பெ.தி.சுகுமார்.
11.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 124
" உறுப்பு நலன் அழிதல் "
●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
பிரிவுத்துயர் கொண்டழுத
ஒளியில்லாக் கண்கள்;
பிரிந்தறியா மணக்குமலர்,
நாணும்படி ஆகியது!
பிரிவாற்றாமையால் அழுகண்கள்,
காதலரை விட்டு;
பிரிந்ததைப் பிறர்க்குச்,
சொல்வதாய் உள்ளதே!
உள்ளபடி தலைவரோடு,
கூடிப்பூரித்த தோள்கள்;
உள்ளபடி மெலிந்து,
பிரிவினை அறிவிக்குது!
உள்ளபடி வாடியே,
வளையல்களும் கழன்று;
உள்ளபடி இணைத்தழகு,
இழந்தது தோள்களே!
தோள்களின் தொய்வும்,
கொடுமையைப் பறைசாற்றுது;
தோள்களின் மெலிவு,
காதலரன்பற் பற்றவரென்றும்;
தோளினைப் பார்த்து,
ஊரார் பேசுபழி;
தோளிட்டுக் கேட்டு,
நானும் வருத்தமுற்றே!
வருந்துபெண் மெலிதோள்,
சொல்பழி தலைவரிடம்;
வருந்திடச் சொல்லி,
பெருமைகொள் நெஞ்சே!
வருந்மென் நெஞ்சே,
தழுவித் தளர்ந்ததில்;
வருந்துநெற்றிப் பசலையால்,
படர்ந்தழகு குன்றியதே!
குன்றாது தலைவியைத்
தழுவிய கைய்யிடை;
குன்றாது புகுந்திட்டக்,
குளிர்க்காற்று பொறுக்காது;
குன்றாது குளிர்க்கண்கள்,
பசலை நோயினால்;
குன்றாது படர்ந்து,
நிறமும் மாறியதே!
மாறாது ஒளிரும்,
நெற்றியில் பசலையும்;
மாறிப் படர்ந்ததைக்,
கண்டிட்டு முன்னரே;
மாறிய கண்களில்,
படர்ந்திட்ட பசலையும்;
மாறாது மேலும்,
படர்ந்து வருந்துதே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக