பெ.தி.சுகுமார்.
22.10.20
கருத்துப் பதிவுகள்
பேரன்பும் பெருமதிப்பிற்கும் உரிய
எனதருமை முகநூல் உறவுகளே,
முதற்கண் எனது தாழ்மையான
வணக்கங்கள்!
தென்குமரி கவிதைக்களத்திலும்,
முகநூலின்
பொதுக்களத்திலும், கடந்த 10.06.20
தொடங்கி,20.10.20 வரையிலும்,
" திருக்குறள் கவிதை "
" தினம் ஒரு அதிகாரம் "
என, எமது
வள்ளுவப் பெருந்தகையின்,
உலகப் பொதுமறையாம் திருக்குறளைச்,
சற்று எளிய முறையில், கவிதை வடிவில்,
அந்தாதி நடையில், ஒவ்வொரு
அதிகாரத்தையும் 24 வரிகளில் எழுதிப்
பதிவேற்றியதை அறிவீர்கள் தானே!
133 அதிகாரங்களும், தற்போது
பதிவேற்றி முடிந்தது!
இந்த முயற்சியின் வெற்றிக்கு, ஊக்கமும் ஆக்கமும் அளித்து, இதை நிகழச் செய்து, பேருதவியளித்த ,
'தென்குமரி கவிதைக்களம்'
நிறுவனர், தலைவர் மற்றும்
பொருப்பாளர்களுக்கும்,முகநூல்ப்
பொதுவெளியில் தினமும்,படித்துக்,
கருத்துகள் பதிந்த எண்ணற்ற தமிழ்
கவிப்பெருமக்களுக்கும் என்றென்றும்
நன்றக்கடன் பட்டுள்ளேன் !
பேரன்பு கொண்டோரே,
இந்தப் பெருமுயற்சி பற்றிய
தங்களது பொதுவான மேலான
அரும்பெருங்கருத்துகளைக் கீழ்காணும்
கருத்துப் பெட்டியில் பதிதிவிட்டால்,
புத்தகத்து வடிவில் நூலாக்கம் செய்து
வெளிவரும் போது அதனைப் பதிவேற்றிட
ஏதுவாகும் !
எனவே தயவுகூர்ந்து, தங்களது உயர்ந்த
கருத்துகளைத் தங்களது,
முழுவிலாசத்துடன், அலைபேசி எண்ணுடன்
இயன்றால் நிழற்படத்துடன் அனுப்பினால்
பெருமகிழ்வுடன் ஏற்றிடுவேன்!
நமது ஐயன் திருவள்ளுவனின் வள்ளுவம்
எனும் வாழ்வியல் தமிழ்கூறும்
நல்லுலகிற்கும், இளையோர்களுக்கும்
சென்றடடைய பங்களித்திட முயலும்
இவ்வெளியோனின் பெருமுயற்சிக்கு
உதவிடுமாறு சிரந்தாழ்த்தி இருகரங்கூப்பி
வேண்டி விரும்பித் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன்!
நற்றமிழ் வணக்கம்!
தமிழ்ப்பணியில் மகிழும்,
மருத்துவகவிஞர்
பெ.தி.சுகுமார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக