பெ.தி.சுகுமார்.
08.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 121
" நினைத்தவர் புலம்பல் "
●●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
இன்பமது கள்ளதனை
உண்டால் தானுண்டு!
இன்பமது காதலதை
நினைத்த அளவினில்!
இன்பமதைக் காணுகிறார்,
தலைவர் இனிதலைவியால்;
இனிக்கிறது நினைத்தாலும், பிறிதொன்றிலும் காணாததை!
காணாதது நினைக்கவில்லை
போலும் தலைவரும்;
காணாது நின்றிட்ட,
தும்மலது போல!
காணாத என்நெஞ்சில்,
நீங்காத் தலைவராக;
காணாநா னவர்நெஞ்சில்,
நிறையாகி உறைந்திருப்பேனா!
உறைந்திட்ட நெஞ்சில்,
இடந்தராத் தலைவருக்கு;
உறைந்திட்ட என்நெஞ்சில்,
நாணமில்லை போலும்!
உறைந்திட்டு இன்புற்ற
நாளெண்ணி வாழ்கிறேன்!
உறைநினைவது இல்லையேல்
துறப்பேன் உயிரினையே!
உயிராகும் தலைவரின்,
நினைவென்னை வாட்டுது!
உயிரவரை நினையாது,
மறந்திடுதல் இயலாது!
உயிராகும் காதலர்,
சினங்கொள்ள மாட்டார்;
உயிராகும் தலைவரை,
எவ்வளவு நினைத்தாலுமே!
நினைப்பதற்கு நினைவேந்திடத்
தடையதனை இடாத;
நினைதலைவர் செய்யும்,
சிறப்பதுவும் இதுதான்!
நினைவால் நாமிருவர்,
வேறல்லரென்று சொன்னவரும்;
நினைவகற்றி, அன்பிலாது,
என்னுயிரை அழிக்கிறதே!
அழியா நிலவே !
இதயத்தால் பிரிந்திட்ட;
அழியா என்
தலைவரைக் கண்களால்;
அழியாது தேடிக்
கண்டிடும் வரையினில்;
அழியாதொளி வீசி,
மறையாது இருப்பாயே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.
த



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக