27.10.20 - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 27 அக்டோபர், 2020

27.10.20







மலைச்சாமி


வரலாற்றில் இன்று 27.10.2020

October 27, 2020


என்றும்..


அன்புடன்....


என் இனிய காலை வணக்கங்கள்.


    

அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்


939 – முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.

1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.

1795 – ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.

1806 – பிரெஞ்சுப் படையினர் பேர்லின் நகரினுள் நுழைந்தனர்.

1807 – பிரெஞ்சு-ஸ்பானியப் படைகள் போர்த்துக்கலைக் கைப்பற்றின.

1810 – ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது.

1867 – கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.

1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் பிரஷ்யாவிடம் சரணடைந்தனர்.

1891 – ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.

1924 – உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.

1953 – தெற்கு அவுஸ்திரேலியாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1958 – பாகிஸ்தான் முதலாவது சனாதிபதி இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.

1961 – மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: ஐக்கிய அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1971 – கொங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1979 – செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1981 – சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் U 137 சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.

1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.

1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1991 – போலந்தில் 1936ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றன.

1999 – ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – பாரிசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

2007 – கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.


பிறப்புக்கள்


1728 – ஜேம்ஸ் குக், பிரித்தானியாவின் கடற்படைக் கப்டன், நாடுகாண் பயணி (இ. 1779)

1782 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1840)

1858 – தியொடோர் ரோசவெல்ட், 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1919)

1877 – ஜார்ஜ் தாம்சன், ஆங்கிலேயெத் துடுப்பாட்டக் காரர் (இ. 1943)

1920 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

1932 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)

1945 – லுலா ட சில்வா, பிரேசில் அரசுத் தலைவர்

1977 – குமார் சங்கக்கார, இலங்கையின் துடுப்பாளர்

1984 – இர்பான் பதான், இந்தியத் துடுப்பாளர்


இறப்புகள்


1605 – அக்பர், முகலாய மன்னன் (பி. 1542)

1845 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)

1980 – ஜோன் விளெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)

1992 – டேவிட் போம், அமெரிக்க இயற்பியலாளர், தத்துவவியலாளர் (பி. 1917)

2009 – டேவிட் செப்பர்ட், ஆங்கிலேய துடுப்பாட்ட நடுவர் (பி. 1940)


சிறப்பு நாள்


செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் – விடுதலை நாள் (1979)

துருக்மெனிஸ்தான் – விடுதலை நாள் (1991)


நெஞ்சை பதறவைக்கும் நடைமுறை...மன மேடையில் கூட வெள்ளை புடவைதான் அணியவேண்டும் : கலியுகத்திலும் கண்ணியமாக கடைப்பிடிக்கும் பெண்கள்! பதற வைக்கும் காரணம்! 


மூளியான பெண்கள், வெள்ளைப் புடவை அணிந்து திருமணம், உடலும் தலையும் தனியாக உள்ள தெய்வம்

    

பொதுவாக பெண்கள் என்றாலே, அதுவும் நமது தமிழ்ப் பெண்கள் என்றாலே, அவர்களுக்கென தனி அடையாளம் உண்டு. உலகிலேயே, பண்பாடு நிறைந்தவர்கள், அந்தப் பண்பாட்டைப் போற்றும் குணம் கொண்டவர்கள் நமது தமிழ்ப் பெண்கள் தான். 


காதிலே, தோடும், மூக்கிலே மூக்குத்தியும், காலிலே கொலுசும், குஞ்சம் வைத்து சடை பின்னி, நெற்றியிலே திலகம் இட்டுக் கொள்ளும், நமது பெண்கள், நடமாடும் தெய்வங்களாக இருக்கின்றனர். தற்போது, நாகரிகம் என்ற பெயரில் உடைகளில் மாற்றம் வந்தாலும், அலங்காரங்களில் மாற்றம் இல்லை. அந்த அலங்காரம் தான் அவர்களுக்கு அழகு!

    

அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழ்நிலையிலும், தலையை லேசாக வாரிக் கொண்டு, ஸ்டிக்கர் பொட்டைக் கூட ஒட்டி வைத்துக் கொண்டு தான் செல்வார்கள். ஆண்களை விட, தமிழக கிராமத்தில் உள்ள பெண்கள் நமது பண்பாட்டிற்கு முக்கியத்தவம் கொடுப்பார்கள். 


நெஞ்சை பதறவைக்கும் நடைமுறை...மன மேடையில் கூட வெள்ளை புடவைதான் அணியவேண்டும் : கலியுகத்திலும் கண்ணியமாக கடைப்பிடிக்கும் பெண்கள்! பதற வைக்கும் காரணம்! 


ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள், பொட்டு வைத்துக் கொள்வதில்லை. மூக்குத்தி அணிவதில்லை. காலில் கொலுசு போட்டுக் கொள்வதில்லை. சடை கூடப் பின்னுவதில்லை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பெண்கள் வாழும் ஊர் எது என்று அறிய ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருளி மற்றும் கோடங்கிபட்டியில் தான் இந்த அதிசய நடைமுறை பின்பற்றப் படுகிறது. ஊருக்குள் நுழைந்து பார்த்தால், பெண்கள் இந்த மாதிரித் தான் மூளிகளாகக் காட்சி அளிக்கிறார்கள். இந்தக் காட்சி நம் மனதை என்னவோ செய்தது. இதற்கு காரணம், இவர்கள் வணங்கும் தெய்வம் தான். அர்ச்சுனன் மகனான அரவாணைத் தான் இவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

    

இதை விட முக்கியமான விஷயத்தைக் கேட்டால், மூக்கில் விரலை வைத்து விடுவீர்கள். இந்த ஊரில் திருமணம் நடந்தால், மணமகள் வெள்ளைப் புடவையைக் கட்டிக் கொண்டு தான் மணவறையில் உட்கார வேண்டும். அப்போது தான் மணமகன் தாலி கட்டுவார். 


ஏன் இந்த நடைமுறை என்று, இந்த ஊர்ப் பெரியவரும், அரவாண் கோயிலை நிரிவாகித்து வரும் கிருஷ்ணன். “இந்த ஊர் நடைமுறை மகாபாரதப் புராணத்துடன் தொடர்பு கொண்டது.”“மகாபாரதப் போர் நடைபெறும் முன்பாக, போரின் நடைமுறை விதிகளின் படி ஒரு அரவாணியைப் பலி கொடுக்க வேண்டும். 


போர் நடைபெறுவதற்கு முன்பாக, இதைப்பற்றிய பேச்சு எழுந்ததும், அர்ச்சுனனின் மகனைப் பலி கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பெற்ற தகப்பனாகிய அர்ச்சுனன் மனம் கலங்கினான். அவன் மகன் திருமணமாகாத, ஆனால், அந்தக் கனவுகள் நிறைந்திருக்கும் ஒரு இளைஞன். வாழ்வின், இல்லற சுகத்தை அறியாமல், அவன் மடிவதை, அர்ச்சுனன் ஒத்துக் கொள்ளவில்லை. அவனைச் சமாதானப் படுத்தும் விதமாக, கிருஷ்ணன் ஒரு யோசனை சொன்னார்.

    

தானே பெண் அவதாரம் எடுத்து, அரவாணைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதன்படி, போருக்கு முன்னால், 

கிருஷ்ணன் பெண் உருவம் கொண்டு, அரவாணைத் திருமணம் செய்து கொண்டார். இல்லற சுகம் கண்ட அரவானின் தலை, மறுநாள் போர்க் களத்தில், வெட்டப்பட்டது. பெண் உருக் கொண்ட கிருஷ்ணன், தன் அலங்காரத்தை அகற்றினார். தன்னை மூளியாக்கிக் கொண்டார். 

    

இந்தப் புராணத்தில் பலியான அரவாணை, இந்த ஊர் மக்கள் தெய்வமாக வணங்குவதால், பெண்கள் மூளியாகத் தான் இருக்க வேண்டுமாம். ஏந்த ஆபரணங்களும் அணியக் கூடாதாம். அப்படி அணிந்தால், அது அவர்களது தெய்வத்திற்குப் பிடிக்காதாம். 


ஆதனால் தான், திருமணத்தின் போது கூட, மணப்பெண்ணிற்கு வெள்ளைச் சேலையை அணிவிக்கின்றனர். இதை மீறிய பலர், தெய்வ குற்றத்திற்கு ஆளாகி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருக்கிறார்கள், என்றும் கூறினார்கள்.

    

இவர்கள் வணங்கும் அரவாண், ஊருக்கு வெளியில், திறந்த வெளி மைதானத்தில இருக்கிறார். அது போர்க்களம் என்றும், அதில் பலியான அரவாண் தலை வெட்டப்பட்டதால், அவரது உருவமும், தலை வேறு, உடல் வேறாக இருக்கிறது. 


இவர் இருக்கும் கோயிலுக்கு மேற் கூரை கூட வேயக் கூடாதாம். அது அரவாணுக்குப் பிடிக்காதாம். இப்படியும் சில வித்தியாசமான தெய்வ வழிபாட்டைக் கொண்ட ஊர்களும் நம் நாட்டில், இருக்கத் தான் செய்கின்றன!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages