பெ.தி.சுகுமார்.
12.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 127
" அவர்வயின் விதும்பல் "
●●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
அவர் வரும்வழி
பார்த்தகண்கள் ஒளியிழந்தன!
அவரெண்ணிக் குறியிட்ட,
விரல்கள் தேய்ந்தன!
அவரெண்ணியே வாழ்கிறேன்
உயிரோடு தோழி!
அவர்மறந்தால் தோள்
மெலிந்து கழன்றொழியுமே!
ஒழிந்தவர் ஊக்கமுடன்,
வெற்றிக்காகச் சென்றார்!
ஒழிந்தவர் சென்றவரை
விரும்பி உயிரோடிருக்கிறேன்!
ஒழிந்தந்த தலைவரது,
வரவினை எண்ணி;
ஒழிந்தவரைக் காமமது,
வரவேற்க முந்துதே!
முந்திப் பிரிந்த,
தலைவரைக் கண்டால்;
முந்திய தோள்படர்,
பசலையும் மறையும்!
முந்தி வந்திடும்,
தலைவர் வந்தால்;
முந்தித் துயர்,
நீங்கத் துய்த்திடுவேனே!
துய்ப்பேன் இன்பம்,
அவரிடம் ஐம்பொறிகளாலும்!
துய்த்திடும் கண்ணான
தலைவர் வந்தால்;
துய்த்திட விடுவேனா,
தழுவுவேனா, கூடுவேனா!
துய்த்திடுவேன் தலைவியுடன்,
மாலையில் இல்லத்திலே!
இல்லம் அடைவேன்,
வேந்தன் வென்றபின்!
இல்லம் விரைவேன்,
போர்க்களம் விட்டேகி;
இல்லம் அடைந்து,
தலைவியுடன் மகிழ்வேன்!
இல்லத்திலேங்கும் தலைவிக்கு,
ஒருநாள் ஒருவாரமாகுதே!
ஆவது கெட்டு,
ஆற்றாது அழிபட்டாள்!
ஆகாத நம்மைப்
பெறுவதால் பயனில்லை!
ஆகாதழிந்த அவரைப்
பெறுவதாலும் பயனில்லை!
ஆகாதவரைப் பெற்றதாலும்,
கூடிலிலும் பயனில்லையே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக