01.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

01.11.20

அருணா ரகுராமன்



31.10.20


நிலவு தூங்கும் நேரம் 

**************************

மௌனமான இரவு மயங்கிடும் உறவு /

நிலவு தூங்கும் நேரம் இது /

நினைவுகள் ஓயாமல் சத்தமிடும் மனது /

அகக் கடல் ஓய்வது இல்லை /

அந்தரங்கம் என்றும்  உறங்குவது இல்லை /


காதல் கொண்ட கண்கள் உறங்காவோ?

வெண்ணிலா வானில் வர இந்தப் /

பெண்ணிலா கண் புதைத்துச் சிவக்க /

எண்ணங்களின் ஊர்கோலத்தில் எழுந்த நினைவுகள்  /

மன்னவனின் மார்பில் தவழ்ந்த நேரங்கள் / 


நெஞ்சம் மணநாள் தேடும் வயது / 

மஞ்சத்தில் முள் உறுத்தும் பொழுது /

மனதில் முளைத்த அந்த ஏக்கம் /

மங்கையவளுக்கு இனி வருமோ தூக்கம் ?/

பக்கத்தில் அவனிருக்க இனிக்கும் இரவு /

பருவத்தில்  கொடிபடர உருவாகும் உறவு /

அருணா ரகுராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages