நீரை.பாத்திமா
இற்றுத் தீர்ந்த மனதின் மகிழ்ச்சிகளை
சற்று தேட முடியாத வேதனை நேரங்கள்!
எட்டியே கை கட்டி நின்றே சிரித்திடும்
நேற்றைய படுகுழிகளின் எக்கால சிரிப்புகள்!
சிந்தைக்குள் ஒன்றையும் முகச்சிரிப்பினில் ஒன்றையும்
காட்டிக் காட்டியே ஏமாற வைத்த எத்தர் கூட்டங்கள்!
விளிம்புகள் மழுங்கிய குவளையைப் போலவே
காலத்தின் கைககள் நம்மை கசக்கிப் பிழிந்து
கோலத்தின் அடையாளங்களை சிதைத்துப்போடுகிறது!
எத்தனை நாட்கள் வெறுமை கூட்டுக்குள் நிறைவை காட்டிக் கொள்வது?
சிறையிட்ட சுதந்திர தாகம் மெல்ல எட்டிப் பார்த்து எழச் சொல்கிறது!
இற்றுப் போன இதயம் எழ மறுக்கிறது!
நீரை.பாத்திமா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக