06.10.20 - அதிகாரம் : 119 : பசப்புறுபருவரல் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

06.10.20 - அதிகாரம் : 119 : பசப்புறுபருவரல்



பெ.தி.சுகுமார்.



06.10.20



<><><><><><><><><><><><><>

  " திருக்குறள் கவிதை "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால்-கற்பியல்

          அதிகாரம் -- 119

     " பசப்புறு பருவரல் "

    ●●●●●●●●●●●

<><><><><><><><><><><><><>


காதலர் விருப்பத்தால், 

உடன்பட்டேன், பிரிவிற்கு!

காதலரில்லாது பசலலை

யாரிடம் சொல்வேன்!

காதலர் உண்டாக்கிய

பெருமையோடு பசலை;

காதலரில்லாததால், உடம்பு

மேலூர்ந்து பரவிடுதே!


பரவிடும் பசலையைக்

கொடுத்தார் எடுத்தவரவர்;

பரவிய அழகையும்

நாணத்தையும் கவர்ந்து!

பரப்பி உள்ளத்தே,

கொண்டவரவர் சொல்லாடியும்;

பரவும் பசலையின்,

வஞ்சகம் படர்கிறதே!


படர்கிறது பரவிப்

பசலையும் உடனுக்குடன்!

படர்ந்த தலைவன்,

பிரியும் கணமதில்;

படரன்புப் பிரிவால்,

எனது உடம்பினில்;

படர் இருள்

போலப் பரவுதே!


பரவுது பசலை,

நீங்கிடில் கூடலும்;

பரவுது விளக்கொளி,

மங்கிய உடனே!

பரவும் இருளாய்ப்,

பரவுது பசலை!

பரவிக் கிடந்தேன்,

அவரைத் தழுவியே!


தழுவிக்கிடந்த யான்

சற்று விலகினேன்;

தழுவியது பசலை,

அள்ளிப் படர்ந்தது!

தழுவினாள் பசலை

நோயென்று சொல்கிறார்;

தழுவிய அவரிவளைப்

பிரிந்தாரென்று சொல்வதில்லையே!


சொல்லாப் பசலை,

பரவட்டும், எம்தலைவர்;

சொல்லட்டும் நலமதனால்,

பெறுவா ரென்றால்!

சொல்லட்டும் பசந்தேனென

அவர் பிரிவினை;

சொல்லி ஊரார்,

தூற்றாது இருந்தாலே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages