13.10.20 - அத்தியாயம் : 126 : நிறையழிதல் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

13.10.20 - அத்தியாயம் : 126 : நிறையழிதல்



பெ.தி.சுகுமார்.



12.10.20



<><><><><><><><><><><><><>

<><><><><><><><><><><><><>

   " திருக்குறள் கவிதை  "

    தினம் ஒரு அதிகாரம்

இன்பத்துப்பால்- கற்பியல்

         அதிகாரம் - 126

        " நிறையழிதல் "

       ●●●●●●●●●

 <><><><><><><><><><><><><>

 <><><><><><><><><><><><><>


தலைவரிடம் கொண்ட

காதல் கோடரியால்;

தலைவரென் நாணத்

தாழிட்ட நிறைகதவுடைத்தார்!

தலைவரிடம் கொண்ட

காதல், நள்ளிரவிலும்;

தலைவரெண்ணிக், கருணையற்று, 

வேதனை செய்கிறதே!


செய்யுமந்த வேதனையை,

முயல்கிறேன் மறப்பதற்கு!

செய்கையின்றி வெளிப்படுது,

தோன்றும் தும்மலாக!

செய்யா நிறையுடையோன்

என்றிருந்தேன் மறைகாமம்;

செய்திட்டதும் மீறி,

அறியுமாறு வெளிப்பட்டதே!


வெளிச்சென்ற தலைவருடன், 

செல்லாப் பெருந்தன்மை;

வெளிச்சென்றதால், காமநோய்

கண்டவரிடம் இராது!

வெளிச்சென்ற தலைவருடன், 

செல்லுமாறு தூண்டுகின்ற;

வெளிச்சென்றால் காணும்,

காமநோய் கொடியதே!


கொடியதாகா நான் 

விரும்பும், தலைவர்;

கொடியதாகா நான் 

விரும்பும் செயல்களை;

கொடுமையின்றிச் செய்து 

மகிழ்வித்தல் நாணமெனும்;

கொடுமை இருப்பது,

அறியாமல் இருந்திருப்பேனே!


இருந்து அரணாகும்,

நிறைபொய் பேசி;

இருந்து, பிரிந்துபின்

வந்து பேசும்;

இருந்திடாப் பணிவுமொழியால்,

உடைகிறது நிறைவதுவாய்!

இருந்து கூடலொதிக்கி,

ஊடலதை எண்ணினேனே!


எண்ணினாலும் நெஞ்சமது

கூடியதும் கூடலானேன்!

எண்ணமது கொண்டாலும்,

நெருப்பிலிட்ட நெய்போல;

எண்ணவர் விருப்பம்,

மாறாக ஊடல்;

எண்ணங் கொண்டிருக்க,

முடியுமா என்ன?


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages