10.09.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
பொருட்பால் -- நட்பியல்
அதிகாரம் -- 93
" கள்ளுண்ணாமை "
●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
கள்ளினைக் குடிப்பவரைப், பகைவரும் அஞ்சிடாரே!
கள்ளினைக் குடிப்பவர், பெருமையும் இழப்பாரே!
கள்ளுண்ணல் ஆகாதெனினும்,
விரும்பி உண்டிடலாம் ;
கள்ளினைச் சான்றோரின் மதிப்பைப் பெறவிரும்பாரே!
விரும்பீன்றவளுக்கும் துன்பந்தரும் என்பதால்,கள்ளுண்ணல்;
விரும்பும் சான்ரோரின்
பெருவெறுப்புக் குள்ளாகுதே!
விரும்பாக் கள்ளுண்ணலை, நாணமுறு நற்பெண்ணும்;
விரும்பிப் பாராது, புறக்கணிப்பாள் வெறுத்தே!
வெறுத்திடும் கள்ளினை, அதிவிலை கொடுத்தேனும்;
வெறுக்காது பருகுதல்,
புரியாத அறியாமை!
வெறுத்திடும் கள்ளும், நஞ்சும் வேறாயினும்;
வெறுத்திடும் அழிவினில், சிறு வேறுபாடே!
வேறுபாடாவது உறக்கத்திற்கும், சாவிற்குமிடைக் காண்பதாகுது!
வேறுபட்டாயினும், கள்ளுண்பவர் அழிவர் விரைவினிலே!
வேறுபட்டு மறைந்து, கள்ளுண்டாலும், மயங்குவதால்;
வேறுபட்டு, இழிசிரிப்பர் ஊர் மக்களே!
மக்களிடம் கள்ளுண்பவன், குடித்தறியேன் என்று;
மக்களிடம் கூறுவதை,
நிறுத்திடல் வேண்டும்!
மக்களிடம் மறைகுற்றம், கள்ளுண்டல் வெளிப்டுவதால்;
மக்கள் கள்ளுண்டாரிடம், தீமை விளக்கலாகாதே!
ஆகாது, மூழ்குநிரானை, விளக்கினால் தேடுவது;
ஆகிடும் கள்ளுண்பான், பிறரிகழக் கண்டாகிலும்;
ஆகிடும் தன்
நிலையை மயக்கத்தில்;
ஆகிடும் இழிபடும்
குடியினை எண்ணனுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக