10.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 11 நவம்பர், 2020

10.11.20



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு




பெரியமனசுக்காரன்(சிறுகதை)


பிச்சைமுத்துபொண்டாட்டிய நேத்து ராத்திரிலைருந்து காணோம்


ஊரே தெறண்டு அவன் வீட்டுலதானிருந்தது துக்கமா


ஏம்பா ஏதாவது சொல்லிட்டுஇருந்தாளா ந்னு விசாரிச்சிக்கிட்டு இருந்தாக


அவ அம்மாவீட்டுக்கு ஆள் போய்விசாரிச்சிட்டு வந்தாச்சு


அங்குணக்குள்ள வரலயாம். அவுக அம்மாபொலம்ப ஆரம்பிச்சிட்டா


என்னமோ ஏதோன்னு ஆனா ஆருக்கும் தெரியல, என்ன ஆச்சுன்னு


பிச்சமுத்து பொண்டாட்டி சரசு மாநிறம்தான் ஆனா பாக்குறமாதிரி இருப்பா, எதித்தாப்புல போறவுக ஒருதடவ திரும்பிப்பாக்குற லச்சணம்


ஆனா பிச்சமுத்து கொஞ்சம் சுமார்தான் நோஞ்சானா இருப்பான்


ரெண்டு ஆம்பள புள்ளைங்க அவுகளுக்கு லச்சணமா, எப்பப் பாத்தாலும் சண்டதான் ரெண்டுபேருக்கும்.அடிக்கடிகோவிச்சிக்கிட்டு அம்மா ஊருக்குப்போய்டுவா.இவந்தான் கிடந்து பொலம்பிட்டுகிடப்பான் அப்புறமாபோய் கைல கால்ல விழுந்து கூட்டியாருவான்


அதுல ரெண்டுபொம்பளைக சொன்னாக மேலத்தெரு கணேசன் கூட அங்கங்க பேசிகிட்டு இருப்பான்னு. அதையும் போய் ரெண்டுபேரு அவன் இருக்கானான்னு.பாத்துட்டு வந்துசொன்னாக ரகசியமா அவனையும்காணாம்னு.எல்லாரும் குசு குசுன்னுபேசிகிட்டாக அவனோட போயிருக்கலாம்னு.


ஆனா பச்சமுத்து சொல்லிக்கிட்டு இருந்தான் அவ அப்படியில்லன்னு


ஆனா யாருக்கும் உறுதியாத்தெரியல கணேசன் வீட்டுலகேட்டா


அவன் பழனிக்கு மொட்டபோடப்போயிருகிறதா சொன்னாக


ஆனா தனியாப்போயிருக்கவே சந்தேகம் .


அன்னிக்கிப்பொழுதுசாயிறவரஒன்னும் துப்புக்கிடைக்கல ஆறுதல்சொல்லிட்டு தூங்கப்போயிட்டாகபச்சமுத்துமட்டும் தூங்காம தெருவையே பாத்துக்கிட்டு இருந்தான் பிள்ளைகளை மடில போட்டுக்கிட்டு பொலம்பிட்டு இருந்தான்.


போறப்ப ஒருத்திசொல்லிட்டுப்போனா இந்தபுள்ளங்கள


எப்புடித்தான் விட்டுட்டுப்போறதுக்கு மனசு வந்துச்சோன்னு பக்கத்து வீட்டு அமுதாக்கா புள்ளைகளுக்குசாப்பாடுகுடுத்துச்சு. அவன் கண்ணீரோட அக்கா உங்களுக்கு நல்ல மனசுன்னான்


காலையில கணேசன் மொட்டை போட்டுவந்திருந்தான் எல்லாருக்கும் பஞ்சாமிர்தமும் துண்ணூரும் குடுத்தான்.பழனிக்குப்போயிருந்தேன் திடீருண்ணு கிளம்புனதுனாலஆர்கிட்டயும் சொல்லிட்டுப்போகமுடியல அந்தப்புள்ளையகாணாமா பாவம் இப்புடியா புள்ளைங்களை விட்டுட்டுபோவான்னு ஆறுதல் சொன்னான்.


இப்போ எல்லாரும் கொழம்பிட்டாக . ஒன்னும் புரியலஇதுக்குநடுவுல நேத்து டவுனுக்குள்ள அவளப்பாத்ததக சின்னச்சாமி சொன்னாரு அந்தபுள்ளமாதிரிதான் இருந்துச்சுன்னு.ஒருவாரமாயிபோச்சு ஒன்னும் துப்புக்கிடைக்கல


அன்னிக்கி வெள்ளிக்கிழம சேவாசங்கத்து ஆளு ஒருத்தர் பிச்சமுத்து


வீடுதேடிவந்தாரு சரஸ்வதி வீடெங்க இருக்குன்னு திரும்ப ஊரு கூடிருச்சு என்னா விசயம்ன்னுசரஸ்வதி பெரியாஸ்பத்திரில இருக்கா தலையில அடிபட்டு நிதானமில்லாம இருந்தா இன்னிக்கி கண்ணு முழிச்சவன்ன அய்யோ எம்புள்ளகள எங்கன்னா அப்புறம் நிதானமா விசாரிச்சப்போ வெவரம் சொல்லிருக்கா... அதான் தகவல் சொல்ல வந்தேன் னார்


எல்ல்லாருக்கும் ஏதோபுரிஞ்சமாதிரியும்புரியாதமாதிரியும் இருந்துச்சு அவருகூட பிச்சமுத்துவும் புள்ளைங்களைக்கூட்டிட்டுபாக்கப்போனான் அமுதாக்க செலவுக்கு இருக்கட்டுனு காசகைல திணிச்சுவிட்டா கூட ஆறுமுகமும் தொணைக்கிபோனான்பெரியாசுப்பத்திரில படுத்திருந்தா சரசு புள்ளங்களைகண்டதும் கண்ணீர்வழிஞ்சது அவ கண்ணுல


எப்படியாச்சுன்னு கேட்டான்தெரியல கம்மாக்கரையில ஆரோ மண்டையில அடிச்சமாதிரிஇருந்துச்சு முளிச்சிப்பாத்தா இங்க இருக்கேன்னாரவுண்டுக்குவந்தடாக்குட்டருஇவனத்தனியாக்கூட்டிடுப்போனார்அவங்களை மண்டையில காயப்படுத்தி மயக்கமாக்கி


செய்யக்கூடாததை ஒன்னுக்கு மேல் பட்டோர் செஞ்சிருக்காங்க


கேஸ் குடுக்குறீங்களா ந்னு கேட்டார் இவனக் கேட்டார்.


அவளுக்கு அது தெரியுமான்னு டாக்டர் தெரியாதுன்னார்


எனக்கும் அது தெரியாத விசயமாகவே இருக்கட்டும் னான்


சரசுகேட்டா டாக்குட்டரு என்னசொன்னார்னு இவன் சொன்னான்


சீக்கிரம் சரியாயிடுமாம் உன்ன நல்லாப்பாத்துக்க சொன்னாருன்னு


சொல்லும்போது அவன்கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சிச்சு


மாமா கவலைப்படாத நான் சரியாயிடுவேன்னா பிள்ளைங்கள அணைச்சிக்கிட்டு கண்ணீருடன்...........அப்ப அவகண்ணுலயும் நீர் வழிஞ்சது.........


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages