கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு
20.10.20
கூட்டாஞ்சோறு
---------------------------------------------
ஞாயத்துகெழமை பள்ளிக்கொடத்துக்கு லீவு அன்னிக்கி .மேலவயக்காட்டு மேட்டுலகூட்டாஞ்சோறு சமைக்க சனிக்கெழமை டியாண்டியாடோய் வெளையாடும் போது முடிவாச்சி. அதுமாதிரி முடிவெடுக்குறப்ப பொறுப்புகளை பிரிச்சிக் அவனுகளாவே எடுத்துக்குவானுக. முருகன் அரிசி கொண்டாரனும் அரிசின்னா அரைப்படி புழுங்க அரிசி எடுத்தாந்துரனும். குட்டபொசுக்கி முளகாகொண்டாரனும். ஏன்னா அவன் வீட்டுல அது இருந்தாலே அதிகம். வேற ஒன்னும் பெயராது. மொத்தமா வாங்கிவைக்கிறபழக்கம் இல்ல.
எலும்பன் ஆறுமுகம் எண்ணை. அவங்கவீட்டுல எண்ணை மாத்திரம் செல்லத்தம்மன் கோயில்ல வாரத்துக்கொருதடவை வாங்குவாக.
பஞ்சவர்ணம் மஞ்சட்டி கொண்டாரனும். அவங்க வீட்டுலதான் மண் பாண்டம் செய்வாக. எடுத்தா ஒன்னும் சொல்லமாட்டாக.
அப்புறம் குண்டன் கருப்பையா அப்பா காய்கறிக்கடை வைச்சிருக்காரு அதுனால காய்கறி இப்புடி . மொய்தீன் தோட்டத்துல இருந்து வாழ எல அறுத்துக்கலாம். சின்னச்சாமி நாட்டுகோழி முட்டை கொண்டாருவான், அவங்க வீடுல கோழி நெறையா வளப்பாங்க. ராசாங்கம் வீட்டுல மொளகாப்பொடி உப்பு. கருப்பையா பலசரக்கு அவுக அப்பா கடை வைச்சிருக்குறதால இப்படி ஆளுக்கு ஒன்னுபொறுப்பெடுத்தாச்சுகாலைல 10மணிதான் கெடுவு
ஒவ்வொருத்தனாத்தான்வந்தான்அவனவன்பொருளைஎடுத்துட்டு
வந்தவீரக்கதையை அவுத்துவிட்டானுக. அம்மா குளிக்கபோனப்ப எடுத்து ஒளிச்சிவைச்சது அப்பூறம் அப்பாவுக்குத்தெரியாம ஆட்டையப்போட்டது. வெள்ளனாவே எந்திரிச்சி கோழி முட்டைய அமுக்குனது. கோயிலுக்கு வெளக்குப்போடன்னு எண்ண எடுத்தது இப்புடி பலகதைகள் அதுல உள்ளடக்கம்
அப்புறம் ஒன்னா எல்லாரும் சைக்கிள எடுத்துக்குட்டு கெளம்புனாக மேலவயக்காட்டு மேட்டுக்கு. இவனுக மொத்தமா வெளிய கெளம்புனாலே அன்னிக்கி ஏதாவது பஞ்சாய்த்து வரும். என்ந்த்தையாவது தீவினைய இழுத்துக்கிட்டு வருவானுக. அம்ம்புட்டுப்பேரு வாங்கிருந்தானுக ஊருக்குள்ள. பெரியவரு ஒருத்தரு இவனுகளைப்பாத்தாலே திட்டுவாரு அலுசாதிப்பயலுகன்னு. அதுக்கு என்னா அர்த்தமுன்னு தெரியாது. இதை அங்க இருக்குற பொம்பளைப்புள்ளைக போட்டுக்குடுக்க காத்திருப்பாளுக. ஒடனுக்கொடனே தகவல் ஒலிப்பரப்பிடுவாளுக.
அவளுகளைப்பொறுத்தமட்டுல சமையல் அவங்க ராஜ்ஜியம். அதுல ஆம்பளைக தலையிடப்படாது. பொறாமை வேற. இவனுக ஜாலியா கெளம்பிட்டானுகன்னு
மேலவயக்காட்டு மேட்டுக்கு போய் ஆலமர்த்தடில எல்லாம் ஏற்பாடு பண்ணுனாக. இங்க குடிக்கிறதுக்குன்னே சொரக்காதண்டு கொண்டாந்துருந்தான். சின்னச்சாமி. அதுல பீடி மாதிரி பொகை வரும். சமைச்சி சாப்புட்டுட்டு செமிக்க பொகை பிடிப்பான் அவன். அதை கேட்டு வாங்கி ஆளுக்கு ஒரு இழுப்பு ரவுண்டுல வரும். பக்க்த்துல தான் ஊரணி. அந்தத்தண்னிக்கி தனி ருசி வரும்.
ஆளாளுக்குச்சமையல்குறிப்புச்சொல்ல மூனுகல் அடுப்பாகி
செத்த குச்சி எல்லாம்பொறக்கிட்டு வந்து விறகாக்கி சமையல் ஆரம்பிச்சது. சோறு அப்புறம் கொழம்பு . தொட்டுக்க முட்டை பொறியல் ந்னு எல்லாம் ஒருமாதிரி சமைச்சி கூட்டாஞ்சோறு தயாராச்சு. முட்டை வருக்கையில காவலுக்கு ஆளுப்போட்டாச்சு இல்லாட்டினா உப்புப்பாக்குறேன்னு திண்ணு புடுவானுக. தலைமை சமையல்காரன் எலும்பன் ஆறுமுகம் தான்
ஏன்னா அவங்க வீட்டுல அவ்ங்க அம்மாவுக்கு அடிக்கடி முடியாமப்போயிடும். அவந்தான் சமைப்பான். வாழை எல அறுக்கப்போன மொய்தீன் வாழ எலையும் கொஞ்சம் வாழப்பூவும் கொண்டாந்தான். அதைத்தனியா மொளகா உப்புப்போட்டு வேகவைச்சி வைச்சாச்சி. நல்லா ஒறப்பா புளிக்கொழம்பு வைச்சான் ஆறுமுகம். எண்ண மெத்தக்க மெதக்க வதக்கி வெந்த நாட்டுக்கத்திரிக்கா முருங்கை வாசம் தூக்குச்சு.
முட்டையில பச்சமொளகா வெங்காயம் போட்டு நல்லஎண்ணையில பொறிச்சி வாசம் ஆளத்தூக்குச்சு. சோறும் பதமா வடிச்சிருந்தான் எல்லாரும் சமைச்சிட்டு ஊரணில குளிச்சிட்டு வந்து எலையப்போட்டு ப்பரிமாறினானுக. குளிச்சத்துக்கும் அதுக்குமா பசி பின்னுச்சு. எலையில சோத்தைப்போட்டுக் கொழம்பை அதுமேல ஊத்தி பக்கத்துல முட்டைப்பொறியல் வாழப்பூ பொறியல் வைச்சி எல்லாரு ஒக்காந்தவன்ன வாயில எச்சில் ஊறுச்சு. காரம் தூக்க சாப்புடுறவன் கண்ணுல தண்ணி வந்துச்சு. ஆனா அம்புட்டு ருசி ஆறுமுகம்தான் முட்டைய சமமா பங்குவைச்சிக்குடுத்தான்.
அதுவயிறுமுட்ட சாப்புட்டுட்டு அப்புறமா சொரக்கா தண்டுல பீடி குடிக்கும்போது பொறப்போயி கண்ணுல தண்ணி வந்துச்சு. சொகமா அப்புடியே சாப்புட்டுப்புட்டு படுத்து காத்தாட கெடந்தானுக. அப்புறமா ஆலமர விழுதுல ஊஞ்சல் ஆடிட்டுக்கெளம்புனானுக. சட்டியெல்லாம் அங்கயே ஒடச்சிபோட்டுட்டு.
அது மாதிரி ருசியான சாப்பாடு அதுக்கப்புறம் வாழ்க்கையில கெடைக்கவே இல்ல. எல்லாரும் அங்க இருந்து கெளம்புறப்ப ஏதோ பொகைவாசம் வந்துச்சு
அடுப்புதான்னு அசால்ட்டா சொல்லிட்டு வந்துட்டானுக.
அன்னிக்கி ராத்திரி வைக்கப்படப்பு எரிஞ்சப்பத்தான்
தெரிஞ்சுது அந்தபுகைவாசம் பொன்னாத்தா வைக்கப்படப்பு எரிஞ்சவாசம் தான்னு......அமத்தாம விட்ட நெருப்பு காத்துல பறந்துபோயி பொன்னாத்தா வைக்கப்படப்புல விழுந்து பத்திக்கிச்சு. இவனுகதான்னு பொம்பளைப்புள்ளைக போட்டுக்குடுத்தாக.
பொன்னாத்தா எங்க எல்லாரோடபரம்பரையும் இழுத்துத்திட்டுனது
இன்னிக்கும் மறக்கல..........அதக்கேட்டு அவன் அவன் வீட்டுல வாங்குன அடி முதுகெல்லாம் வீங்கிப்போச்சு.
இருந்தாலும் அந்த ருசிக்கு முன்னாடி அடியெல்லாம் ஒரைக்கவே இல்ல. அந்த வயசுல எத்தனை வைக்கப்படப்பையும் எரிச்சிருப்போம் எங்க சந்தோசத்துக்காக....... அது ஒரு காலம் இப்ப எல்ல்லாம் போச்சு கூட்டாஞ்சோறுமில்ல. வைக்கப்படப்புமில்ல.
வாயில வைக்கிற எந்தப்பண்டமும் அந்த ருசியுமில்ல.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன் கல்பாக்கம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக