பெ.தி.சுகுமார்.
16.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்- கற்பியல்
அதிகாரம் - 129
" புணர்ச்சி விதும்பல் "
●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
நினைத்தால் களிப்பும்,
காண்பதில் மகிழ்வும்;
நினைவிரு தன்மையும்,
காமத்திற்கே கள்ளுக்கல்ல!
நினைவில் பனையளவு
காமம் பெருகிணும்;
நினைவில் திணையளவும்,
பிணங்கக் கூடாதே!
கூடாதென்னை விரும்பாது,
விருப்பப்படி செய்தாலும்;
கூடாக்கண்கள் தலைவரைக்,
காணாதமைதி கொள்வதில்லை!
கூடாதிருந்து ஊடிடச்
சென்றேன் தோழி;
கூடினேனானால் நெஞ்சத்து,
நோக்கமதை மறந்தே!
மறந்திருந்து கண்
மைக்கோல் காணாததுபோல்;
மறந்திருந்தவர் செய்தவறு
எதையும் காணுவதில்லை!
மறக்கிறேன் காண்கையில்,
தலைவரது தவறுகளை!
மறக்கலை காண்கிறேன்,
காணாதபோது தவறுகளையே!
தவறாது இழுவெள்ளம்,
பாய்ந்திடல் போல;
தவறாத தலைவரிடம்,
ஊடல் வீணாகுது!
தவறாக் கள்வனை,
வளராசை இழிகள்ளாய்;
தவராசை உண்டாக்குதுன்,
கள்ளொத்த உன்மார்பே!
மார்புறும் மலர்காம
மென்மையை அறிந்து;
மார்புறும் காமத்தின்
மென்தன்மை அறிந்தும்;
மார்புறும் காமமதன் ,
பயனடைவார் சிலராகி;
மார்புற்றுத் தருமின்பம்,
சிலர்தான் அடைவாரே!
அடைந்தான், கண்ணது
பார்வையில் பிணக்கம்!
அடைந்தாள், தழுவுதலை,
விரும்பியும் ஆனாலுமே;
அடைந்தாள் பிணக்கை,
மறந்தவளும் விரும்பி;
அடைந்தாள் என்னைவிட,
விரைந்து கூடிவிட்டாளே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக