பெ.தி.சுகுமார்.
19.10.20
<><><><><><><><><><><><><>
" திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்- கற்பியல்
அதிகாரம் - 132
" புலவி நுணுக்கம் "
●●●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
பெண்களும் கண்களால்,
உன்னைப் பொதுப்பொருளாக்கி;
பெண்களும் கண்டு,
பருகி மகிழ்கிறார்கள்!
பெண்ணேயுன் மார்பினைத்,
தீண்ட மாட்டேன்!
பெண்களுன்னைப் பார்த்தவுடன்,
ஆசைக்குநீ காரணமே!
காரணமின்றித் தலைவரோடு,
கூடிப் பேசாதிருந்தேன்;
காரணமாய் வாழ்த்துவேன்,
என்றெண்ணித் தும்மினார்!
காரணமாய்ப் பூவைச்
சூடிக் கொண்டாலும்;
காரணமாய்க் காட்டிட,
ஒருத்திக்கு என்றிடுவாளே!
என்றும் யாரையும்,
விடவும் நேசிக்கிறேன்;
என்றதைத் தவறாக,
யாரைவிட யாரைவிட;
என்று கேட்டு,
ஊடல் கொண்டாளவள்;
என்றதால், சொன்னேன்
இப்பிறவியில் பிரிவில்லையென்றே!
பிரிவில்லை இப்பிறவியில்,
என்றால் மறுபிறவியில்;
பிரிவதுவும் உண்டென்று,
கண்ணீர் பெருக்கினாள்!
பிரிவினில் நினைத்தேன்
என்றதால், மறந்ததால்தான்;
பிரிவினில் நினைத்தீர்,
ஏன் மறந்தீரே!
மறந்தால் சினந்து,
தழுவாது ஊடினாள்!
மறந்தவாறு தும்மினேன்,
வாழ்த்தினாள் மறுகணம்!
மறக்காமல் யார்
நினைத்தாரென ஊடினாள்!
மறக்காமல் தும்மலையும்,
அடக்கினேன் மறைத்திடவே!
மறைக்கிறீர் தும்மலை,
நினைக்கிறாள் ஒருத்தியும்;
மறைக்கிறாரோ அதையென்று,
கூறி அழுதாள்!
மறைக்கிறீர் பழக்கமாய்
ஊடலறுத்துக் கூடுவதாய்!
மறைக்கிறீர் என்னழகை
ஒப்பிடுகிறீரென்று சினக்கிறாளே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக