மலைச்சாமி
வரலாற்றில் இன்று 04.11.2020
November 4, 2020
என்றும்......
அன்புடன்.......
என் இனிய காலை வணக்கங்கள்....
நிகழ்வுகள்
1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1914 – பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966 – இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1979 – ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
1995 – இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1618 – அவுரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707)
1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)
1897 – ஜானகி அம்மாள், இந்திய தாவரவியலாளர் (இ. 1984)
1951 – திரையன் பாசேசுக்கு, ரோமானிய அரசியல்வாதி
1957 – டோனி அபோட், ஆத்திரேலிய அரசியல்வாதி, பிரதமர்
1972 – தபூ, இந்திய நடிகை
இறப்புகள்
1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழ் இதழாளர், எழுத்தாளர் (பி. 1906)
1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
1995 – இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
சிறப்பு நாள்
பனாமா – கொடி நாள்
ரஷ்யா – மக்கள் ஒற்றுமை நாள்
ஜானகி அம்மாள்: ஒரு தாவரவியல் மேதையின் வரலாறு!
இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர். அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது. அவர் கேரள மழைக் காடுகளில் இருந்து தேவையான மூலிகை, பொருளாதார மதிப்புள்ள பல்வேறு தாவரங்களைத் திரட்டினார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார்.
டாக்டர் ஜானகி அம்மாள், லண்டன் பாலஸ்டன் குன்று பகுதியில் இன்றும் பூக்கும் மாக்னோலியா மலர்கள் இவர் பெயரைச் சொல்லும். உலகம் தன்னைத்தான் அழித்துக்கொள்ள உலக யுத்தங்களில் மும்மரமாய் இருந்த காலங்களில் இந்த மாக்னோலியா தாவரங்களை இப்பகுதியில் நட்டுவைத்து அழகுபார்த்தவர் இவர்தான்.
இளமைப்பருவம்:
டாக்டர் ஜானகி அம்மாள் உலகின் தலை சிறந்த தாவரவியல் வல்லுநர் மற்றும் சைட்டோஜெனிசிஸ்ட். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். நவம்பர் 4, 1897-ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்த இடம் அந்தக்கால மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த தள்ளிசேரி என்ற ஊர். இவரது தந்தை திவான் பகதூர் இ.கே.கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள், பிறந்தது மொத்தம் மொத்தம் 19 பிள்ளைகள். இதில் பத்தாவதாக பிறந்தவர்தான் ஜானகி. இவரது தந்தையாகும் மிகப்பெரிய இயற்கை ஆர்வலர் ஆவார்.
தள்ளிசேரியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஜானகி சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். தாவரவியலில் தனது ஹார்னர்ஸ் டிகிரியை சென்னை மாநிலக் கல்லூரியில் 1921-ஆம் ஆண்டு முடித்தார்.
அதன் பிறகு சில காலம் சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணி செய்துவிட்டு அமெரிக்காவில் உள்ளா மிஷிகன் பல்கலையில் தனது முதுகலை படிப்பை 1925-இல் பார்பர் ஸ்காலர்ஷிப் உதவியுடன் முடித்தார். பின்னர் இந்தியா திரும்பி மீண்டும் சில காலம் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியப் பணி செய்துவிட்டு மீண்டும் மிஷிகன் சென்று தனது டி..எஸ்.சி படிப்பை 1931-இல் முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
பணிக்காலம்:
அவர் சைட்டோஜெனிசிஸ் துறையில் நிபுணராக இருந்தபடியால் கோயமுத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி மையத்தில் மரபியல் சார்ந்த ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது பாப்புவா நியூகினியாவில் விளையும் சக்காரம் அஃபிசியானரம் என்ற மிக இனிப்புள்ள கரும்பு வகையை இந்தியா ஜாவாவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சுதந்திர போராட்ட தலைவரும் பிரபல அறிஞருமான மதன் மோகன் மாளவியா இந்தியா சொந்தமாக தனது கரும்பு வகையை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுவே கோவை கரும்பு ஆராய்ச்சி மையம் உருவாக காரணமாயிற்று.
ஜானகியின் ஆய்விம் மூலம் இந்திய சூழலில் அபாரமாக வளாரும் சுவைமிக்க கலப்பின வகை கரும்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர் வேலை செய்த இடத்தில் நிலவிய ஆணாதிக்க, சாதி வெறி அரசியல் பிடிக்காமல் அங்கிருந்து அவர் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாயிற்று. அவருக்கு லண்டனில் உள்ள ஜான் இன்ஸ் ஹார்ட்டிகல்சுரல் இன்ஸ்டிடியூட்டில் உதவி சைட்டாலஜிஸ்ட்டாக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1940 -1945 ஆண்டுகளில் அவர் அங்குதான் பணிபுரிந்தார். பல நேரங்களில் குண்டுவீச்சுக்கு பயந்து இரவில் டேபிளுக்கு அடியில் பதுங்கியிருக்க வேண்டியதாயிற்று. பகலில் மறுபடி வேலைக்கு திரும்ப வேண்டும்.
அதன்பின்னரே அவர் லண்டன் வைஸ்லியில் உள்ள ராயல் ஹார்டிகல்சர் சொசைட்டியில் சைட்டாலஜிஸ்ட்டாக பணிபுரியும் வாய்பை பெற்றார். இந்த இடம் அழகான பலவிதமான மரங்களுக்கு பெயர்பெற்றது. ஆண்டுதோறும் மலர் கண்காட்சி இங்கு நடக்கும். ஜானகிக்கு அதிக அனுபவங்களை அள்ளிக்கொடுத்தது இங்கு வேலை செய்த காலம் என்று சொல்லலாம். 1945 ஆம் ஆண்டு சிடி டார்லிங்டன் என்ற உயிரியலாளருடன் சேர்ந்து “த குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்ட்டிவேட்டட் ப்ளாண்ட்ஸ்” என்ற நூலை எழுதினார்.
இங்கு பணிபுரியும்போதுதான் அவருக்கு மாக்னோலியா தாவரத்தின் சைட்டோஜெனிசிஸ் பற்றி ஆராயும் வாய்ப்பு கிடைத்தது. ஜானகி அம்மாள் மாக்னோலியா தாவரத்தை நட்டுவைத்த லண்டன் பாலஸ்டன் குன்று பகுதியில் இன்றும் ஒருவகை மாக்னோலியா மலருக்கு “மாக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா திரும்புதல்:
அதன் பின்னர், பண்டித ஜவஹர்லால் நேருவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் ஜானகி அம்மாள் இந்தியா திரும்பினார். பொட்டானிகல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டு லக்னோவிலும், ஜம்முவிலும் தாவரவியல் பூங்காக்கள் அமைய காரணமானார். கல்கத்தாவில் வசித்த புகழ்பெற்ற மரபியல் வல்லுநரான ஜேபி ஹால்டனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.
பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு முன்பாகவே பேராசிரியர் சி.வி ராமன் அவர்களிடம் நற்சான்றிதல் பெற்றிருந்த ஜானகி அம்மாள் இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு சிறிது காலமே அவர் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் த்ராம்பேயில் அட்டாமிக் ரிசர்ச் ஸ்டேஷனில் சிறிது காலம் பணி புரிந்தார். அவருக்கு 1977-இல் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அதன் பின்பு 1999 இல் அவரது பெயரால் இரு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பிறகு இவர் பல இந்துய அரசு பணிகளில் பல்வேறுநிலைகளில் பணிபுரிந்தார். அலகாபாத் நடுவண் தாவர ஆய்வகத் தலைமையேற்றார். ஜம்மு மண்டல ஆர்ராய்ச்சி அய்வகச் சிறப்பு அலுவலராக இருந்தார். சிறிது காலம் டிராம்பே அணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்தார். இறுதியாகச் சென்னைக்குத் திரும்பிவந்து 1970 நவம்பரில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மையத்தில் தகவுறு அறிவியலாளராக அமர்ந்தார். அப்போது சென்னைக்கு அருகில் இருந்த அம்மையத்தின் மதுரவாயல் கள ஆய்வகத்தில் இறப்புவரை பணிபுரிந்தார். இவர் 1984இல் இயற்கை எய்தினார்.
ஜானகி அம்மாள் 1935இல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1957இல் இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 1956இல் மிச்சிகான் பல்கலைக்கழகம் தகைமை LL.D. பட்டம் வழங்கி பெருமை தந்தது. இந்திய அரசு 1977இல் இவருக்குப் பத்மசிறி பட்டம் வழங்கியது. இந்திய அரசி சுற்றுச்சூழல், கானியல் அமைச்சகம் 2000ல் இவரது பெயரால் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருதை நிறுவியது.
உயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த பணிகளுக்கான வளர்ச்சியைத் தூண்டவும் அப்புலத்தில் இளம்மாணவரையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்தவும் 1999இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது. இரு விருதுகளில் ஒன்று நிலைத்திணையியல் (தாவரவியல்) துறையில் வகைப்பாட்டியலில் சிறந்த பங்களித்தவர்களுக்கும் மற்றொன்று விலங்கியல் வகைப்பட்டியல் அல்லது நுண்ணுயிரியலில் சிறந்த பங்களிப்பு நல்கியவர்களூக்கும் வழங்கப்படும். இவ்விரண்டும் முறையே ஈ.கே. ஜனகி அம்மாள் நிலைத்தினை வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் ஈ.கே. ஜனகி அம்மாள் விலங்கியல் வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் வழங்கப்படுகின்றன.
ஜானகி அம்மாள் 1984-ஆம் ஆண்டு மறைந்தார். ஆனாலும் கலப்பின கரும்பு தொடங்கி அவரது இனிப்பான படைப்புகள் அனைத்தும் இன்னும் அவரது பெயரை சொல்லியவண்ணம் இருக்கின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக