பெ.தி.சுகுமார்.
12.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
அதிகாரம் -- 125
இன்பத்துப்பால் - கற்பியல்
" நெஞ்சொடு கிளத்தல் "
●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
நெஞ்சமே! தலைவரது
பிரிவால் வருந்துமென்;
நெஞ்சமே! நோய்க்கு
மருந்து ஒன்றையும்;
நெஞ்சமே! எத்தன்மை
யாயினும் உரைப்பாயாக!
நெஞ்சமே வாழ்க!
தலைவரும் பிரிந்தாலுமே!
பிரிந்தாலும் அவரை,
நினைத்து வருந்துகிறாய்!
பிரிவிலும் நினைத்து
வருந்துவது அறியாமை!
பிரிவால் துன்புறுத்தும்,
தலைவரிடம் உன்னைப்போல்;
பிரிந்ததை நினைக்கும்
பண்பது இல்லையே!
இல்லாது துன்புறுத்தும்,
தலைவரிடம் கண்களையும்;
இல்லையென்னாது
ஆழைத்துச்செல், கண்டிடவும்;
இல்லையென்றால் காண
விரும்பியகண் முடியாததால்;
இல்லாத அவருக்காக,
என்னையது தின்றுவிடுமே!
விட்டுச் சென்றவரும், வராது வெறுக்கிறார்;
விட்டிடுவோம் என்றெண்ணி,
கைவிட முடியுமா!
விட்டதனால் ஊடினால்,
உடன்கூடிட வருவாரிடம்;
விட்டு ஊடலால்,
கூடமாட்டாய் அவருடனே!
அவருடன் தெளிந்து,
கூடாவுனக்குப்
பொய்க்கோபமேன்!
அவர்மீதுள்ள ஆசையையோ,
நாணத்தையோ விட்டுவிடு;
அவருக்காக இவைபொறுக்கும்
வல்லமை எனக்கில்லை!
அவருக்காக அவர்பின்,
செல்லுவது மடைமையே!
மடைமையாய்த் தேடுகிறாய், உன்னுள்ளே அவருள்ளார்!
மடைமையாய்த் தேடுகிறேன், பொருள் தேடச்சென்றவரை!
மடைமையால் வருந்துவதால்,
பிரிந்தவரை எண்ணியும்;
மடைமையால் அகம்புறத்து,
அழகையும் இழக்கிறேன்!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக