும்/ உலகில் ஒன்றாக கூடியே வாழ்கிறது/ இன்பமும் மகிழ்ச்சியும் இல்லத்தில் இருந்திடும்/ இறைவனின் ஆசியும் நிறைந்து கிடைத்திடும்/ உலகமும் அமைதியாக எப்பொழுதும் இருந்திடும்/ கூட்டுக் குடும்பமாக வாழ்வது சிறப்பு/ ............................... கார்த்திக்.கோ | |
11 ஒ | 715 | கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவனுக்கு துன்பமில்லை உறவைத் துறந்தால் வாழ்க்கை இன்பமில்லை கோடி இன்பம் கொஞ்சும் மனங்களில் வாழப் பழகினால் ஆனந்தத்திற்கு பஞ்சமில்லை நட்சத்திர கட்டடங்கள் ஒரே கூட்டில் கோடி சுமைதாங்கிகள் ஏந்தும் கரங்களில். அ.உமர்பாருக் | |
12 ஒ | 239 | பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை/ ஒட்டுமொத்த குடும்பமும் ஒற்றை வீட்டில்/ வேலைப்பளு குறைந்து ஒற்றுமைக்கு வழிவகுப்பும்/ அவரவர் பணியை கடமையை நினைத்தல்/ அன்பு மட்டுமே ஆட்சி நடத்தியது/ பண்புகள் வளர்ந்து நற்செயலும் மேலோங்கியது/ அனுசரணை கூட்டுறவு மலர்ந்து சிறப்பித்தது/ க.குமார் | |
13 | 746 | கூடி வாழ்ந்திடலாம் இன்பம் கண்டிடலாம்/ மலையே ஆனாலும் இலகுவில் உடைத்திடலாம்/ பகையே வந்தாலும் சேர்ந்து எதிர்த்திடலாம்/ துன்பம் தொலைத்திடலாம் சேர்ந்து மகிழ்ந்திடலாம்/ உறவின் வலிமையை உணர்ந்து கொள்ளலாம்/ உலகிற்கு அதை எடுத்துக் காட்டலாம்/ --- மௌஜீத் ஏ ஹசன் --- | |
14 | 254 | கூட்டுக் குடும்பம் கொடுக்கும் இன்பமே/ மூத்தோரின் வழிகாட்டுதல் நாளும் கிடைக்குமே/ பல்வேறு சொந்தங்கள் ஒரேவீட்டில் கிடக்குமே/ ஆளாளுக்கு பொறுப்போடு வேலைகள் நடக்குமே/ கவலைகள் இன்றி இன்பம் மலருமே/ விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே கோடியின்பமாகுமே/ கி.மா கனகராசன். சூலூர். | |
15 | 710 | 1. பல்லில்லா பாட்டனுக்கும் பாக்கிடிக்கும் பாட்டிக்கும்/ 2. பக்கமிருந்து கதைகேட்கும் குழந்தைகளும்/ 3. அப்பாவின் அதிகாரத்தில் அடங்கிடும் அம்மாவும்/ 4.அக்காளின் ஆசைக்கு அணையிடும் அத்தானும்/ 5.தம்பி தங்கைகளின் சண்டைக்கு மத்தியிலும்/ 6.கூடி வாழ்வதுவும் கோடி இன்பமாம்/. அம்பிகா ஸ்ரீகுமார் | |
16 | 745 | வாழ்க்கையின் ஆரம்பமே அதுதானே ஆணும்/ பெண்ணும் கூடி வாழ்ந்தாலே கோடி/ இன்பம் தந்திடும் மழலைகள் பெறலாம்/ ஒரு கையினால் ஓசை எழுப்ப/ முடியாதே தள்ளாடும் முதுமையில் தனித்து/ இயங்க முடியாது கூடவே வாழ்ந்திடுவோம். க.சுலோஜனா | |
17 | 290 | பகிர்ந்து உண்ணும் பண்பாட்டு நீட்சியாய் / ஒருவருக்கு ஒருவர் பாசம் கொண்டு / அக்கம் பக்கத்தாரும் ஒரே குடும்பமாய் / வேற்றுமை உணராது ஒன்றுகூடி மகிழ்ந்து / உதவிகரமாய் வாழ்ந்தே உலகம் போற்றிய / அக்கால நினைவுகள் சொல்லும் காட்சி / கா. சரவணன் | |
18 | 728 | ஆடி அடங்கும் வாழ்க்கையை வாழ்ந்திட// பாடாய்ப் படுகிற பரந்த உலகினில்// தேடியும் கிடைக்காத செல்வம் என்பது// கூடிவாழ்வதால் கிடைத்திடும் இன்பம் கோடிபெறும்// வாடியபயிராய் தனிமையில் வாழ்வு தகுமோ// கூடி வாழ்ந்துபார் வாழ்வு கொள்ளையழகு.// ஆவூர்க்குமரன் தமிழீழம் (கணபதிப்பிள்ளை சிவகுமார்) சுவிட்சர்லாந்து | |
19 | 256 | ஒரே குடும்பமாய் ஒன்றி வாழுங்கள்/ பெற்றோர் குழந்தையுடன் பேசி மகிழுங்கள்/ உறவுகளை மதித்து உண்மையாய்ப் பழகுங்கள்/ அறிவுரையை ஏற்று சிந்தித்து செயல்படுங்கள்/ அதிலே உங்களின் உயர்வும் இருக்கலாம்/ கூடி வாழ்ந்தால் கோடி இன்பமே/ .......நட்புடன் ஜெயபால் வி.பி. | |
20 | 238 | ஒன்றாகச் சேர்ந்து அன்பாகப் பழகிடுவோம்../ பகிர்ந்து வாழ்ந்து பயனுடன் உதவிடுவோம்../ இதயம் மகிழ்வதால் உதயம் முன்னேற்றமே../ ஒற்றுமை வாழ்வாக ஓங்குமே உயர்வுகள்./ நன்மைகள் பரவலாக நாடிடு கூடிவாழ../ நலமான மகிழ்வாகும் உற்சாக உள்ளத்தால்..// #இளந்தை சேது | |
21 | 617 | அன்பின் படைப்பில் அமுதம் கிடைக்கும்// முதியோரின் வாக்கு முத்தாய் இருக்கும்// பாசத்தின் பிணைப்பு பகையை குறைக்கும்// மழலை உள்ளங்கள் அழுகை தவிர்க்கும்// மருத்துவச் செலவு மங்கிப் போகும்// உறவுகளின் பாசம் உயர்ந்து நிற்கும்// #முதுவைமுகம் | |
22 | 618 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/ நாடி வரும் நலன்கள் நம்மை/ ஓடிப் போகும் துன்பம் தொலைவில்/ வாடி நிற்கத் தேவையே இல்லை/ ஆடிப் போகாது அன்பின் ஆழம்/ தேடி அணைப்போம் சொந்த உறவை/ ஔவை. | |
23 | 580 | வாழ்வில் இன்பம் வகையாய் செழிக்க// வீழ்ந்திடும் தமிழா விரைவாய் சிந்திப்பாய்// பண்டைய நாளில் பண்பான வாழ்வு// மண்டையில் உறைக்க மகிழ்வுடன் எழுவாய்// கூட்டுக் குடும்பமாய் கூடி வாழ்ந்தே// நாட்டில் நலமாய் நாளும் வாழ்வாய்// சுந்தரலிங்கம் நிருத்திகன்.அல்வாய். | |
24 | 221 | கூடிவாழ்ந்தால் நன்மைகள் கோடியாய் கிட்டும் ஆடிப்பாடி மகிழ்ந்திடும் அருமைக் குழந்தைகள் சோடிசேர்ந்து மாவிடித்து சேர்ந்து கொண்டாடிடும் நாடிவைத்தியங்கள் யாவும் நன்றாக அமைந்திடும் தேடிச் சிறப்புடன் தங்கமான உறவுகளுடன் படித்து மகிழ்ந்திடும் பாசமான கூட்டுக்குடும்பம் புஷ்பா கிறிஸ்ரி | |
25 | 207 | தனியே வாழ்ந்தால் தனித்துவம் இல்லை/ ஒன்றாய் வாழ்ந்தால் நன்மைகள் கிட்டும்/ பாசப் பகிர்வில் பரவசம் உண்டாகும்/ பாதுகாப்பு அரணாய்க்குடும்பத்தைக் காக்கும்/ பந்தபாசம் அத்தனையும் இரத்தத்தில் கலக்கும்/ கூடி வாழ்ந்தாலே கோடி இன்பமாகும்/ -முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி. | |
26 | 722 | பெற்றவர்களோடு சான்றோர்களோடு பந்துக்களோடு பந்தமாக/1 சொந்தத்தின் அணைப்பில் வசந்தமான வாழ்வாக/2 அயலார் அசலாருடன் நேசங்களை பகிர்ந்து/3 இன்னல் துறந்து வஞ்சம் அறுத்து/4 ஒற்றுமையாக ஒன்றப்பட்டு இணைந்து ஒரே வானமாக/5 கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/6 சுஜாதா அருணாச்சலம் | |
27 | 652 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பமே!/ உறவுகளை கண்டால் ஓடும் துன்பமே!/ உறவுகளின் மத்தியில் சச்சரவுகள் இருக்கலாம்/ உறவுகள் மாற்றாரிடையே விட்டுக் கொடுப்பதில்லையே!/ உறவுகளின் உன்னதம் வாழ்ந்தாலே புரியுமே!/ கிராமங்களின் உறவுகள் நகரங்களில் இல்லையே!/ கூ.மு.ஷேக் அப்துல் காதர் | |
28 | 283 | பொறியும் இன்றி உடலும் அசைந்தது/ உடலே இணைந்தால் நலனும் தந்தது/ கூடி இருத்து கூழும் குடிக்கையில்/ கோடி சுகம் தந்ததும் அதுவே/ கூட்டி விட்டு கூடச் செய்து/ உறவின் பிணைப்பை இறுக்கச் செய்தது/ ஜமுனாமலர் இந்திரகுமார் | |
29 | 434 | ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உறவுகள் தருமே/ மகிழ்வு வாழ்க்கையோ உலகை வென்றிடும்/ நல்லது கெட்டதைப் பிரித்தறியும் மனதை/ கற்றுக்கொடுக்கும் நம்மைச் சுற்றியுள்ள சுற்றம்/ அன்பு கருணையை நடத்தையோடு உணர்த்துவது/ கூட்டுக் குடும்பமே கொண்டாடி மகிழ்வோமே// மீனாட்சி சுந்தரம் | |
30 | 483 | மாத்துலக்கைப் போடுகிறார் மங்கையர்கள் பசிதணிக்க /1 தாத்தாவோ ஓய்வாக பாட்டியோ பெருக்குகிறார் /2 நுங்குவண்டி விளையாட்டு நோயற்ற காலமது /3 மரத்தில் தொட்டிலிட்டு மகிழ்ந்துறங்கும் மழலை/4 ஆளுக்கோர் பணியாற்றும் அழகான குடும்பம் /5 ஓலைக் குடிசையில் ஒற்றுமையாய் வாழ்கின்றார் /6 ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை | |
31 | 463 | கடந்த காலப் பட்டறிவு இனிமை! கூட்டுக் குடும்ப உறவுகளின் பாசம் ! நிலவினைப் பார்த்து முற்றத்து கைச்சோறு! உடல் துயரெனின் பாட்டியின் வைத்தியம் ! எத்தனை இழந்தோம் நர(க) வாழ்க்கையில் ! கூடி வாழ்ந்து அனைத்தையும் மீட்போம்...... அரவந்தன் தஞ்சை | |
32 | 735 | ஒற்றுமை என்றும் கூட்டுறவு பலம்/ விதைகளின் கூட்டணி பல தோப்புகள்/ ஒன்று பட்டால் என்றும் வெற்றிக்கனிகள்/ தனிமை வாழ்வின் மகாக்கொடுமையின் உச்சம்/ இராணுவம் தாய் நாட்டின் முரசம்/ விளையாட்டின் வியர்வை கோப்பை நிச்சயமே படைப்பாளி பைரவி | |
33 | 726 | அன்பிலே ஆயிரம் இறைவனைக் காணலாம்/ ஆறுதல் சொல்லியே காயங்களை ஆற்றலாம்/ பல இதயங்களை விலைக்கு வாங்கலாம்/ அச்சாணியின் பிணைப்பிலே இயந்திரங்கள் இயங்கும்/ பேரன்பின் அரவணைப்பிலே எண்ணங்கள் அழகாகும்/ கூடி வாழ்ந்தால் குழப்பங்களை கொல்லலாம்/ --காளிராஜ்பாலகணேஷ் | |
34 | 259 | குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை / கூடி வாழ்தலே மகிழ்ச்சியின் எல்லை / குறையற்ற மனிதராக எவரும் பிறப்பதில்லை / கோபதாபம் தவிர்த்தால் சலசலப்பு சங்கடமில்லை / மன்னித்து மறப்பது மனிதநேயப் பண்பாகும் / நிலையற்ற வாழ்வில் அரவணைத்து மகிழ்வோம் / ஜெயலெட்சுமி மாணிக்கம் | |
35 | 204 | அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு// ஆன்றோர் வாக்கு அறிவோம் மனதில்// ஒருகை தட்டியே ஓசையும் வருமா// ஒற்றுமை இன்றி வேர்களும் பலமா// உணர்வாய் மனிதா உறுதியில் நீயும்// கூடியே எழுந்தால் இமயமும் பையில்// ஆஸாத் கமால் | |
36 | 317 | கூட்டுறவு முறையில் குடும்பம் இருந்தால்/ குதூகலம் குறையின்றி மகிழ்ச்சி ததும்பும்/ மூத்தோர் இருந்தால் நோய்கள் அண்டாது/ மாற்றம் உண்டாகும் மலர்ச்சி கிடைக்கும்/ வறுமை இல்லாமல் வாழ்க்கைப் பயணம்/ அருமையான இல்லறம் இல்லையே துயரம்/.. க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி | |
37 | 450 | அதிகாலை காய்கறிக்காரியும் அடுத்து சலவைக்காரனும்/ குடும்ப உறுப்பினர்க்கு முடிதிருத்தும் கலைஞனும் நலமில்லாமல் அழுகின்ற மழலைக்கு தலையில் ஓதியே ஆசியிடும் மசூதி முதியவரும் நமக்கு போதிப்பது ஒன்றுதான் கூடியே வாழ்பவர்க்கு நன்மைகள் கோடியே என்றுதான்/ ரேணுகா சுந்தரம் | |
38 | 717 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/ நாடி வருமே நமது இல்லம்/ ஓடிப் போன சொந்தம் யாவும்/ தேடி வந்தே உறவு கொள்ளும்/ பாடிக் களித்தே ஒன்றாய்க் கூடி/ ஆடி மகிழ்வோம் அன்பால் இணைவோம்/ கந்தசாமி நடேசன் | |
39 | 646 | ஓடி விளையாடியது.. .....ஓய்ந்தே விட்டது // 1 பாடி மகிழ்ந்ததோ.. .....பாரில் மறைந்தது // 2 தனிமைச் சிறையென.......தனிக் குடித்தனம் // 3 தரணியின் வளர்ச்சியில்.. ....தரமோ குறைந்தது // 4 இயல்பினை மறந்து.. .....இழந்தது போதும் // 5 கூடுதல் இன்புறுவோம்.. .....கூடியே வாழ்ந்து // 6 இழந்த இன்பத்தை தேடும், #இரசித்து_கருத்துரைக்க_மட்டும் பனைக்குளம் சகூருதீன்... | |
41 | 588 | தனிமரம் தோப்பாகாது தனித்திருந்தால் வாழ்வாகாது. // பிரிவினால் பட்டதுன்பம் பார்த்தபின்னுமா மனதிலின்பம்! // பலரின் சாதனையே பகைவனை அழிக்கும். // ஒற்றுமையின் குரல் ஓங்கி ஒலிக்க, // எதிரியின் கால்களும் - நம் எல்லைத்தாண்ட மறுக்கும். // கூடி வாழ்ந்தால் – பணம் கோடிகள் மிஞ்சும்!..// ~~~பாரிஉமா. சர
| |
42 | 616 | அன்பும் அரவணைப்பும் தாண்டவம் ஆடும் பெரியோர் ஆசியாலும் குழந்தையின் சிரிப்பாலும் இல்லம் முழுதும் இன்பம் பொங்கும் துன்பத்தில் தோள் சாயவும் துணையாகும் ஒன்றாய் வாழ்தல் பூமியிலே சொர்க்கம் இறைவனும் இயற்கையும் ஏங்கி மயங்கும் கா.கேமலாரூபினி | |
43 | 671 | உறவெனும் கண்ணாடி முகம்காட்டும் முன்னாடி உடைத்திட்ட பின்னாடி ஒட்டுமோ மறுபடி... ஒருமுறை பிறந்திட்ட நாமிங்கு மறுமுறை பிறந்து ஒன்றாகும் வாய்ப்பு உண்டாகுமோ வாழ்கின்ற காலமெலாம் பிரிவினை பேசாமல் இணைந்து வாழ்ந்திடுவோம் இன்பமே கண்டிடுவோம்... கி.அருள்குமரன். தலைஞாயிறு. | |
44 | 741 | ஆயாவின் அன்பில் வளர்வதா குழந்தை?// தாத்தா பாட்டி தவிர்த்து வாழ்ந்தால்// மனதில் சிதைவு நோய்வந்து தாக்கும்// தூரமாய் இருந்த சொந்தம் தொலைந்து// பக்கமிருந்த உறவும் பகையாய் ஆனால் // அடுக்கடுக்காய் இருந்தும் அனாதை தானே?.// பி.கே.சாமி. | |
45 | 344 | அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ஒன்றாக வாழ்தலே மானிட பலம் ஒரு கை ஓசையை ஆக்காது உறவுகளின்றி வாழ்வதால் உள்ளுக்குள் களிப்பேது ஊறு வருகையிலும் உள்ளம் மகிழ்கையிலும் கரம் கோர்த்திட உறவுகள் உடனிருக்கனும்! #எமா# | |
46 | 669 | மகிழ்வைக் கொடுப்பது கூட்டுக் குடும்பம்/ உறவுகள் இணைவது கூடி வாழ்ந்தாலே/ உணர்ந்தே செயல்பட கோடி இன்பமே/ கருத்தினைப் பகிர்ந்தே நலமோடு வாழ/ சுமைகளைப் பகிர்ந்தே பொறுப்புடன் வாழ்ந்து/ நிலைத்திட வைக்கும் நன்மை பயக்கும்/ நஸீரா வசூக் | |
47 | 240 | எல்லோரும் ஒற்றுமை உணர்வுடன் சேர்ந்து// வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும்// சிறியவர்கள் கட்டுப்பாடுடன் வளர்வார்கள் சிறப்பாக// இல்லறம் இனிக்க மகிழ்ந்து உறவாடி// துன்பத்தை சாமாளிக்க துணை இருப்பார்கள்// கவலைகள் இல்லாமல் இவ்வுலகில் வாழலாம்// உமா பாலகிருஷ்ணன், பெங்களூர் 🏵️ | |
48 | 533 | குடிசை வீடாயினும் குதூகலம் நிறைந்தபடி குடும்பமாய் வாழ்ந்திடவே குலங்கள் செழித்திடுமே..! ஆயம் இடத்தில் அன்பினை விதைக்க காயங்கள் யாவும் கட்டுக்குள் வந்திடுமே..! கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் நாடிடும் உறவுகள் நமக்குத் துணையே...!! க.இரவிச்சந்திரன். | |
49 | 604 | நேரங்கள் கூடினால் குடிசையும் கோபுரமாகும்//1 மேகங்கள் கூடினால் இயற்கையும் அழகாகும்//2 கூடிடும் ராகத்தால் இன்னிசைப் பிறப்பாகும்//3 தனித்தனி மரங்கள் ஒன்றானால் தோப்பாகும்//4 வேறுபடும் மனங்களால் கூறுபடும் உறவுகள்//5 ஒன்றாகும் உணர்விலே நன்றாகும் வையமே// ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ கவிஞர் கோவை ஆறுமுகம் | |
50 | 725 | குடிசையில் வாழ்ந்தாலும் அன்புடனும் பண்புடனும்/ வேலைகளில் ஆண்களும் பெண்களும் இணைந்து/ சிரித்துப் பேசியே செய்து முடித்து/ கிராமத்திலேயே பிள்ளைகளையும் ஒன்றிணைந்து வளர்த்து/ 'கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்'/ புதுவம்சத்திற்கும் உணர்த்தியே வழிவழியாகத் தொடருகின்றனரே............✍️ கவிஞர்.மரு.எழிலன் | |
51 | 636 | தேடி வைத்த செல்வம் வாராது!/ ஓடிப் போன நாட்கள் மீளாது!/ கடந்து வந்த பாதை மறையாது!/ அடைந்து வந்த மகிழ்ச்சி குறையாது!/ நாடி வந்த சொந்தங்கள் சேர்ந்து/ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி | |
52 | 562 | கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் வந்தடையுமே / தனித்து வாழ்ந்தால் சாதிக்க முடியுமோ/ சிறியப் பூக்கள்தான் தொடுக்க மாலையாகிறது/ எழுத்துக்கள் சோர்ந்தால்தான் நூல்கள் உருவாகும்/ ஒற்றுமையான உறவுகளே குடும்பத்தில் மகிழ்ச்சி/ ஒருங்கிணைந்த சமுதாயமே நாட்டின் வளமாகும்/ பா.பத்மநாபன் | |
53 | 373 | ஊரோடு உறவாகி ஒற்றுமை மேலோங்க/ கூட்டுக் குடும்பமாய் மாவும் இடித்தோம்/ முற்றத்தில் சிறுவர்கள் விளையாட்டை ரசித்து/ கிராமத்து கீதங்கள் இசைபாடித் திரிந்து/ தாத்தா பாட்டியோடு தழுவிய நினைவுகள்/ கூடி வாழ்ந்தால் கோடி இன்பமேயாம்!!! ஜயந்தினி வாகீசன் | |
54 | உணவே மருந்தாக குடும்பத்தில் அனைவரும் / ஒன்றாக கூடி உணவருந்தி மகிழ்ந்ததும் !! மருத்துவரை நாடாத பாட்டியின் கைவைத்தியமும் ... / உறவுகளோடு உறவாக ஐந்தறிவு ஜீவன்களும் ... / அன்பும் பாசமும் நிறைந்த கூட்டுக்குடும்பமாய் ... / கூடிவாழ்ந்தால் கோடி இன்பம் காணலாமே ... !! சுமதி கணேசன் | ||
55 | 711 | இதயத்தின் இருப்பிடமாய் இன்பத்தின் பிறப்பிடமாய் // பாராட்டி சீராட்டி பக்குவமாய் தாலாட்டி // துன்பத்தில் தோளாக நல்லதை நாளுஞ்சொல்லி // பிஞ்சிலே கருகும் பிழைகளைத் திருத்தி // தலைமுறைகள் காக்க தனிமைகளைப் போக்க // கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் // நா . தமிழ் சுகு | |
56 | 210 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.../ தேடி வருமே இன்ப வெள்ளம்.../ ஆடிப் பாடி வேலை செய்ய.../ வாடி நிற்கும் முகமும் மலரும்..../ நாடி வந்தோர் நன்மை பெற.../ ஆனந்தம் பொங்கும் இல்லம் தனிலே..../ திருமதி சுப்ராணி சிவகுமார்.....✍ | |
57 | 709 | இறையவர் உலகிலும் கிடைத்திடா இன்பம்// கூடி வாழ்ந்தால் ஈடில்லா பேரின்பம்// அறிவுரைகள் குறைவின்றி அக்கறைகள் பிறந்திடும்// வேலைகள் பகிர்விலே உள்ளங்கள் இணைந்திடும்// சந்ததிகள் கண்முன்னே கவலைகள் பறந்திடும்// கூட்டுக்குடும்பம் இது உறவுகள் தழைத்திடும்// தாழை. இரா. உதயநேசன் | |
58 | 278 | சொந்த பந்தங்கள் சுற்றமாய் சுகந்தர/ கூடியே வாழ்ந்திட்டால் கோடிகளில் நன்மையாம்/ ஒற்றுமை ஒங்க ஒழுக்கங்கள் நிறைந்திடும்/ உறவுகளின் அருமை ஒவ்வொன்றாய்ப் புரிந்திடும்/ மூத்தோர் முதியோர் பண்புகள் பரந்திடும்/ நல்வாழ்வு வாழ்ந்திட நல்வழி அமைந்திடும்/ கிருஷ்ணலதா வசீகரன் ஜெனீவா- சுவிஸ் | |
59 | 707 | விட்டுக் கொடுக்கும் உறவுகள் எங்கோ? இன்னிசை போலே இன்பங்கள் அங்கே! கட்டிக் காக்கும் கூட்டுக் குடும்பம் கொட்டிக் கிடக்கும் கொள்ளை இன்பம்! தட்டிக் கொடுக்கும் தந்தையின் செயலில் தவமாய்க் கிட்டும் தரமாய் இன்பம் ✍️பா.ச.கண்ணன் | |
60 | 515 | கோடி கொடுத்தாலும் கிடைக்காத நிம்மதி/ கூட்டுக் குடும்பத்தில் வரமாகக் கிடைக்கும்/ கவலைகள் மறக்கக் கவனமாக ஆதரித்துக்/ குழந்தைகள் வளர்க்க உறவுகள் சூழ்ந்திருக்கும்/ காரியங்கள் யாவிலும் கைகொடுக்கப் பலரிருக்கக்/ குதூகலம் எப்போதும் கூட்டுறவில் நிறைந்திருக்கும்/ லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் | |
61 | 261 | முன்னோர்கள் அந்நாளில் கூடியே வாழ்ந்ததால் உறவுகள் நட்புகள் உதவியும் கிடைத்தன இந்நாளில் இதுவே இயலாமல் போனதே பரந்த மனப்பான்மை பறந்து போனதே ஒற்றுமையின் பலத்தை உணராமல் தவிக்கின்றனரே கூடி வாழாமல் வாடியே நிற்கின்றாரே ! ~ வள்ளல் இராமமூர்த்தி | |
62 | 564 | இன்பம் பொங்கிடும் இனிய வாழ்வில் அன்பெனும் அரண் அமைத்து நாமும் துன்பங்கள் அகன்று துணிவுடன் வாழ்ந்திட உறவு முறைகள் உயிராய் என்றும் நிலைத்திடுமே நின்மதி தரும் தாராளம் குடி வாழ்ந்தால் கோடி இன்பம். இராசையா கௌரிபாலா. | |
63 | 258 | ஒருவர்க்கு ஒருவர் அன்பைப் பகிர்ந்து/ ஓராயிரம் துன்பங்கள் வந்த போதும்/ ஒற்றுமைப் பேணியே உறவுகள் அனைவருடன்/ சொந்தங்கள் பாராட்டி, சோர்ந்து போகாது/ கூடி வாழ்ந்திடக் கோடி நன்மை/ கூட்டுக் குடும்பம் கோயில் ஆகுமே! தங்க. சரவணன்,வடபழநி, சென்னை-26 | |
64 | 201 | சொந்த பந்தங்கள் சுற்றியே வாழ்ந்தால் / கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி / குழந்தைகள் வளர்க்க கைகொடுக்கும் உதவிடும்/ கவலைகள் சூழ்ந்தாலும் ஆறுதல் சொல்லிடும்/4 ஒற்றுமை போற்றி ஒழுக்கங்கள் கற்றிட/ மூத்தோர் முதியோர் காட்டிடும் நற்பண்புகழே// புவனா சற்குணம் கனடா | |
65 | 747 | கூட்டுக் குடும்பமே குவலயத்தில் சிறந்திடுமே// மூத்தோர் துணையோடு பிஞ்சுகள் வளர்ந்திடுமே// வரவுகள் அதிகரித்து செலவுகள் குறைந்திடுமே// வேலைகள் பகிர்வதால் விரைவாக முடிந்ததுமே// துன்பங்கள் பகிர்ந்து துயரங்கள் விலகிடுமே// இன்பங்கள் நிறைந்து இல்லறம் செழித்திடுமே// ஜெ.சுகமணியன், வாழப்பாடி | |
66 | 613 | இல்லம் நிறைந்த சொந்தங்களோடு ஆடிப்பாடி// கூடி வாழ்ந்தால் அன்பும் பாசமும்// நிறைந்தே வழியும் ஆளுக்கொரு வேலை// பகிர்ந்தாள் இல்லைத் தொல்லையே வாழ்வில்/ கூட்டுக் குடும்பமே நன்மையைத் தரும்// கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்// ஜெயாசந்திரமோகன் | |
67 | 510 | கூட்டுக் குடும்பம் இன்பம் தருமே/ உறவுகள் மேம்பட்டு ஒற்றுமை ஓங்குமே/ பொங்கும் மகிழ்ச்சி வீட்டில் கூடிடும்/ இல்லறம் என்றும் நல்லறமாக விளங்கும்/ ஆயிரம் துன்பங்களும் பனியாக விலகிடும்/ உள்ளங்கள் பரிமாறி உணர்வுகள் மேம்படும்/ ராதாமணி | |
68 | 465 | குடும்பம் என்பதே கூடி வாழ்தல்/ இடும்பை எத்தனை வரினும் தாங்கி/ கூட்டாய்ப் பகிர்ந்து ஒருவர்க்கு ஒருவர்/ ஆறுதல் வார்த்தையால் அணைத்துக் கொள்வர்/ தேறுதல் சொல்லி திரும்பியே பழம்நிலை/ இயல்பாய் வாழ்வதே இன்பம் கோடியாம்./ *இரா.வெங்கடாசலம்* | |
69 | 287 | அவ்வை சொல்லிவிட்டு அன்றே போய்விட்டாள் பாரதி பாடிவிட்டு என்றோ மறைந்திட்டார் பக்கம் பக்கமாய்ப் புத்தகத்தில் பதிவுகள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது மதமும் சாதியும் மனிதரைப் பிரித்தன கூடி வாழ்ந்திடின் கூச்சலும் குழப்பமும் தண்டபாணி | |
70 | 409 | குடும்பம் என்று வந்தால் உலகில்// கூடி வாழ்ந்தால் கோடி நன்மை// உண்டு நாடி நீயும் போகாதிருப்பினும்// தேடி வரும் செல்வம் உனக்கே// பாயில் துடித்து வீழ்ந்தாலும் ஊரார்// ஓடி வந்தே உதவிகள்புரிவர்// ****** க.சுதர்சனக்குரு. | |
71 | 244 | எண்ணற்ற எண்ணங்களின் வலிமை ஒற்றுமை // தன்னம்பிக்கை கொண்டே உறவுகள் வளரும் // விழிப்புணர்வு ஒன்றே வேற்றுமையை விரட்டும் // கூட்டுக் குடும்பம் இமயத்தின் சிகரம் // நாளைய உலகம் நம்பிக்கை உள்ளவரை // மனிதநேயத்தின் பகுத்தறிவே விதியைத் துரத்தும் // கவிஞர் கோவை செல்லப்பன் | |
72 | 578 | கூட்டுக் குடும்பத்தில இல்லறம் சிறந்திடும்// பழமையும் புதுமையும் நிறைந்தே திகழ்ந்திடும்//மூத்தோர் நன்னெறியும் அறநெறியும் புரிந்திடும்// இன்பம் நிலைத்திட துன்பங்கள் மாய்ந்திடும்// அன்பும் அரவணைப்பும் குறைவின்றிக் கிடைத்திடும்// வாழ்வியல் விழுமியம் யாதென உணர்த்திடும்// ...கவியாசகன்...!!! | |
73 | 668 | கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்/ புரிந்து வாழ்ந்தால் அன்பு பெருகும்/ கூட்டுக் குடும்பம் தந்திடும் சொர்க்கம்/ துன்பம் கூட நெருங்க அஞ்சும்/ கரத்தை நீட்டி துயரை துடைக்க/ விழையும்உறவுகள் வாழ்வின் வரமாகும்/ ஏஞ்சல்சோபிதா | |
74 | 490 | உறவுகள் கூடினால் இன்பங்கள் பெருகுமே/ உதவிகள் செய்திட மனம் விரும்புமே/ வேலைகள் விரைவாய் முடிந்திடும் தினமுமே/ மழலைகள் முகம் மலர்ந்திடும் மகிழ்ச்சியிலே/ துன்பங்கள் எல்லாம் தூரமாய் ஓடுமே/ கூடி வாழ்ந்தால் கோடி நன்மையே/ செ.புவிதா | |
75 | 425 | கூட்டுக் குடும்பம் ஒற்றுமையின் சிகரமே // தனிமரம் எக்காலத்தும் தோப்பாக முடியாதே // குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் // குடும்ப உறவின்றி நிகழ்வுகள் சிறக்காதே // பாசத்தின் உணர்வோடு மகிழ்வுடன் வாழ்ந்திடுவோம் // நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகமே கலாகண்ணன் | |
76 | 682 | அன்பின் ஊற்று வாழ் உறைவிடம் அரவணைப்பு தருமே உய்தல் தெம்பு தொலைந்து நிற்கிறதே ஊடகப் பொய்மையில் விலை கொடுத்தே வாங்கிக் கொள்கிறோம் தொல்லைகள் தீர தொலைத்து விடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ப.தாணப்பன் | |
77 | 247 | கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வந்தோம் / நன்மைகள் பல அடைந்து சென்றோம் / ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்தோம் / நட்பாய் நாளும் பழகி நின்றோம் / ஊரில் பெயருடன் வாழ்ந்து வந்தோம் / நலமாய் நாளும் இருந்து வந்தோம்/ த.காமராசு. தாராசுரம் கும்பகோணம் |
போட்டி நிறைவு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக