பெ.தி.சுகுமார்.
17.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால் - கற்பியல்
அதிகாரம் - 130
" நெஞ்சொடுபுலத்தல் "
●●●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
நெஞ்சே! தலைவரது
நெஞ்சம் நம்மை;
நெஞ்சாற நினையாது,
அவருக்குத் துணையாகுது!
நெஞ்சோடறிந்தும் எனக்குத்
துணையாகா அவரையே;
நெஞ்சில் நினைத்துக்
கொண்டிருப்பது எதனாலே!
எதனால் நம்மில், அன்பில்லாதவரிடம் செல்கின்றாயே!
எதனாலுனது விருப்பப்படி,
அவரிடம் செல்கிறாய்!
எதனாலென் றறிவேன்,
துன்பத்தால் கெட்டவர்க்கு;
எதனாலும் உலகில்,
நண்பரில்லை என்றுணர்ந்தே!
உணரா நெஞ்சது,
கண்டதும் ஊடலுற்று;
உணர்ந்தறிய மாட்டாயுனக்கு,
ஊடல்பற்றிச் சொல்வாரில்லை!
உணரா நெஞ்சு,
பிரிவாற்றாமைக்கு வருந்துகிறது!
உணராது உடனிருக்கையில், பிரிவுக்கு அஞ்சுகிறதே!
அஞ்சலால் நெஞ்சினுக்கு,
நீங்காத துன்பமுண்டு;
அஞ்சிப் பிரிந்தவர்,
தவறினை நினைக்கையில்;
அஞ்சா நெஞ்சே,
தின்பதாக வருத்தியது!
அஞ்சா மட
நெஞ்சே மறந்ததேனே!
மறந்தேன் உயிரினும்
மேலான நாணத்தை;
மறந்து இகழ்ந்தேனவரை,
இழிவாய்ப் பண்பினை;
மறக்காது துன்பம்
வந்தபோது நீக்கிடவும்;
மறவாநெஞ்சு துணையானால்,
எதற்குத் துணையே!
துணையாகும் நெஞ்சு,
தமக்கு உரிமையாக;
துணையாக உறவற்று
இருக்கையில் தலைவரின்;
துணையாகா நெஞ்சம்,
உறவற்று இருப்பது;
துணையின்றித் துயருற்று,
இருக்கும் இயல்பாகுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக