12.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 12 நவம்பர், 2020

12.11.20



நீரை.பாத்திமா



பறந்து வெளிவந்த கூகையின்  

பறக்கும் திசைகளை 

ஒரு ஆதவனை போல்

வெளிச்ச பிரதேசமாக்கும் 

நிலாவை மட்டுமே 

உணர்ந்து கொள்கிறது கூகை!

சூரியன் எல்லா உயிர்களுக்கும்

உணவளிப்பது உண்மையெனில்

இராக்குருவிகளுக்கு நிலவும் விண்மீன்களும்

ஊட்டிவிடுவதும் உண்மைதான்!

பகல் குருவிகளை பழக்கப்படுத்திக்கொண்ட நாம்

ஏனோ இராத்திரி நேரத்து பறவைகளின் அழகினைக்கூட உணர்ந்ததே இல்லை!

கிளியும் குருவியும் வல்லூறும் கழுகும் தெரிந்த நம் கண்களுக்கு

ஆந்தைகள் மறைந்தே வாழ்கிறது!

இவை இருட்டு குகைககளை வெளிச்சமாக்கி கொள்ளும் முரண்களின் தொகுதிகள்!

சிந்தனைக்குள் தூக்க வெளிகளின் 

சற்று கலைந்த களைத்த கண்களின் சிறு விழிப்பில் பார்த்துவிட நினைத்தாலும் 

ஏனோ இரவின் முடிச்சுகளிலேயே விழிப்பும் வருகிறது விருப்பம் நிறைவேறாமலே!


நீரை.பாத்திமா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages