07.10.20 - அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 7 அக்டோபர், 2020

07.10.20 - அதிகாரம் : 120 - தனிப்படர்மிகுதி



பெ.தி.சுகுமார்.



07.10.20



<><><><><><><><><><><><><>

      " திருக்குறள் கவிதை "

       தினம் ஒரு அதிகாரம்

  இன்பத்துப்பால்- கற்பியல்

           அதிகாரம் - 120

        " தனிப்படர் மிகுதி "

       ●●●●●●●●●●●

 <><><><><><><><><><><><><>


தம்மை விரும்புவோர் ,

பேறுபெற்ற காதலர்;

தம்காதலை விரும்புவோர்,

பேறுபெற்ற பெண்கள்!

தம்மை விரும்புவதால்,

விதையில்லாக் காமநுகர்ச்சியை;

தம்மை விரும்பிப்

பெற்றவர் ஆகின்றாரே!


ஆகிவரும் மழை,

உயிரதனைக் காப்பது!

ஆகிவரும் தலைவர் 

நல்லன்பு மழையாகுது!

ஆகிவரும் விருப்பத்தால்,

தலைவிக்கு இன்பமது;

ஆகிவரும் வாழ்வாகிச்,

செருக்காகிப் பொருந்துதே!


பொருந்தாது, விரும்பாத,

தலைவரால் பெண்ணும்;

பொருந்தாது போகிறாள்,

மதிப்புறு நன்னிலையும்;

பொருந்தாத விரும்பாத, 

நிலையதும் பெருமையில்லை!

பொருந்தாது, விரும்பாது,

 போகிறார் தலைவரே!


தலைவர்க்குச் செய்யன்பு,

எனக்கன்பு கிடைக்காது!

தலைவர்க்குப் பொருந்தாது,

எனக்கன்பு கிடைக்கவில்லை!

தலைவரும் தலைவியும், 

காட்டுமன்பு சமமாக;

தலைதாங்கு காவடித்தண்டாய்,

இறுபுறமும் இன்புறுமே!


இன்புறும் இன்பமது, 

இர்வரது பக்கமின்றி;

இன்புற இயலாது, 

காமக் கடவுளும்!

இன்பமில்லாத் துன்ப

அம்பைக் கொடிதாக;

இன்பமின்றி எய்திப்,

பிரவதையும் அறியானோ!


அறியாது காதலரின், 

பிரிவினைப் பொறுத்தும்;

அறிந்து செவியால்,

பிறவரைப் புகழ்ந்திடவும்;

அறிந்து பிரிதுயரைத்,

தாங்குநெஞ்சு வாழிய!

அறிவேன் கடலாகும்,

காமத்தை அடக்கணுமே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages