15.10.20 - அத்தியாயம் : 128 : குறிப்பறிவுறுத்தல் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 15 அக்டோபர், 2020

15.10.20 - அத்தியாயம் : 128 : குறிப்பறிவுறுத்தல்



பெ.தி.சுகுமார்.



15.10.20



<><><><><><><><><><><><><>

  " திருக்குறள் கவிதை "

   தினம்  ஒரு  அதிகாரம்

இன்பத்துப்பால் - கற்பியல்

          அதிகாரம் - 128

      " குறிப்பறிவித்தல் "

      ●●●●●●●●●●●

<><><><><><><><><><><><><>


உள்ளமது பிரிவாற்றாமையை, 

மறைத்தாலும் மையிட்ட;

உள்ளமதைக் காட்டும்

கண்கள் குறிப்புணர்த்துது!

உள்ளம் கொள்ளழகும்,

இணைதோளும் கொண்ட;

உளங்கொண்ட தலைவிக்கு,

மடைமையும் உள்ளதே!


உள்ளபடி நூல்

காட்டும் மணியொத்து;

உள்ளத்துள் பிரியாதிருக்க

விழையும் குறிப்புள்ளது!

உள்ளிருக்கும் மனமதை,

மறைத்திட்ட பூவரும்பாய்;

உள்ளத்துப் புன்ம்றுவல்,

கூடல் குறிக்குதே!


குறித்திடும் சிறுபார்வையும்,

புன்னகையும் தலைவியிடம்;

குறித்திட்ட மருந்தொன்று,

துயர் தீர்க்கவும்;

குறித்திட்டு அவளிடம் 

உண்டெனக் காட்டுது!

குறித்திட்டுப் புரியுது,

தலைவனின் கூடுதலுமே!


கூடுகிறாள் பிரிவுத் 

துயர், நீங்கிடவும்;

கூடுகிறார் அன்பு 

காட்டிப் பிரிந்திடவும்;

கூடுதலின் உட்கருத்தைக்

கூடுதல் காட்டுகிறது!

கூடிக் குளிர்நீர்த்

துறைத்தலைவன் பிரிவானே!


பிரிவானிவன் என்றுணர்ந்த 

வளை கழலுது!

பிரிவானின் குறிப்பைக்

கூடல் காட்டுகிறது!

பிரிவானின் தலைவன்,

நேற்று, எனினும்;

பிரிந்தேழு நாட்களாகக்,

கண்ணுக்குத் தெரியுதே!


தெரியுமவள் வளையும்,

தோளும் அடிநோக்கி;

தெரிகிறது குறிப்பாக,

உடன்போக் குணர்த்தி!

தெரிவித்து, அறிவிக்கும்,

பிரியாமை யாசித்தல்;

தெரிவித்து அழகூட்டுது,

பெண்மையின் நாணத்தையே!


கவிதை ஆக்கம்

மருத்துவகவிஞர்

பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages