பெ.தி.சுகுமார்.
20.10.20
<><><><><><><><><><><><><>
"திருக்குறள் கவிதை "
தினம் ஒரு அதிகாரம்
இன்பத்துப்பால்- கற்பியல்
அதிகாரம் -133
" ஊடலுவகை "
●●●●●●●●●
<><><><><><><><><><><><><>
தவறில்லை என்றாலும்,
ஊடல் செய்பவர்;
தவறாது இன்னும்,
அன்பு செலுத்திடத்தான்!
தவறினால், சிறு
ஊடலால் அன்பதுவும்;
தவறினால் ஊடலதால்
அன்பு அதிகரிக்குமே!
அதிகரிக்கும் அன்பும்
காதலரிடம் ஊடலினால்;
அதிகமாகி,நிலத்தொடு
நீர்கலந்த தாகிறது!
அதிகமாகும் இன்பமது,
தேவலோகத்திலு மில்லை!
அதிகமாகும் ஊடலும்,
உள்ளத்தை உடைக்குமே!
உடைக்கும் படையதுவும்,
ஊடலதுள் உள்ளது!
உடைக்கும் ஊடலிலும்,
தழுவாது இருப்பதிலும்;
உடையா இன்பமதும்,
தழுவி இருக்கிறது!
உடைத்துச் செரித்ததும்,
தான்பின்பு உண்ணணுமே!
உண்பதில் முன்னுண்டது,
செரித்ததன் பின்பாக;
உண்ணுதலால் சேர்ந்திடும்,
இன்பமது போல;
உண்டு சேர்ந்து,
மீண்டும் மகிழ்ந்திடாது;
உண்டாகும் ஊடலது,
இன்பத்தைத் தந்திடாதே!
தந்திடும் வெற்றியைத்,
தோற்றவர்க்கு ஊடலில்;
தந்திடும் உண்மையும்,
கூடலில் தெளிந்திடும்!
தந்திடும் இன்பமும்,
வந்திடும் வியர்வையால்!
தந்திடுமா கூடலதும்,
ஊடலின்பின் மீண்டுமே!
மீண்டும் பணிந்திட்டு
ஊடலதைத் தணித்திட;
மீண்டும் நீளணும்,
வளரணும் இரவதும்!
மீண்டிடும் இன்பமும்,
ஊடலுக்குப்பின் காதலர்க்கு!
மீண்டும் கூடியும்,
மகிழ்ச்சியும் பெருகுமே!
கவிதை ஆக்கம்
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக